Friday, 18 May 2012

இளநிலை வரைவு அதிகாரி பணி இடம்: பதிவுமூப்பு கட் ஆப் தேதி வெளியீடு 21-ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரைவு அதிகாரி (ஜுனியர் டிராப்டிங் ஆபிசர்) பணி இடங்களுக்கான பதிவுமூப்பு கட் ஆப் தேதி வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு கல்வித்தகுதி சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ (டி.சி.இ.) படிப்பு ஆகும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. மற்ற வகுப்பினருக்கு வயது வரம்பு கிடையாது. பதிவுமூப்பு விவரம் இடஒதுக்கீட்டு பிரிவு வாரியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

 

எஸ்.டி. - 27.4.2000

 

எஸ்.சி. (பொது) -13.8.1993

 

எஸ்.சி. (பெண்கள்) - 2.7.1996

 

எஸ்.சி. (அருந்ததியர்) - 2.7.1996

 

எஸ்.சி. (அருந்ததியர்-பெண்கள்) - 11.1.2008

 

எம்.பி.சி. (பொது) - 24.8.1992

 

எம்.பி.சி. (பெண்கள்) - 21.8.1997

 

பி.சி. (பொது) - 26.11.1987

 

பி.சி. (முஸ்லீம்-பொது) - 8.6.1989

 

பொதுப்பிரிவினர் - 8.6.1990

 

மேற்குறிப்பிட்ட பதிவுமூப்பு உடைய பதிவுதாரர்கள் தங்கள் பதிவுமூப்பை 21-ந் தேதிக்குள் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி (தொழில்நுட்பம்) அலுவலகத்திற்கு வந்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்திலும் (www.tnvelaivaaippu.gov.in/Empowerபதிவுமூப்பு விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

TRB