Wednesday, 4 June 2014

மார்ச் 2014, மேல்நிலைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 09.06.2014 பிற்பகல் 1.00 மணிக்குள் பதிவிறக்கம் செய்வதுடன் மாற்றம் இருப்பின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

மார்ச் 2014, மேல்நிலைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று  (04.06.2014) முற்பகல் 10.00 மணி முதல் student.hse14rtrv.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling / Revaluation என்ற தலைப்பினை Click செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 09.06.2014 பிற்பகல் 1.00 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.



Tags :
tnschool news ,