Thursday, 28 February 2013

அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே இருக்கும். தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உள்ளது. தற்போதைய உலகில், கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல், 10ம் வகுப்பு வரை படித்தால், அது அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு,6 முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, அரசு பள்ளி மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள், நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்துள்ளனர். வகுப்பு வாரியாக பாட புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தை, சிறப்பாக நடைமுறைப்படுத்த, பள்ளி கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் கட்டணம் உயர்வு அமலாகிறது

பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் உயர்த்தி உள்ளது. இக்கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும், 1.5 கோடி பேர்,"பிராட்பேண்ட்' சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில், 1 கோடி பேர் பி.எஸ்.என்.எல்., சேவையை பயன்படுத்துகின்றனர். தமிழக மற்றும் சென்னை தொலைபேசி வட்டத்தில், 9 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய என பல வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப, திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டங்களுக்கான கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சீரமைத்துள்ளது.மறு சீரமைப்பின் படி, புதிய கட்டண உயர்வு நாளை முதல் அமலாகும் என்று, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை தொலைபேசி வட்டம் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., நிறுவனம், கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. தனியார் தொலைபேசி நிறுவனங்களுடன் போட்டியை சமாளிக்க, கட்டண சீரமைப்பு அவசியமாகிறது. புதிய கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. மாத சந்தா வாடிக்கையாளர்களுக்கு, இப்புதிய கட்டண உயர்வு, உடனே அமலாகிறது. ஏற்கனவே, பிராட்பேண்ட் சேவையை பெற, ஓராண்டு, இரண்டாண்டு மற்றும் மூன்று ஆண்டு சந்தா செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் காலக்கெடு முடிந்த பின்னரே, கட்டண மறு சீரமைப்பு அமலாகும். கட்டண உயர்வை, வாடிக்கையாளர்களுக்கு, குறுஞ்செய்தியில் தெரிவித்து வருகிறோம். விரிவான கட்டண விவரங்களை, சென்னை தொலைபேசியின் இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.

திட்டத்தின் பெயர் பழைய கட்டணம் புதிய கட்டணம்
பி.பி.ஹோம் யு.எல்.டி., 499 499 525
பி.பி.ஹோம் காம்போ யு.எல்.டி., 625 625 650
பி.பி.ஹோம் காம்போ யு.எல்.டி., 750 750 800
பி.பி.ஹோம் யு.எல்.டி., 750 750 800
பி.பி.ஜி. ஹோம் காம்போ யு.எல்.டி., 850 850 900
பி.பி.ஹோம் காம்போ யு.எல்.டி., 900 900 950
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரேசன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி மார்ச் 15 வரை நீட்டிப்பு

ரேசன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணியை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேசன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி கடந்த ஜனவரி 1-ம் தேதி துவங்கியது. தற்போது குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கையை ஏற்று வரும் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 147. JOINING REPORT TEACHER.DOC

TN FORMS | 147. JOINING REPORT TEACHER.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 146. JOINING REPORT COMMON.DOC

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் தொழில்கல்வி பட்டப் படிப்புகளுக்கான தேர்வின் மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் தொழில்கல்வி பட்டப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டன. இந்த தேர்வின் மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டது. மறுமதிப்பீடு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளலாம் என்று பதிவாளர் கோட்டீஸ்வர பிரசாத் அறிவித்துள்ளார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வி.ஏ.ஓ. பணிக்கு 4–வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

வி.ஏ.ஓ. பணிக்கு 4–வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5–ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவிகளில் 2012–2013–ம் ஆண்டுக்கான காலி பணி இடங்களை நிரப்புவதற்காக 30.9.2012 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் வெற்றிபெற்று வி.ஏ.ஓ. பதவிக்கு தற்காலிகமாக தேர்வுசெய்யப்பட்ட தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு, அதன்மூலம் 1,685 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த நிலையில், எஞ்சியுள்ள 185 காலி பணி இடங்களை நிரப்புவதற்கு 4–வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு 5–ந்தேதி காலை 8.30 மணிக்கு சென்னை பாரிமுனையில் உள்ள (பிராட்வே பஸ் நிலையம் அருகில்) டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கவுன்சிலிங் அழைக்கப்பட்டுள்ள தேர்வர்கள் தங்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் செய்யப்பட்ட (அட்டஸ்டேஷன்) ஜெராக்ஸ் நகல்களையும் கவுன்சிலிங்கிற்கு தவறாமல் கொண்டுவர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கிற்கு தேர்வர்கள் அனுமதிக்கப்படுவது அவர்கள் பரிசீலிக்கப்படும்போது உள்ள காலி பணி இடங்களை பொறுத்தே ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதிகூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கிற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 142. IT FORM NO 24Q.XLS

TN FORMS | 142. IT FORM NO 24Q.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 27 February 2013

TN FORMS | 141. IT FORM NO 12 C.DOC

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முதுநிலை, இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வு பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு 10 ஆண்டுகள் வரை ஆகின்றன.

எனவே, இப்போதைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டதால், இதில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் தெரிகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 22 February 2013

TN FORMS | 140. IT FORM VERSION 2016.2 ORIGINAL KALVISOLAI VERSION.XLS

TN FORMS | 140. IT FORM VERSION 2016.2 ORIGINAL KALVISOLAI VERSION.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 21 February 2013

தமிழகம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு தமிழக வனத்துறையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் ஏற்பாடு செய்து இருந்தன. அதன்படி, நேற்று 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கியது.சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நீச்சல் குளத்துக்கு அருகில் இந்த திட்டத்தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் ஆலமரக்கன்று ஒன்றை அங்கு நட்டு, அதற்கு தண்ணீர் ஊற்றினார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் வன வளத்தினை அதிகரிக்கவும், உயிர்ப் பன்மையினைப் பாதுகாத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தின் இயற்கை வளத்தைப் பேணிப்பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வாகன எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், காற்று மண்டலம் மாசு அடைந்து வருகிறது. மரங்கள் காற்று மண்டலத்தில் உள்ள சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கின்றன.

சூழலியல் சமன்பாட்டினை நிலை நிறுத்தவும், வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்குடனும், வனப் பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலி இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் ‘மாபெரும் மரம் நடும் திட்ட’த்தை செயல் படுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்–அமைச்சர் நேற்று சென்னை, மெரினா கடற்கரை சாலை ஓரத்தில் ஆலமரக்கன்றினை நட்டு தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கட்டமாக பிப்ரவரி 24 முதல் 28 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 6,500 கன்றுகள் வீதம் 2 லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். இந்த மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றி, பராமரித்து பாதுகாத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், சாலையோரங்களில் உயரமான மரக்கன்றுகள் நட்டு, பாதுகாப்பு கூண்டு வைத்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவ மழை தொடங்கியவுடன், தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 625 மரக்கன்றுகள் வீதம் 61 லட்சத்து 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

இந்தப் பணியானது இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும், வடகிழக்கு பருவமழையினை ஒட்டி ஒரு மாவட்டத்திற்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 1 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள், குறிப்பாக சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், தெரு ஓரங்களிலும் நடப்படவுள்ளன.இதில் சுமார் 50 விழுக்காடு மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு காவலர்களை பணி அமர்த்தியும், பாதுகாப்பு கூண்டுகள் பொருத்தியும், நீர் ஊற்றியும் பராமரிக்கப்பட உள்ளது. மீதமுள்ள மரக்கன்றுகள் அந்தந்த இடங்களில் உள்ள பயனாளிகளால் பராமரித்து பாதுகாக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு உள்ளிட்ட வறட்சியை தாங்கக் கூடிய மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடர்ந்து 21 நாட்கள் பணிக்கு வரவில்லை என்பதற்காக "போலீஸ்காரரை பணியில் இருந்து நீக்கியது சரியல்ல" மீண்டும் வேலை வழங்க, ஐகோர்ட்டு உத்தரவு

தொடர்ந்து 21 நாட்கள் பணிக்கு வரவில்லை என்பதற்காக போலீஸ்காரரை பணியில் இருந்து நீக்கியது சரியல்ல என்றும், மீண்டும் போலீஸ் வேலை வழங்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூரை சேர்ந்தவர் உமயசேகர்(வயது 38). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் வருமாறு:–நான், 1997–ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேன். 9 ஆண்டுகளாக எந்தவித புகாரும் இல்லாமல் பணியாற்றினேன். ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது 6.7.2006 அன்று விடுமுறையில் சென்றேன். அந்த சமயத்தில் என் மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரை அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். என் மனைவிக்கு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே குழந்தை பிறந்ததால், அவருடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் பிரசவத்துக்கு பணம் இல்லாததால், பணம் பெறுவதற்காக கடுமையாக அலைந்தேன். இந்த நிலையில் தொடர்ந்து 21 நாட்கள் பணிக்கு வரவில்லை என்று கூறி என்னை பணியில் இருந்து ஓடி விட்டதாக அறிவித்தனர். அதன்பின்பு, என்னை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து 28.8.2007 அன்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.இதை எதிர்த்து ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி, உள்துறை செயலாளர் ஆகியோருக்கு அப்பீல் செய்தேன். அவர்கள் எனது அப்பீலை நிராகரித்து விட்டனர். தற்போது 7 வயதில் குழந்தை உள்ளது. எனது வருமானத்தை நம்பித்தான் எனது குடும்பம் உள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் உடனடியாக என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. எனவே, எனக்கு மீண்டும் போலீஸ் வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.கணபதிசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:–‘‘உரிய காரணங்கள் எதுவும் இல்லாமல் வேண்டுமென்றே 6 மாதங்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்தால் மட்டுமே அதிகபட்ச தண்டனையான பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனுதாரரை பொறுத்தமட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் உரிய நேரத்தில் பணியில் சேர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு அதிகபட்ச தண்டனையான பணி நீக்கம் என்பது சரியல்ல. எனவே, மனுதாரரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.’’இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், மாநிலம் முழுவதும் நேற்று துவங்கின. இதில், 10.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 27ல் துவங்கி, ஏப்ரல் 12 வரை நடக்கிறது. சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்ததன் காரணமாக, அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு முன்னதாக, இந்த செய்முறைத் தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது. மொத்தம், 25 மதிப்பெண்களுக்கு, செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. மீதமுள்ள, 75 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கும். எழுத்து தேர்வை எழுதும் அனைத்து மாணவ, மாணவியரும், செய்முறைத் தேர்விலும் பங்கேற்கின்றனர். அதன்படி, 10.5 லட்சம் மாணவ, மாணவியர், இந்த தேர்வில் பங்கேற்றுள்ளனர். மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, இம்மாதம், 28ம் தேதிக்குள், செய்முறைத் தேர்வுப் பணிகளை முடித்து, அதன் விவரங்களை, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 139.IT FEB-2015 VERSION 1.1.XLSXMAR 31

TN FORMS | 139.IT FEB-2015 VERSION 1.1.XLSXMAR 31
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 138. IT CLAIMING DEDUCTION US 80 GG.DOC

அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் பணி நியமனம், 4 மாதங்களாக, இழுபறியில் உள்ளது. தேர்வு பெற்றவர்கள், எப்போது வேலை கிடைக்கும் என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்களை பணி நியமனம் செய்வதற்கு, கடந்த ஆண்டு, மே, 13ல், டி.ஆர்.பி., தேர்வை நடத்தியது. பின், ஜூலை, 8ல், தேர்வு முடிவை வெளியிட்டு, ஒரு இடத்திற்கு, இருவர் வீதம், அதே மாதத்தில், 22 மற்றும் அக்டோபர், 4 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. கடந்த ஆண்டு, அக்டோபர், 18ம் தேதி, இறுதி தேர்வுப் பட்டியல் வெளியானது. இதேபோல், அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு, கடந்த ஆண்டு ஏப்ரல், 22ல் நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், அக்டோபர், 18ல், தேர்வுப் பட்டியல் வெளியானது. இரு தேர்வுகளிலும், தேர்வு பெற்ற தேர்வர்களின் விவரங்களை, உயர்கல்வித்துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பியது. எனினும், 4 மாதங்களாக, இவர்களுக்கு பணி நியமனம் வழங்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்குள், அனைவரையும் பணி நியமனம் செய்ய, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வு பெற்றவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 137. IT CLAIMING DEDUCTION U.S 80 GG.PDF

TN FORMS | 137. IT CLAIMING DEDUCTION U.S 80 GG.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வுக்கான தற்காலிக விடைகளை வெளியிட்டுள்ளது.

குரூப் - 1 தேர்வுக்கான தற்காலிக விடைகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. விடைகளில், ஆட்சேபம் இருந்தால், அதுகுறித்து, ஒரு வாரத்திற்குள், தேர்வாணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., - வணிகவரி உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, கடந்த, 16ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. இதில், 1.26 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வின் தற்காலிக விடைகள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. விடைகளில் ஆட்சேபம் இருந்தால், ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள், தங்களது கருத்துக்களை, தேர்வாணையத்திடம் தெரிவிக்கலாம். தேர்வர்களின் ஆட்சேபணைகள் குறித்து, ஆய்வு செய்து, அதனடிப்படையில், இறுதி விடைகள் வெளியிடப்படும்.
 
வி.ஏ.ஓ., மதிப்பெண் வெளியீடு: கடந்த ஆண்டு, செப்., 30ல், வி.ஏ.ஓ., தேர்வு நடந்தது. 6.5 லட்சம் பேர் பங்கேற்ற, இந்த தேர்வின் மதிப்பெண்கள், தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும், மூன்று கட்ட, "கட்-ஆப்' மதிப்பெண் விவரங்களும், இன சுழற்சி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 20 February 2013

TN FORMS | 136. IT AY 2016-17 VER 16.3.XLS

TN FORMS | 136. IT AY 2016-17 VER 16.3.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதுச்சேரி தூர்தர்ஷனில் இன்று 20ம் தேதி மாலை 5.30 மணிக்கு, தொலைப்பாலம் நிகழ்ச்சியில், "தேர்வு உங்கள் வசம்' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது

பயமின்றி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வெழுத, புதுச்சேரி தூர்தர்ஷனில் மாணவர்களுக்குப் பாடவாரியாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. புதுச்சேரி தூர்தர்ஷன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சித்திரப்பாவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூர்தர்ஷனில் இன்று 20ம் தேதி மாலை 5.30 மணிக்கு, தொலைப்பாலம் நிகழ்ச்சியில், "தேர்வு உங்கள் வசம்' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மாணவர்கள், தேர்வினைப் பயமின்றி எதிர்கொள்ளும் விதம், தெளிவாக விடையளித்து அதிக மதிப்பெண்கள் பெற பாடவாரியாக துறை வல்லுனர்களிடம் விளக்கம் பெறும் விதமாக நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. இன்று (20ம் தேதி) தமிழ்ப் பாடம் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதில் உரைநடை, கவிதை, கதை, கட்டுரை, செய்யுள், இலக்கணம் போன்ற பகுதிகளில் சந்தேகம் உள்ளவர்களுக்கு ”ப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி ஆசிரியை பூங்குழலி விளக்கம் அளிக்கிறார். நாளை (21ம் தேதி) ஆங்கிலப் பாடம் குறித்து நாவலர் பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீ, வரும் 27ம் தேதி கணிதப்பாடம் குறித்தும், 28ம் தேதி அறிவியல் பாடம் குறித்தும் மார்ச் 3ம் தேதி சமூக அறிவியல் பாடம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 0413-2272487, 2272488 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 135. IT AY 2016-17 VER 16.3 BY ARUNAGIRI K.XLS

TN FORMS | 135. IT AY 2016-17 VER 16.3 BY ARUNAGIRI K.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி தகவலை வெளியிட்டுள்ளது.

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள்  டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.

உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களை அறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன. அதில், "எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை' என, தெரிவித்துள்ளன.

இந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 134. IT AY 2016-17 VER 16.2.XLS

TN FORMS | 134. IT AY 2016-17 VER 16.2.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 19 February 2013

அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 - செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுநிலை விரிவுரையாளர்களாக தேர்வு பெற்ற, 33 பேரின் பட்டியலை ரத்து செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.

அரசு ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் பணியாற்ற, 33 முதுநிலை விரிவுரையாளர்களை தேர்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான போட்டித் தேர்வு, கடந்த ஆண்டு, மார்ச், 4ல் நடந்தது. 560 பேர், தேர்வை எழுதினர். கடந்த ஆண்டு இறுதியில், ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், 33 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். பின், எழுத்துத் தேர்வு அடிப்படையில், தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. எனினும், இந்தப் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகத்திடம், இன்னும், டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதற்கான காரணங்கள் குறித்து கேட்டபோது, துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்த பணிக்கு வருவோர், திறமைசாலிகளாக, புத்தி கூர்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியரைப் போல், மிக மிக குறைவான மதிப்பெண்களை வாங்கி உள்ளனர். எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விவாதித்து, முடிவு எடுக்கப்படும். தேர்வுப் பட்டியல் ரத்தாவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. புதிதாக தேர்வை நடத்தி, திறன் வாய்ந்தோர், தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது.

 அரசு கல்லூரிகளில், 1,093 பணியிடங்களும், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில், 3,120 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. டி.ஆர்.பி., மூலம் போட்டி தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டது. பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும், பி.எச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. பி.எச்டி., பட்டம் பெறாமல் எம்.பில்., பட்டத்துடன் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்ணும், முதுகலை பட்டத்துடனம், நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 5 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. போட்டி தேர்வு மூலம் தேர்வு நடைபெறாமல், நேர்முக தேர்வுக்கும், அனுபவத்துக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால், முறைகேடுகள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போட்டி தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவி வருகிறது. ஒரு சீட் 10 லட்சம்: தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்கள், கல்லூரி நிர்வாகம் மூலமே நிரப்பப்படுகின்றன. இதனால், அதிகளவில் பணம் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. இப்பணியிடங்கள், ஏழு முதல் 10 லட்ச ரூபாய் வரை விலை போவதாகவும் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசு நிரப்புகிறது. ஆனால், தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை, கல்லூரி நிர்வாகங்களே நிரப்புகிறது. இதனால், அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே, தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்து, அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசே நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலர் பிச்சாண்டி கூறியதாவது: மாணவர்களுக்கான நேர்முக தேர்வுகளையே ரத்து செய்ய போராடும் நிலையில், நெட், ஸ்லெட் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு வைப்பது தவறான செயல். போட்டி தேர்வு நடத்தாமல், இப்போது இருக்கும் தேர்வு முறைகளிலேயே, ஒழுங்குபடுத்தி, நேர்மையான தேர்வு நடைபெற வேண்டும். கல்லூரி ஆசிரியர் தேர்வு பற்றி, அமைச்சர் தலைமையிலான குழு விரைவில் விவாதித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 133. INSPECTION-FORMS.DOC

TN FORMS | 133. INSPECTION-FORMS.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ மாணவியர் "ஆன்-லைன்' வழியில் அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.

பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியர் மட்டும், அறிவியல் பாடங்களில், செய்முறை தேர்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமில்லாமல், தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கும், செய்முறை வகுப்புகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன. இதனால், பள்ளிகளில் உள்ள ஒரு ஆய்வகத்தையே, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஒவ்வொரு பிரிவாக பயன்படுத்த வேண்டி உள்ளது. மேலும், செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், சரிவர கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர், திருப்தியான முறையில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்கின்றனரா என்பதையும், உறுதியாக கூற முடியாது. இது போன்ற நிலையில், ஆன்-லைன் வழியாக, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளும் திட்டத்தை, சி.பி.எஸ்.இ., அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் உள்ள மத்திய அரசின் சி.டி.ஏ.சி., (சென்டர் பார் டெவலப்டு ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்) மையமும், கேரளாவில் உள்ள அம்ரிதா பல்கலையும் இணைந்து, இந்த ஆன்-லைன், "லேப்'பை உருவாக்கி உள்ளன. தீதீதீ.ணிடூச்ஞண்.ஞிணி.டிண என்ற இணையதளத்திற்குள் சென்று, 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், எத்தனை முறை வேண்டுமானாலும், முப்பரிமாண தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், படங்களாக, இணையத்தில் உள்ளன. இதை பயன்படுத்தி, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது தொடர்பான சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், சி.பி.எஸ்.இ., தலைவர் வினீத் ஜோஷி கூறியதாவது: பள்ளிகளில், செய்முறை பயிற்சியை மேற்கொள்ள, போதிய நேரம் கிடைக்காது. ஆன்-லைன் வழியில், எப்போது வேண்டுமானாலும், செய்முறை பயிற்சியில் ஈடுபடலாம். மாணவர்களின் செய்முறை தேர்வை மதிப்பீடு செய்யும் தொழில்நுட்பமும், இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்திற்கு, ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அறிவியல் ஆசிரியை ஷீலா கூறுகையில், ""இத்திட்டம், அறிவியலை, மாணவ, மாணவியரின் வீட்டிற்கே கொண்டு செல்வதாக உள்ளது. ஆன்-லைன் வழியில், மாணவ, மாணவியர், உற்சாகமாக, செய்முறை பயிற்சிகளில் ஈடுபடுவர். இதன் மூலம், அவர்களது அறிவியல் அறிவு மேம்படும்,'' என, தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 132. INCREMENT BONUS INCREMENT 30 YEARS SERVICE.DOC

TN FORMS | 132. INCREMENT BONUS INCREMENT 30 YEARS SERVICE.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 145. JAYHO.TTF

Monday, 18 February 2013

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2011-12ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு: தனித்தேர்வர்களுக்கு 18–ந் தேதி முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வுக்கான ஹால்டிக்கெட் 18–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுத்துறையின்
சென்னை மண்டல துணை இயக்குனர் ஆர்.கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) நடைபெற உள்ளது. இந்த தேர்வை முதல் முறையாக எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் தாங்கள் அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்ட பள்ளிக்கூடத்திலேயே செய்முறைத்தேர்வில் பங்கேற்க வேண்டும். செய்முறைத்தேர்வு 20–ந் தேதி தொடங்கி 28–ந் தேதி வரை அனைத்து வேலைநாட்களிலும் (சனிக்கிழமை உள்பட) காலை, மாலை இரு வேளைகளிலும் நடைபெறும்.செய்முறைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டினை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அதிகாரியிடம் 18 முதல் 20–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்டதற்கான ரெக்கார்டு நோட்டை தவறாறு தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும். செய்முறைத்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் இதர விவரங்களை மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி தெரிந்துகொள்ளலாம். செய்முறைத்தேர்வு குறித்து தேர்வர்களுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படாது.போட்டோவுடன் கூடிய தேர்வுக்கூட ஹால்டிக்கெட் பின்னர் தனியே வழங்கப்படும். இதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும். போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட் வைத்திருக்கும் தேர்வர்கள் மட்டுமே தியரி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.இவ்வாறு கீதா கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வி - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கல்வியால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று தமிழ்நாடு தேர்வாணையக்குழு தலைவர் ஆர்.நட்ராஜ் பேசினார்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டி வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சரஸ்வதி யாக பூஜை நேற்று நடந்தது. தங்ககோவிலை உருவாக்கிய சக்தி அம்மா தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தேர்வாணையக்குழு (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஆர்.நட்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–1992–ம் ஆண்டு இங்கு டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்தபோது இந்த இடம் வெட்டவெளியாக இருந்தது. தற்போது சக்தி அம்மாவின் முயற்சியால் கண்ணுக்கு குளிர்ச்சியாக, பச்சைபசேல் என்று ரம்மியமாக, கம்பீரமாக இந்த இடம் திகழ்கிறது. நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள். இங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

சமுதாயத்தில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கல்வி ஒன்றுதான் ஏற்றத்தாழ்வுகளை தகர்த்தெறியும் சக்தியாக உள்ளது. எனவே, கல்வியால் தான் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய முடியும். கல்வியில் எல்லோரும் சிறந்து விளங்க வேண்டும். நாம் மட்டும் முன்னேற வேண்டும் என்று எண்ணாமல் நம்மை சுற்றி இருப்பவர்களும் முன்னேற வேண்டும் என்று சக்தி அம்மா செயல்படுகிறார். இந்த நாட்டின் எதிர்காலம் மாணவர்களிடம் உள்ளது. எனவே மாணவர்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் சக்தி அம்மா பேசியதாவது:–

அனைத்து மாணவ–மாணவிகளும் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கும். எதிர்காலம் வந்தால் போதாது, அது பிரகாசமான, ஒளிமயமான, நல்ல எதிர்காலமாக இருக்க வேண்டும். நேற்று என்பது முடிந்து போன விஷயம், நாளை என்பது என்னவென்று தெரியாது. எனவே, இன்றைய நிகழ்காலத்தில் நல்ல வழியில் நாம் பயன்படுத்தினால் எதிர்காலம் நன்றாக இருக்கும்.2020–ல் இந்தியா வல்லரசாக வேண்டும். அதற்கு நீங்கள் நன்றாக வந்தால் இந்தியா வல்லரசாகும். வல்லரசோடு நல்லரசாகவும் இருக்க வேண்டும். அதற்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. படிப்புடன் ஆன்மிகமும், பக்தியும் இருக்க வேண்டும்.படிப்பதால் கல்வி அறிவு மட்டும் கிடைக்கும். பக்தி, ஆன்மிகம் இருந்தால் ஒழுக்கம், நல்ல எண்ணம் கிடைக்கும். நாம் சமுதாயத்துக்கு பயன்பட வேண்டும். பழங்காலத்தில் மன்னர்கள் தங்களின் பிள்ளைகளை குருகுலத்துக்கு அனுப்பி வைத்தனர். கல்வி மட்டுமல்லாமல், வீரம், ஒழுக்கம், சத்தியம், ஆன்மிகம் உள்பட அனைத்தையும் அங்கு கற்று தந்தனர்.உங்களுக்கு மட்டும் நல்ல எதிர்காலமாக இல்லாமல் சமுதாயத்துக்கும் நல்ல எதிர்காலமாக இருக்க நீங்கள் பாடுபட வேண்டும்.இவ்வாறு சக்தி அம்மா பேசினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 17 February 2013

TN FORMS | 144. IT FORM-16.PDF

TN FORMS | 144. IT FORM-16.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு 19 முதல் 21ம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா அறிவித்துள்ளார்.

மார்ச் மாதம், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, தனித்தேர்வாக எழுத விண்ணப்பித்துள்ளவர்கள், அவர்களின் இருப்பிட முகவரிக்கு அருகில் உள்ள தேர்வு மையத்தில், பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. "ஆன்-லைனில்' விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட, 10 இலக்க எண்களை தெரிவித்து, ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம், தேர்வு எழுத பதிவு செய்யப்பட்டுள்ள பாடங்கள், தேர்வு நடைபெறும் தேதிகள் ஆகிய விவரங்கள், சரியாக உள்ளனவா என்பதை, தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
புகைப்படம் பதிவாகவில்லை எனில், இரு புகைப்படங்களை எடுத்துச் சென்று, ஒன்றை, ஹால் டிக்கெட்டில் ஒட்டி, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரின் சான்றொப்பத்தை பெற வேண்டும். மற்றொரு புகைப்படத்தை, தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்."தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டும், 22, 23 ஆகிய தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு, நேரில் வந்து, ஹால் டிக்கெட் பெற வேண்டும்.இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு கல்வி மாவட்ட தேர்வர்களுக்கு, செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளியிலும்; காஞ்சிபுரம், ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளியிலும்; பொன்னேரி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்; திருவள்ளூர் கல்வி மாவட்ட தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி.சி.சி.சி., இந்து மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.சென்னையில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, அண்ணாசாலையில் உள்ள மதரசா மேல்நிலைப் பள்ளியில், ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 15 February 2013

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வில், சென்னையில் உள்ள சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 48 பேர் துணை கலெக்டர்களாகவும், 23 பேர் போலீஸ் துணை கண்காணிப்பாளர்களாகவும் தேர்வு பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில், மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோர் நடத்தும் மனித நேய மையம் பல்வேறு அரசு பணிகள் தேர்வுக்காக இலவச பயிற்சி அளித்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை–கலெக்டர், துணைபோலீஸ் கண்காணிப்பாளர் போன்ற குரூப்–1 பணிகளுக்கான தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியானதில் 131 காலிப்பணியிடங்களுக்கு மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 112 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு மையத்தின் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட்டதுடன், இலவச தங்கும் வசதியும் ஏற்பாடு செய்து தரப்பட்டிருந்தது.

மாநில அளவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுராந்தகி முதல் இடத்திலும், ஈரோட்டைச் சேர்ந்த ஜி.சரவணமூர்த்தி இரண்டாவது இடத்திலும் வெற்றி பெற்று துணை கலெக்டர் பதவிக்கு தேர்வாகி உள்ளனர். 112 பேரில் 48 பேர் துணைகலெக்டர் பதவிக்கும், 23 பேர் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) பதவிக்கும், 6 பேர் மாவட்ட பதிவாளர் பதவிக்கும், 23 பேர் உதவி ஆணையர் (வணிகவரி) பதவிக்கும், 8 பேர் துணை இயக்குனர் (பஞ்சாயத்து) பதவிக்கும், ஒருவர் மாவட்ட தீயணைப்பு துறை பதவிக்கும் தேர்வு பெற்றுள்ளனர். 3 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.வெற்றி பெற்றவர்களுக்கு மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார். வெற்றி பெற்றவர்கள் தங்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

முதல் இடத்தில் தேறி துணை கலெக்டர் பணி ஒதுக்கீடு பெற்றுள்ள எஸ்.மதுராந்தகி கூறியதாவது:–

என்னுடைய வெற்றியை மனிதநேய மையத்திற்கும், என்னுடைய பெற்றோருக்கும் சமர்ப்பிக்கிறேன். சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்த எனக்கு, இந்த துறையில் நுழைவதற்கான முழு ஒத்துழைப்பை பயிற்சி மையம் அளித்தது. அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த என்னுடைய தந்தை சதாசிவம் மற்றும் மாநில போட்டித் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜேஸ்வரன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சிறிய கிராமத்திலிருந்து வந்துள்ளதால், என்னுடைய வருங்கால பணி கிராம முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும்.இவ்வாறு மதுராந்தகி கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 143. IT FORM-16-PASS-WORD-12345.XLS

TN FORMS | 143. IT FORM-16-PASS-WORD-12345.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 13 February 2013

TN FORMS | 131. INCENTIVE ORDER PROCEEDING -AEO.DOC

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் உள்ள டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர 7–ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் உள்ள டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 7–ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோரின் படிப்புக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய ராணுவ கல்லூரி இயங்கி வருகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனம், ராணுவ பணிகளில் சேர மாணவர்களை தயார்படுத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இங்கு சேர விண்ணப்பங்களை வரவேற்கிறது.தற்போது 7–ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள், 2014 ஜனவரியில் 7–ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த ராணுவ கல்லூரியில் சேரலாம். குறைந்தபட்ச வயது 11½ (1.1.2014–ன் படி). 13 வயது பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது. விண்ணப்ப கட்டணம் ரூ.400 (பதிவு தபாலில் பெற), ரூ.450 (விரைவு அஞ்சலுக்கு). எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் என்றால் பதிவு தபாலில் பெற வேண்டுமானால் ரூ.355–ம் விரைவு தபால் மூலமாக எனில் ரூ.405–ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட விண்ணப்ப கட்டணத்தை தி கமாண்டன்ட், ஆர்.ஐ.எம்.சி. டேராடன் என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் டிமாண்ட் டிராப்டாக மேற்கண்ட கல்வி நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் மார்ச் 31–ந் தேதி ஆகும்.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு சென்னை உள்பட மாநிலங்களின் தலைநகரங்களில் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்–1 பணி ஒதுக்கீட்டிற்காக கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

பிடித்தமான பதவியை தேர்வு செய்து கொள்ளும் வகையில் குரூப்–1 தேர்வில் முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறையில் முதலாவது கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட உயர் பதவிகளில் 131 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்–1 மெயின் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இந்த தேர்வை ஏறத்தாழ 2,620 பேர் எழுதினார்கள்.இந்த நிலையில், மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு 262 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேர்முகத்தேர்வு கடந்த 1–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்தது.

இதைத்தொடர்ந்து, நேர்முகத்தேர்வுக்கு சென்றவர்களின் மதிப்பெண் விவரம் (எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு) 5–ந்தேதி இரவு வெளியிடப்பட்டது. அதன்பிறகு 131 பேர் கொண்ட இறுதி தேர்வுபட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 7–ந் தேதி வெளியிட்டது. வழக்கமாக, தேர்வர்களின் மதிப்பெண், விருப்பம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி தேர்வு பட்டியலின் போது வெளியிடப்பட்டு விடும்.ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக பணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, தேர்வர்கள் மெரிட் அடிப்படையில் கவுன்சிலிங் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு விருப்பமான பணியை (காலியாக இருக்கும் பட்சத்தில்) தேர்வு செய்து கொள்ளலாம்.

‘‘எவ்வித ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காக குரூப்–1 தேர்விலும் கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம். பழைய முறையில் தேர்வர்கள் விரும்பாத பதவியோ, அல்லது அவர்கள் அவசர அவசரமாக விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பதவியோ ஒதுக்கப்பட்டிருக்கக்கூடும். தற்போது கவுன்சிலிங் நடத்துவதால் தங்களுக்கு விருப்பமான பதவியை தேர்வு செய்து திருப்தியாக பணியை மேற்கொள்ளலாம்’’ என்று டி.என்.பி,எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார்  தெரிவித்தார்.

குரூப்–1 பணி ஒதுக்கீட்டிற்காக கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 131 பேர் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே, இந்த ஆண்டு குரூப்–1 பணிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக முதல் நிலைத்தேர்வு 16–ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுத இருக்கிறார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் அதிக காலி இடங்கள் இருக்கின்றன.

அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் அதிக காலி இடங்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 69 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் காலியாக உள்ள 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி அவசியம் இல்லை.அரசு பள்ளி ஆசிரியர்களை போல் போட்டித்தேர்வு ஏதும் இல்லாமல் சிறப்பு மதிப்பெண் வழங்கும் முறை அடிப்படையில் உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் வழங்கி மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

1,063 காலி பணி இடங்களில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில்தான் அதிக காலி இடங்கள் உள்ளன. பாடவாரியாக முக்கிய பாடங்களில் காலி இடங்கள் விவரம் வருமாறு:–

தமிழ் – 76

ஆங்கிலம் – 140

கணிதம் – 135

இயற்பியல் – 100

வேதியியல் – 95

தாவரவியல் – 60

விலங்கியல் – 55

கம்ப்யூட்டர் சயின்ஸ் – 95

வரலாறு – 77

பொருளாதாரம் – 58

வணிகவியல் – 75

அரசியல் அறிவியல் – 5

நிர்வாகவியல் – 8

புள்ளியியல் – 18

மேற்கண்ட பாடப்பிரிவுகள் தவிர, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, எலெக்ட்ரானிக்ஸ் சயின்ஸ், அக்வாகல்சர் என பல்வேறு சிறப்பு பாடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான காலி இடங்கள் இடம்பெற்றுள்ளன. உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 12 February 2013

TN FORMS | 130. HSE FORM.XLS

TN FORMS | 130. HSE FORM.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 129. HSE FORM.XLS

வரும், 16ம் தேதி நடக்க உள்ள, குரூப்-1 தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வரும், 16ம் தேதி நடக்க உள்ள, குரூப்-1 தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.துணை கலெக்டர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, 16ம் தேதி, 33 மையங்களில், முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.விண்ணப்பித்த, தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து, தேர்வில் பங்கேற்கலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

image

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 128. HSE EXAM TIME RELAXATION FORM.PDF

TN FORMS | 128. HSE EXAM TIME RELAXATION FORM.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த 3 ஆண்டுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க 11600 பள்ளிகளிடம் அடுத்த மாதம் விசாரணை நடத்த கட்டண குழு முடிவு செய்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த 3 ஆண்டுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க 11600 பள்ளிகளிடம் அடுத்த மாதம் விசாரணை நடத்த கட்டண குழு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கான வினா படிவங்கள் பள்ளி கல்வி இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை முறைப்படுத்த 2009ல் கட்டண குழு அமைக்கப்பட்டது. 13 ஆயிரம் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய குழு நோட்டீஸ் அனுப்பியது. தனியார் பள்ளிகள் கட்டண குழுவிடம் வரவு செலவு கணக்கை ஒப்படைத்து விசாரணையில் பங்கேற்றன. 2010 மே மாதம் அந்த பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் 6400 பள்ளிகள் கட்டணத்தை ஏற்க மறுத்து மேல் முறையீடு செய்தன. அந்த பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் பள்ளிகளிடம் கட்டண குழு விசாரணை நடத்தியது. இதன்படி 2013ம் ஆண்டு வரைக்குமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது 2013ம் ஆண்டுக்கான கால வரம்பு முடிவடையும் நிலையில் உள்ளதால், 2013ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட 11600 பள்ளிகளுக்கு, 2014, 2015, 2016ம் ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.

இதையடுத்து, மேற்கண்ட பள்ளிகளுக்கான வினா படிவங்களை கட்டண குழு நேற்று பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட வினா படிவங்கள் கட்டண குழுவுக்கு வந்து சேர்ந்ததும், மார்ச் முதல் வாரத்தில் விசாரணை நடத்த கட்டணக் குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அழைப்பு கடிதங்கள் சில நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 11 February 2013

TN FORMS | 127. HS - HSS - UPGRADE MODEL PROPOSAL 2.PDF

TN FORMS | 127. HS - HSS - UPGRADE MODEL PROPOSAL 2.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 126. HRA SLAB.PDF

TN FORMS | 125. HOUSING LOAN - DEPARTMENT PERMISSION.PDF

TN FORMS | 124. HM SELF DETAIL FOR CONFIDENTIAL REPORT.PDF

TN FORMS | 123. HM NAME CHANGE TO BANK.DOC

TN FORMS | 122. HM CHARGE TAKEN OVER FORM.PDF

TN FORMS | 121. HIGHER STUDY PERMISSION PRO.PDF

"குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

"குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, டிசம்பரில், குரூப்-1 பணிகளுக்கான அறிவிப்பாணையை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், அருண்குமார் என்பவர், தாக்கல் செய்த மனு: முதல்நிலை தேர்வில், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், நடுவில், இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் தகுதி பெற, முதல்நிலை தேர்வு முக்கியம். இதில், தனித் திறன் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பாதகம் ஏற்படலாம்; எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: தேர்வு நடவடிக்கைகளை எளிமையாக்கவும், தரத்தை உயர்த்தவும், திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், சேர்க்கை தகுதியில் மாற்றம் கொண்டு வருவது, மாநில அரசு வசம் இல்லை. மனுதாரர், இனி மேல் தான், முதல்நிலை தேர்வில் கலந்து கொள்ளப் போகிறார். பொது அறிவு கேள்விகள் தவிர, ஒரு பதவியை வகிக்க, தனிச் சிறப்பு உள்ளதா என்பதை சோதிக்கும் வகையிலான தேர்வும் நடத்தப்படுகிறது. தனிச் சிறப்பு தொடர்பான கேள்விகளுக்கு, தனியாக மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தியதை, மனுதாரர் எப்படி எதிர்க்க முடியும் என, தெரியவில்லை. எந்த ஒரு பணியிலும், ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு, சரியான நடவடிக்கை, திறன் இருக்க வேண்டும். அந்தப் பணிக்கு தேவையான தகுதி இல்லாமல், அதில் அவரால் பணியாற்ற இயலாது. ஒரு பணியில் நியமிக்க, ஒருவரின் திறமையை சோதிப்பது அவசியம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, குரூப்-1 பணியிடம் என்பது, மாநில அரசுப் பணியில், உயர் பதவிகளை கொண்டது. எனவே, இந்தப் பணிகளில் நுழைவதற்கு, ஒருவரின் திறமையை சோதிப்பது என்பது, அரசு மற்றும் டி.என்.பி. எஸ்.சி.,யைப் பொறுத்தது. இதில், தலையிட முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 9 February 2013

TN FORMS | 120. HIGHER STUDIES PERMISSION FORM.DOC