ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு

Tuesday, 30 August 2016

மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.....விரிவான விவரங்கள் ...

மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உண்மையைத் தேடிய ஆசிரியர் - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்

உண்மையைத் தேடிய ஆசிரியர்
பேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர், குடியரசுத் தலைவர், நிர்வாகி என்ற பன்முகத் தன்மைகளைத் தாண்டி ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர் என்று மதிக்கப்படுபவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். “உண்மையாக வாழ்தல் - எளிமையாக வாழ்தல் - களங்கமற்று இருத்தல் - உள்ளங்கனிந்திருத்தல் - மகிழ்வுடனிருத்தல் - கவலையையும் அபாயத்தையும் எதிர்த்து வாழ்தல் - வாழ்க்கையை நேசித்தல் - இறப்புக்கு அஞ்சாதிருத்தல் - அழகுக்காக உழைத்தல் - இறப்பின் துயர்களால் சூழப்படாதிருத்தல் - உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இவரைப் போன்று வாழ்ந்தவர்களும் இல்லை. வாழக் கற்றுத் தந்தவர்களும் இல்லை” என்று மகாத்மா காந்தி இவரைப் பற்றிக் கூறினார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து சண்முகநாதன் விடுவிப்பு புதிய அமைச்சர் பாண்டியராஜன் 2 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் பாண்டியராஜன் தமிழக அமைச்சரவையில் இருந்து சண்முகநாதன் விடுவிக்கப்பட்டு உள்ளார். புதிய அமைச்சராக கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக கவர்னரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Monday, 29 August 2016

டி.என்.பி.எஸ்.சி., ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு
உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர்
பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படு கின்றனர். மத்திய அரசில் புதிய ஓய்வூதிய திட்டம், 2004 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

Sunday, 28 August 2016

புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்
புதிய கல்விக்கொள்கை பற்றிய மத்திய அரசின் அறிக்கையை இணையதளத்தில் தமிழில் படிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இதுகுறித்து ‘தினத்தந்தி’, ‘டி.டி.நெக்ஸ்ட்’ பத்திரிகைகளிடம் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

Saturday, 27 August 2016

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயிலில் 41 இளநிலை பொறியாளர் பணி

சென்னை மெட்ரோ ரயிலில் 41 இளநிலை பொறியாளர் பணி
சென்னை மெட்ரோ ரயிலில் 2016-ஆம் ஆண்டிற்கான 41 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள் ...

TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15 முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டன.

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் 29-ல் வெளியீடு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் 29-ல் வெளியீடு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மே, ஜுன் மாதங்களில் நடைபெற்ற தொலைதூரக் கல்வி நிறுவன இளங்கலை, முதுகலை படிப்புகள், பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ் படிப்புகள் மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்பு களுக்கான தேர்வுகளின் முடிவுகள் 29-ம் தேதி இரவு 8 மணிக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப் படும்.

Friday, 26 August 2016

HSE SEPTEMBER 2016 | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிளஸ்டூ தேர்வு எழுத தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள Government Examinations Service centres -க்கு சென்று 24.08.2016 ( புதன்கிழமை) முதல் 31.08.2016 (புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது .

HSE September 2016 - Private Candidate Instruction for Online Registration - HSE September 2016 - List of Nodal Centres- For Private Candidates- Online Registration - HSE September 2016 - Examination Time Table -2016 செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிளஸ்டூ தேர்வு எழுத தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள Government Examinations Service centres -க்கு சென்று 24.08.2016 ( புதன்கிழமை) முதல் 31.08.2016 (புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது .

மனம் என்னும் மாபெரும் சக்தி! டாக்டர் பி. கிருஷ்ணகுமார்

மனம் என்னும் மாபெரும் சக்தி! டாக்டர் பி. கிருஷ்ணகுமார்
அனைத்து விதமான செயல்களுக் கும் தேவையான எண்ணி லடங்கா ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது மனித மனம். அதனா லேயே எல்லாவற்றுக்கும் அடிப்படை மனம் என்கிறோம். ஒவ்வொரு தனி நபருக்குமான தகவல் செயல்பாடு, நினைவக மேம்பாடு, ஆக்கப்பூர்வ சிந்தனை, சிக்கல்களுக்கான தீர்வு மற்றும் தொடர்ச்சியான கற்றல் என அனைத்து நிலைகளிலும் மனமே பிரதானமாக செயல்படுகின்றது. அப்படிப்பட்ட இந்த மனதிற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலையும், மலர்ச்சி யையும் ஏற்படுத்துவதற்கான செயல் பாடுகளைச் சொல்வதே “மைக்கேல் ஜே ஜெல்ப்” மற்றும் “கெல்லி ஹோவெல்” ஆகியோரால் எழுதப்பட்ட “பிரைன் பவர்” என்ற இந்த புத்தகம். வயதிற்கு ஏற்ப வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமது மனதின் மேம்பாட்டிற்கான வழி முறைகள் எளிதாகக் கூறப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

ஒரே நாளில் குறுக்கிடும் அரசுத் துறைத் தேர்வுகள் தேதியை மாற்றி அறிவிக்க வலியுறுத்தல்

ஒரே நாளில் குறுக்கிடும் அரசுத் துறைத் தேர்வுகள் தேதியை மாற்றி அறிவிக்க வலியுறுத்தல்
வரும் 27, 28 ஆகிய தேதிகளில் அர சின் 2 துறைகள் சார்பில் போட்டித் தேர்வுகளும், 28-ம் தேதி தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சர் தேர்வும் நடைபெற வுள்ளன. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளுக்கு விண்ணப் பித்தவர்கள், தேர்வு தேதிகள் குறுக்கிடுவதால் ஏதாவது ஒரு தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகள்

ஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகள்
ஐ.டி. துறையில் பணி நெருக்கடியால் ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனிக்க முடியாத பரிதாப நிலை ஆகிய வற்றின் காரணமாக, பெண் பொறியியல் பட்டதாரிகளின் கவனம் தற்போது ஆசிரியர் பணியின் மீது திரும்பத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்களில் தாங்கள் பார்க்கும் வேலையை உதறிவிட்டு அவர்கள் பி.எட். படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். பொறியியல் பட்டதாரிகள் பி.எட். படிப்பில் சேரும் புதிய முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

சுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர்கள் சேரலாம் அதிகாரி தகவல்

சுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர்கள் சேரலாம் அதிகாரி தகவல்
பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு சுயநிதி பி.எட். கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் உடனடியாக சேரலாம் என்றும், அடுத்த ஆண்டுதான் அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும், 703 சுயநிதி பி.எட். கல்லூரிகளும் என மொத்தம் 724 பி.எட். கல்லூரிகள் உள்ளன. சுயநிதி பி.எட். கல்லூரிகளில் 2 வருட பி.எட். படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தந்த கல்லூரி நிர்வாகமே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடந்து வருகிறது.

Thursday, 25 August 2016

ரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை,. முழூநீளப்பதிவு.இலவச சிம்மை பெற முழுவதுமாக படியுங்கள் ..

ரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை,. முழூநீளப்பதிவு.இலவச சிம்மை பெற முழுவதுமாக படியுங்கள் ..
அறிமுகம் 4ஜி VO-LTE
4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளது. ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களும் இந்த LTE தொழில்நுட்பத்தில்தான் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் LTE ன் குறை என்னவெனில் வாய்ஸ் சப்போர்ட் இல்லாதது, எனவே 4G டேட்டாவுக்கும். வாய்ஸ் சப்போர்ட்க்கு 3G தொழில்நுட்பத்தையும் அந்த நிறுவனங்கள் பயன்படுத்தின. எனவே ரிலையன்ஸ் நிறுவனம் VO- LTE அதாவது Voice Over Long Term Evaluation தொழில்நுட்பத்தை கையில் எடுத்தது. இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் பேச முடியும், 

அரசு இசைக்கல்லூரி, கவின் கலைக் கல்லூரிகள், மாமல்ல புரம் சிற்பக் கல்லூரியில் ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இசை, கவின்கலை, சிற்ப கல்லூரி ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்படும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதி
அரசு இசைக்கல்லூரி, கவின் கலைக் கல்லூரிகள், மாமல்ல புரம் சிற்பக் கல்லூரியில் ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் அவர் அறிவித்த தாவது:

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை செப். இறுதி வரை விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை செப். இறுதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ரா,அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசியில் ஞாயிறு முழுவதும் இலவசமாக பேசும் திட்டம் அறிமுகம் தொடர்ந்து 34 மணி நேரம் சலுகை

பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசியில் ஞாயிறு முழுவதும் இலவசமாக பேசும் திட்டம் அறிமுகம் தொடர்ந்து 34 மணி நேரம் சலுகை
பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசியில் இரவு நேர இலவச அழைப்புகளை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் இலவசமாக பேசும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 34 மணி நேரம் இலவசமாக பேச முடியும். இது குறித்து தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல். முதன்மை பொதுமேலாளர் என்.பூங்குழலி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிக்கல்வி துறை, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 காலாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 காலாண்டு தேர்வுகள் அடுத்த மாதம் 8-ந் தேதி தொடங்குகிறது
பள்ளிக்கல்வி இயக்குனரகம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 காலாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு அவசியம் இல்லை ஐகோர்ட்டு தீர்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு 2011-ம் ஆண்டு ஒரு அரசாணை வெளியிட்டது. அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையின பள்ளிகள் உள்பட அனைத்துவகை பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Wednesday, 24 August 2016

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வு முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மே 1, ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. அவற்றின் முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியிடப் பட்டன.

4 ஆண்டு பி.ஏ.,பி.எட்., பி.எஸ்சி.,பி.எட். பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல் கல்வியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும் | சென்னை, கோவையில் அரசு கலைக் கல்லூரி | சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம் சென்னை, கோவையில் அரசு கலைக் கல்லூரி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை பெரும்பாக்கம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் தலா ரூ.8 கோடி செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பேரவை விதி 110-ன் கீழ் உயர்கல்வித் துறை தொடர்பான சில அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அவர் கூறியதாவது: பொறியியல் மாணவர்களை இந்திய பொறியியல் பணி (Indian Engineering Service) தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யும் வகையில் சென்னை, தருமபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

ஓவியம், தையல், இசை, வேளாண்மை உள்ளிட்ட 7 வகையான படிப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.

ஓவியம், தையல் உள்ளிட்ட 7 வகை படிப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்
ஓவியம், தையல், இசை, வேளாண்மை உள்ளிட்ட 7 வகையான படிப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. தையல், ஓவியம் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தேர்வுத்துறை தொழில்நுட்ப தேர்வுகளையும் வருடந்தோறும் சான்றிதழ் படிப்பு தேர்வுகளையும் நடத்துகிறது. இந்த தேர்வுகள் தனியாக படித்து எழுதுபவர்களுக்கு தான் நடத்தப்படுகிறது. இசை, ஓவியம், நடனம், வேளாண்மை, தையல், கைத்தறி, அச்சிடுதல் ஆகிய 7 பாடங்களுக்கு சான்றிதழ் படிப்புக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன் ‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம் ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன் ‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம் ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன் ‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உபயோகம் குறித்து ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம் அளிக் கப்பட்டது. ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பாட திட்டத்தில் சிலவற்றை தேர்ந்தெடுத்து நவீன தொழில்நுட்பம் மூலம் மாணவ-மாணவிகள் படிக்க செல்போன் ‘அப்ளிகேஷன்’ ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை தயார் செய்துள்ளது.

மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்ய ‘பயோ-மெட்ரிக்’ கருவி பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அறிமுகம்: மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்ய ‘பயோ-மெட்ரிக்’ கருவி சோதனை அடிப்படையில் 4 பள்ளிகளில் செயல்பாட்டில் உள்ளது
மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்ய ‘பயோ-மெட்ரிக்’ கருவி பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும் பள்ளிக்கல்வி துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்ய ‘பயோ-மெட்ரிக்’ கருவியை முதல் முறையாக செயல்படுத்த உள்ளனர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவுசெய்ய பயோ-மெட்ரிக் கருவி அறிமுகம்: நல்லாசிரியர் விருதுக்கான பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்வு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவுசெய்ய பயோ-மெட்ரிக் கருவி அறிமுகம்: நல்லாசிரியர் விருதுக்கான பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்வு ஜெயலலிதா அறிவிப்பு
ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவு செய்ய பயோ-மெட்ரிக் கருவி அறிமுகம் செய்யப்படும் என்றும், நல்லாசிரியர் விருதுடன் வழங்கப்படும் ரொக்கப்பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். நேற்று தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவை விதி எண் 110-ன்கீழ் பள்ளி கல்வித்துறை தொடர்பாக 12 அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 5 புதிய தொடக்கப் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
* நடப்பாண்டில் 5 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங் கப்படும். 3 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவுசெய்ய பயோ-மெட்ரிக் கருவி அறிமுகம்: நல்லாசிரியர் விருதுக்கான பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்வு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவுசெய்ய பயோ-மெட்ரிக் கருவி அறிமுகம்: நல்லாசிரியர் விருதுக்கான பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்வு ஜெயலலிதா அறிவிப்பு
ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவு செய்ய பயோ-மெட்ரிக் கருவி அறிமுகம் செய்யப்படும் என்றும், நல்லாசிரியர் விருதுடன் வழங்கப்படும் ரொக்கப்பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். நேற்று தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவை விதி எண் 110-ன்கீழ் பள்ளி கல்வித்துறை தொடர்பாக 12 அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 5 புதிய தொடக்கப் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
* நடப்பாண்டில் 5 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங் கப்படும். 3 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

Tuesday, 23 August 2016

சுதந்திரதின இருவார விழா நிறைவையொட்டி காலை 11 மணிக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் கூட்டாக தேசிய கீதம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரதின இருவார விழா நிறைவையொட்டி மாணவ-மாணவிகள் இன்று காலை கூட்டாக தேசிய கீதம் பாட ஏற்பாடு
சுதந்திரதின இருவார விழா நிறைவையொட்டி அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் இன்று காலை கூட்டாக தேசிய கீதம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவார விழா நாடு முழுவதும் கடந்த 15-ந்தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு 9-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை சுதந்திர தின இரு வார விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தது.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வின் மறுமதிப்பீட்டு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு www.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம்.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வின் மறுமதிப்பீட்டு முடிவு இன்று வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு கடந்த ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடைபெற்றது.

Monday, 22 August 2016

தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016

தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016

மின் வாரிய உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.

மின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.
மின் வாரியம், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்
பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். இதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். மருத்துவ நுழைவுத்தேர்வு சமீபத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, ‘நீட்’ எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன. இந்ததேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள் ஓரளவு பங்கேற்றனர். மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்களில் வெகுசிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.

tnpsc குரூப்-2 மெயின்தேர்வை 9,860 பட்டதாரிகள் எழுதினார்கள்

குரூப்-2 மெயின்தேர்வை 9,860 பட்டதாரிகள் எழுதினார்கள் 20 சதவீதம் பேர் வரவில்லை 
எழும்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரிகள் குரூப்-2 மெயின் தேர்வை எழுதியபோது எடுத்த படம். குரூப்-2 மெயின் தேர்வை 9 ஆயிரத்து 860 பட்டதாரிகள் எழுதினார்கள். 20 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 1,241 காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நபர்களை தேர்வுசெய்யும் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது.

Sunday, 21 August 2016

இலவச 4ஜி சேவை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம்

இலவச 4ஜி சேவை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம்
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தியதை அடுத்து 4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச மாக 90 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு
தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களில் கடந்த ஆண்டு வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளாலேயே நிரப்பப் பட்டு வந்தன. ஒவ்வொரு கல்லூரி யிலும் 15 சதவீத இடங்கள் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வு மூலமாக நிரப்பப்படும். இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழை வுத் தேர்வு என்ற புதிய நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப் படையில் மருத்துவ, பல் மருத் துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சுமார் 3,500 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன.

இணையதளம் மூலம் கலந்தாய்வு: 1,277 ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

இணையதளம் மூலம் கலந்தாய்வு: 1,277 ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு 
தமிழக முதல்-அமைச்சர் ஆணையின்படி 2016-17-ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.

Saturday, 20 August 2016

2016 - DISTRICT TRANSFER COUNSELLING - BT / SGT / PET SENIORITY LIST - REVISED

2016 - DISTRICT TRANSFER COUNSELLING - BT / SGT / PET SENIORITY LIST - REVISED

tnpsc குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணை-அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பணி ஆணை வழங்கினார்.

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணை சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 59 பேர் தேர்வு
மனிதநேய மையத்தில் படித்து குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பணி ஆணை பெற்ற காதல் தம்பதி சுரேஷ், வாசுகி ஆகியோரை படத்தில் காணலாம். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பணி ஆணை வழங்கினார். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தலைவர் அருள்மொழி வழங்கினார். இவர்களில் 59 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் ஆவார்கள். இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

Friday, 19 August 2016

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 சிறப்பு அதிகாரி பணி: விண்ணப்பிக்க அழைப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 சிறப்பு அதிகாரி பணி: விண்ணப்பிக்க அழைப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2016-ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள 191 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.pnbindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு

பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு
பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழகஅரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

TEACHERS RECRUITMENT 2016 | போட்டித்தேர்வு மூலம் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது.

8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
ஆர்மி பப்ளிக் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 8 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Army Public School (AWES APS) பணியிடம்: இந்தியா முழுவதும் மொத்த காலியிடங்கள்: 8,000 பணி: PGT TGT PRT ஆசிரியர்

உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.

உதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., வெளியீடு
இன்ஜி., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, அக்., 22ல் எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

எம்பிபிஎஸ் படிப்புக்கு செப்டம்பரில் 2-ம் கட்ட கலந்தாய்வு

எம்பிபிஎஸ் படிப்புக்கு செப்டம்பரில் 2-ம் கட்ட கலந்தாய்வு
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) கல்லூரிகளில் 122 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்கள் மற்றும் 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 970 பிடிஎஸ் இடங்கள் மீதம் உள்ளன. இதற் கான 2-ம் கட்ட கலந்தாய்வை செப்டம்பர் 20-க்குப் பிறகு நடத்த திட்டமிட்டுள்ளது.

Thursday, 18 August 2016

தேசிய திறனறி தேர்வுக்கு ஆகஸ்டு 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்
பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை வழங்கும், 'தேசிய திறனறி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறி தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது;

Tuesday, 16 August 2016

CBSE – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST NEET (UG) - 2016 RESULTS | மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன.

மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்ப, மே 1-இல் முதல்கட்டமாகவும், ஜூலை 24-இல் தேர்வை 2-ஆம் கட்டமாகவும் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

tnpsc | பொது அறிவு தகவல்கள்

1. வாண்டீ டீலா அவர்களின் கூற்றுப் படி அடிப்படையில் முன்னேற்றம் என்பது.
அ) தரமாற்றம்
ஆ) அளவு மாற்றம்
இ) வேறுபட்ட மாற்றம்
ஈ) மேற்கூறிய அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : அ) தரமாற்றம்

8822 வங்கி அதிகாரி பணி – ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு | 8822 புரொபேஷனரி அதிகாரி,மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐபிபிஎஸ்.

8822 வங்கி அதிகாரி பணி – ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கிபோன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது. இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 8822 புரொபேஷனரி அதிகாரி,மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.