Sunday, 13 May 2012

அரசு நிர்ணயித்துள்ள தேதிக்கு முன்பே வெளியான அறிவிப்பின்படி தேர்ந்து எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தகுதித் தேர்வு எழுத அரசு நிர்ணயித்துள்ள தேதிக்கு முன்பே வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் பணியில் சேர்ந்த 25 ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை' என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


மதுரை மாட்டுத்தாவணி பிரஸ் காலனியை சேர்ந்தவர் என்.சுமதி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருந்ததாவது:-


நான், நெல்லை மாவட்டம் களக்காடு மீரானியா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 9.7.2007 அன்று பட்டதாரி ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். இதன்பின்பு அரசு ஆசிரியை பணிக்காக 3.5.2010 அன்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 12.10.2010 அன்று சிவகங்கை மாவட்டம் கழுவன்குளம் ïனியன் பள்ளியில் பணியில் சேர்ந்தேன். இந்தநிலையில் 23.8.2010-க்கு பின்பு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் 7.3.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 23.8.2010-க்கு முன்பு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கி, அதன் அடிப்படையில் 23.8.2010-க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று கூறி உள்ளது. என்னைப் பொறுத்தமட்டில் 3.5.2010 அன்றே தேர்வு நடைமுறைகள் தொடங்கி விட்டன. எனவே தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிப்படி நான் தேர்வு எழுத வேண்டிய தேவையில்லை.


எனவே 23.8.2010-க்கு பின்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவரும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 23.8.2010-க்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் 23.8.2010-க்கு பின்பு பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.


இதே போன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சவுந்தரம், பத்மநாபன், சங்கரசுப்பிரமணியன், ஜோசி, ஜேஸ்மின்நிர்மலா ஆகியோரும், மதுரை மாவட்டம் பேரைïர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை உஷா ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்த ஆறுமுகம், தஞ்சாவூர் கார்த்திகேயன், திருச்சி மல்லிகா உள்ளிட்ட 25 பேர் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 25 பேரும் தகுதித் தேர்வு எழுத அரசு நிர்ணயித்துள்ள தேதியான 23.8.2010-க்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்பட்டதால் அவர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

No comments: