Saturday, 26 May 2012

25 தனியார் பதிப்பகங்களுக்கு பொதுக்கல்வி வாரியம் அனுமதி

தனியார் பள்ளிகளுக்கு, புத்தகங்களை விற்பனை செய்ய, 25 பதிப்பகங்களுக்கு, மாநில பொதுக்கல்வி வாரியம் அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்களை, தமிழக அரசே இலவசமாக வழங்குகிறது. தனியார் பள்ளிகள் விரும்பினால், தமிழக அரசின் பாடப் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில், தற்போதுள்ள பாடத்திட்டத்தின்படி, தனியார் பதிப்பகங்கள் தயாரிக்கும் புத்தகங்களுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி, புத்தகங்களை விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இதன்படி, தனியார் பதிப்பகங்களிடம் இருந்து விண்ணப்பங்களும், மாதிரி பாடப் புத்தகங்களும் வரவேற்கப்பட்டு, அவற்றை பள்ளிக் கல்வித் துறை பரிசீலனை செய்து, தகுதியான பதிப்பகங்களை தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட, 25 பதிப்பகங்களுக்கு அனுமதி பெறும் வகையில், அவை பொதுக்கல்வி வாரியக் குழுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் வைக்கப்பட்டது. குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், 25 பதிப்பகங்களுக்கும் அனுமதி அளித்தனர். ஓரியண்ட் பிளாக் சுவான், மேக்மில்லன், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

No comments:

TRB