Thursday, 17 May 2012

முப்பருவப் பாடத் திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை குறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் பயிற்சி .

முப்பருவப் பாடத் திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை குறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் சார்பில், டி.பி.ஐ., வளாகத்தில் நடந்த பயிற்சியில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஏற்கனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட பல தரப்பினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், டி.இ.இ.ஓ.,க்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, செயலர் சபிதா ஆகியோர், பயிற்சியை பார்வையிட்டு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, திட்டத்தை முழுமையாக, சரியாக அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினர். மேலும், மாணவர்களுக்கான அரசின் பல்வேறு விலையில்லா திட்டங்களை, மாணவர்களிடம் முழுமையாக சென்று சேர்ப்பதிலும், அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு வலியுறுத்தினர். ஜூன் 1ம் தேதியில் இருந்து, முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவக் கல்வித் திட்டமும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை திட்டமும் அமலுக்கு வருவதையொட்டி, இப்பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில், தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்

No comments: