Sunday, 30 September 2012

டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 13 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


டி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 September 2012

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு அக்டோபர் 15-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

 கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறாத சுமார் 70 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
பத்தாம் வகுப்புத் தேர்வு (பொது பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம்) தேர்வு அட்டவணை விவரம்: 
அக்டோபர் 15 மொழிப்பாடம் முதல் தாள், 16 - மொழிப்பாடம் இரண்டாம் தாள், 18-ஆங்கிலம் முதல் தாள், 19-ஆங்கிலம் இரண்டாம் தாள், 22-கணிதம், 25-அறிவியல், 26-சமூக அறிவியல். 
 
மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை (பழையப் பாடத்திட்டம்): 
அக்டோபர் 15-மொழிப்பாடம் முதல் தாள், 16-மொழிப்பாடம் இரண்டாம் தாள், 17-ஆங்கிலம் முதல் தாள், 18-ஆங்கிலம் இரண்டாம் தாள்,19-கணிதம் முதல் தாள்,  20-கணிதம் இரண்டாம் தாள், 22-அறிவியல் முதல் தாள், 25-அறிவியல் இரண்டாம் தாள், 26-வரலாறு மற்றும் குடிமையியல், 29-புவியியல் மற்றும் பொருளியியல். 
 
ஆங்கிலோ-இந்தியன் தேர்வு கால அட்டவணை (பழையப் பாடத்திட்டம்): 
அக்போடர் 15- மொழிப்பாடம், 16-ஆங்கிலம் முதல் தாள், 17-ஆங்கிலம் இரண்டாம் தாள், 18-கணிதம் முதல் தாள், 19-கணிதம் இரண்டாம் தாள், 20-அறிவியல் முதல் தாள், 22-அறிவியல் இரண்டாம் தாள், 25- வரலாறு மற்றும் குடிமையியல், 26- புவியியல். 
 
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை (பழைய பாடத்திட்டம்): 
அக்டோபர் 15- தமிழ், 16 - பிரதான மொழிப்பாடம் முதல் தாள் (சம்ஸ்கிருதம்/அரபி/பாரசீகம்), 17-பிரதான மொழிப்பாடம் இரண்டாம் தாள் (சம்ஸ்கிருதம்/அரபி/பாரசீகம்),  18 - ஆங்கிலம் முதல் தாள், 19  ஆங்கிலம் இரண்டாம் தாள், 20-சிறப்பு மொழிப்பாடம் மூன்றாம் தாள் (அட்வான்ஸ்டு லாங்குவேஜ் பேப்பர் 3) (சம்ஸ்கிருதம்/அரபி), 22-கணிதம், 25-அறிவியல், 26- சமூக அறிவியல்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு ரூ.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய 6 மாடி கட்டிடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 27-ந்தேதி (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார்.

டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணிக்கு தேவைப்படும் ஊழியர்களையும் அதிகாரிகளையும் போட்டித்தேர்வு நடத்தி தேர்வுசெய்து வருகிறது. முன்பு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரர் தோட்டத்தில் (புதிய தலைமை செயலக கட்டிடம் உள்ள இடம்) இயங்கி வந்தது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், புதிய தலைமை செயலகத்திற்காக தற்போதைய கிரீம்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள வணிகவரிகள் அலுவலக கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. பாரிமுனை அரசு மருத்துவக்கல்லூரி அருகே டி.என்.பி.எஸ்.சி.க்கு சொந்தமாக கட்டிடம் கட்டுவதற்கு முன்பே முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ரூ.19 கோடி செலவில் 6 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டிடத்தின் திறப்புவிழா 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைக்கிறார். விழாவில், அமைச்சர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ், செயலாளர் டி.உதயச்சந்திரன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயகாந்தன், ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள்.

6 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில், வீடியோ கான்பரன்சிங் வசதியுடன் கூடிய கூட்டரங்கு, மாநாட்டுக்கூடம், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள், தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோருக்கு தனித்தனி அறைகள், வெவ்வேறு பிரிவுகளுக்கும் தனி அறைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

அரசு பணிக்கான உச்ச வயது வரம்பு குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 40 வயது என்று உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் வயது வரம்பை அதிகரிக்க அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. புதிய கட்டிட திறப்புவிழாவின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று போட்டித்தேர்வுகளுக்கு படித்து வரும் இளைஞர்களும், இளம்பெண்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க, நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 65 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். இனிமேல் அவர்கள் 72 சதவீதம் அகவிலைப்படி பெறுவார்கள்.இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 50 லட்சம் பேரும், ஓய்வு ஊதியம் (பென்ஷன்) பெறுவோர் 30 லட்சம் பேரும் பயன் அடைவார்கள்.

கடந்த ஆண்டு (2011) மார்ச் மாதம் இதேபோல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல்தான் அமலுக்கு வந்தது.நேற்று அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு கடந்த ஜுலை மாதம் 1-ந் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும். அன்று முதல் ஊழியர்கள் நிலுவைத்தொகையையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 400 கோடி கூடுதல் செலவு ஏற்படும். நடப்பு நிதி ஆண்டில் ஜுலை மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய 8 மாத காலத்துக்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 21 September 2012

அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஐகோர்டில் சூளையைச் சேர்ந்த யாமினி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயராஜ் ஆகியோர், தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். யாமினி தனது மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை, தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. கடந்த ஜூலை, 12ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில், 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வரும் அக்டோபர் 3ம் தேதி மறுபடியும் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், கடந்த ஆகஸ்ட், 26ம் தேதி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். கடந்த ஜூலை மாதத்துக்கு பின், என்னைப் போல் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பி.எட்., படித்து காத்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு இந்தத் தேர்வை எழுத தகுதி உண்டு. என்னைப் போல் புதிதாக பி.எட்., படித்தவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுக்கள் நேற்று நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன் ஆஜராகி, சில வாதங்களை முன் வைத்தார்.

அவை வருமாறு: இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்தது. ஜூலைக்குப் பின் பி.எட்., முடித்தவர்களையும் இத்தேர்வில் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வை, அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றியுள்ளோம். மனுதாரர் விஜயராஜின் கோரிக்கை தொடர்பாக, அமைச்சர் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி, பரிந்துரைகளை குழு அளிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும். இவ்வாறு அரவிந்த பாண்டியன் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இப்பிரச்னையில் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. கடந்த தேர்வில் விண்ணப்பிக்காதவர்களும் இத்தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் "ஹால் டிக்கெட்'டை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தேர்வரின் கோரிக்கையை பரிசீலனை செய்து, டி.இ.டி., தேர்வுக்கு, புதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேர்வர்களுக்காக, 24ம் தேதி காலை, 10 மணி முதல், 28ம் தேதி மாலை, 5:30 மணி வரை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. இவர்களுக்குள்ள, தேர்வு மையத்தில், எவ்வித மாற்றமும் கிடையாது. புதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலேயே வழங்க வேண்டும். நேரிடையாக, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை நகல் எடுத்து, நகலில் முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை, தேதியுடன் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த பின், விண்ணப்பத்தில், எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர், மொழிப் பாடத்தை மாற்ற விரும்பினால், 28ம் தேதிக்குள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். புதிய தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்பட மாட்டாது. டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. பழைய தேர்வர்களுக்கு, ஏற்கனவே டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்வர்களுக்கு, அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமனத்திற்கான கலந்தாய்வு 25.09.2012 அன்று நடைபெறுகிறது.

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்திட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செடீநுயப்பட்டு ஒதுக்கீடு செய்து பெறப்பட்ட பணிநாடுநர்களுக்கு எதிர்வரும் 25.09.2012 முற்பகல் 11 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு, சேப்பாக்கம் , சென்னை – 5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும் மேற்கண்ட நாளில் பணிநாடுநர்கள் உரிய சான்றுகளுடன் தவறாது ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்', டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

வரும், 30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்', டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. வி.ஏ.ஓ., தேர்வுக்கு, ஜூலை 9ம் தேதி முதல், ஆகஸ்ட் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளத்தில், தேர்வர்கள் பதிவு செய்தனர். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி நிலையிலான தேர்வு என்பதால், போட்டி போட்டுக் கொண்டு, தினமும் 50 ஆயிரம், 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 30ம் தேதி, மாநிலம் முழுவதும் 4,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடக்கிறது. 1,870 பணியிடங்களுக்கு, 9.55 லட்சம் பேர், தேர்வை எழுத உள்ளனர்; ஒரு இடத்திற்கு, 570 பேர் போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 20 September 2012

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டீசல்விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் கடும் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியினை மத்திய அரசு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதம் இருந்ததை 65 சதவீதமாக உயர்த்தி, ஜனவரி 1 2012-ம் ஆண்டில் இருந்து கணக்கிடப்பட்டது. தற்போது அகவிலைப்படியை மேலும் 7 சதவீதமாக அதிகரித்து 65 ல் இருந்து 72 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சத்தி்ற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் என மொத்தம் 80 லட்சம் பேர் பயனடைவர். இது ‌கடந்த ஜூ‌லை 1-ம் தேதி முதல் கணக்கீட்டு அதற்கான நிலுவைத்தொகை வழங்கப்படலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அக்டோபர் 2012 மேல்நிலைத் தேர்வெழுத சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் On-line-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்டோபர் 2012 மேல்நிலைத் தேர்வெழுத  நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் On-line-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் On-line-ல் விண்ணப்பங்கள் 21.09.2012 மற்றும் 22.09.2012 ஆகிய இரு நாட்களில் வரவேற்கப்படுகின்றன. PRESS RELEASE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 18 September 2012

பள்ளிக் கல்வித் துறையில், 29 மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

பள்ளிக் கல்வித் துறையில், 29 மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர். எட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் இல்லாமல், காஞ்சிபுரம், நாமக்கல், நாகை, தேனி உள்ளிட்ட எட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேனி சி.இ.ஓ., ரவிச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட துணை இயக்குனர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டார். மேலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 29 பேரை, மாவட்டக் கல்வி அலுவலர்களாக (பொறுப்பு) நியமித்தும், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக் கல்வித் துறையில் பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் பொறுப்பேற்றார்.

பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் இருவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக இருந்த கண்ணப்பன், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். பணியாளர் தொகுதி இணை இயக்குனராக இருந்த ராஜ ராஜேஸ்வரி, இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். இருவரும், புதிய பொறுப்புகளை ஏற்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 15 September 2012

அக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு: தோல்வி அடைந்தவர்களுக்குமறுதேர்வு நடத்த முடியாது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி நடத்தப்படும் தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் அனுமதிஅளிப்பது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுசென்னை சூளையை சேர்ந்த ஏ.யாமினி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியராக பணியில் சேர தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில்,ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வினை கடந்த ஜுலை மாதம் நடத்தியது.இந்த தேர்வில், 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் கலந்துக் கொண்டனர். இதில், இடைநிலை, உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மறுதேர்வுஇதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் 26.8.2012 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு 3.10.2012 அன்று மறு தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்காக புதிதாக விண்ணப்பம் செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளது.நான் பி.எஸ்.சி., (கணிதம்) பி.எட். பட்டம் பெற்றுள்ளேன். கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இந்த கல்வியாண்டில் புதிதாக பி.எட். படித்தவர்களும் அக்டோபர் 3-ந் தேதி நடக்கும் மறு தேர்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.உரிமை மறுப்புஇதனால் அரசு வேலைவாய்ப்பை பெறும் உரிமை எனக்கு மறுக்கப்படுகிறது. எனவே, இந்த மறுதேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். அக்டோபர் 3-ந் தேதி நடக்க உள்ள தேர்வில் என்னை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, `அக்டோபர் 3-ந் தேதி நடக்கவுள்ள தேர்வுக்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. இந்த தேர்வில் புதிய விண்ணப்பத்தாரர்களுக்கு அனுமதி வழங்கினால், அதற்கு காலநேரம் போதாது' என்று வாதம் செய்தார்.விரிவான பதில் மனுமனுதாரர் சார்பில் வக்கீல் அருண்குமார் ஆஜராகி, `ஏற்கனவேவிண்ணப்பத்தாரர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பது சட்டவிரோதமாகும்` என்று வாதம் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, `தேர்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிட்ட பின்னர், அதே விண்ணப்பத்தாரர்களுக்கு மறு தேர்வு நடத்த முடியாது. இந்த தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் கலந்துகொள்ள அனுமதி அளிப்பது குறித்து அரசுடன் கலந்து ஆலோசனை செய்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை வரும் 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.மறுமதிப்பீட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் தேதி குறித்த விவரங்கள் இணையதளத்தை அறியலாம். தேர்வு முடிவுகளை காண http://www.mkudde.org/dderesult.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடநூல்களை எழுத முதுகலை பட்டப்படிப்பு முடித்த திறமையான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடநூல்களை எழுத முதுகலை பட்டப்படிப்பு முடித்த திறமையான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தலைமையில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்த தமிழ்நாட்டுப் பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் மே 11, 2012 அன்று வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மேனிலைக் கல்விக்காக பாடத்திட்டம், பாடநூல்கள் எழுதும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் உயர்கல்வித் தகுதி, கற்பித்தல் அனுபவம், பரந்துபட்ட பாடநூல் அறிவு, பாடநூல் எழுதும் ஆற்றல், ஆர்வம் உள்ள மேனிலை வகுப்பு முதுகலை ஆசிரியர்களை emktamil@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிககு அனுப்பலாம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB