Thursday, 24 May 2012

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 86.7 சதவீதம் பேர் தேர்ச்சி.

பிளஸ் 2 பொதுத்தேர்வை இந்த ஆண்டு பள்ளிகளின் மூலமாக 7 லட்சத்து 56 ஆயிரத்து 464 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 594 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். இவர்களில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 916 பேர் மாணவியர். 2 லட்சத்து 91 ஆயிரத்து 678 பேர் மாணவர்கள். 1 லட்சத்து 870 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

முதலிடம்:

நாமக்கல், கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சுஷ்மிதா 1,189 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழ் 194

ஆங்கிலம் 195

இயற்பியல் 200

கணிதம் 200

வேதியியல் 200

உயிரியல் 200

மொத்தம் 1,189

  

இரண்டாமிடம் :

நாமக்கல், கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி

மாணவி டி.கார்த்திகா,

தமிழ் 197

ஆங்கிலம் 193

இயற்பியல் 198

கணிதம் 200

வேதியியல் 200

உயிரியல் 200

மொத்தம் 1,188

நாமக்கல் கிரீன்பார்க் மேல்நிலைப் பள்ளி  மாணவர் பி. அசோக்குமார்,

  தமிழ் 196

 ஆங்கிலம் 192

 இயற்பியல் 200

 கணிதம் 200

 வேதியியல் 200

 உயிரியல் 200

 மொத்தம் 1,188

 

பாண்டமங்கலம் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர் சி.மணிகண்டன்

  தமிழ் 196

 ஆங்கிலம் 193

 இயற்பியல் 199

 கணிதம் 200

 வேதியியல் 200

 உயிரியல் 200

 மொத்தம் 1,188

 

ஆகியோர் 1,200-க்கு 1,188 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளனர்.

 

மூன்றாமிடம் :

 

திருசெங்கோடு வித்யா விகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.மகேஸ்வரி,

 தமிழ் 196

 ஆங்கிலம் 191

 இயற்பியல் 200

 கணிதம் 200

 வேதியியல் 200

 உயிரியல் 200

 மொத்தம் 1,187

 

நாமக்கல் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி பி.பிரபா சங்கரி

 தமிழ் 197

 ஆங்கிலம் 194

 இயற்பியல் 196

 கணிதம் 200

 வேதியியல் 200

 உயிரியல் 200

 மொத்தம் 1,187

 

ஆகியோர் 1,187 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள அனைவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் சுஷ்மிதா, டி.கார்த்திகா, பி.பிரபா சங்கரி ஆகிய மாணவிகள் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

 1,190 மதிப்பெண் பெற்றவர்கள்: முதல் பாடமாக தமிழைத் தவிர பிற மொழியை எடுத்த மாணவ, மாணவியரில் புதுச்சேரியைச் சேர்ந்த செயின்ட் ஜோசப் ஆஃப் குளூனி மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வப்னா, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.பவித்ரா ஆகியோர் தலா 1,190 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த மாணவிகள் முறையே பிரெஞ்சு, சம்ஸ்கிருதத்தை முதல் பாடமாகத் தேர்வு செய்ததால் அவர்களுக்கு மாநில அளவிலான ரேங்க் கிடைக்கவில்லை.

No comments:

TRB