Saturday, 25 October 2014

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக சிவில் சர்வீசஸ்மெயின் தேர்வு கால அட்டவணை வெளியீடு . அதன்படி மெயின் தேர்வு டிசம்பர் மாதம் 14-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைகிறது.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி நடத்தப்பட்டு தேர்வு முடிவு கடந்த 13-ம் தேதி வெளியானது. இந்த நிலையில், மெயின் தேர்வுக்கான கால அட்டவணையை மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று வெளியிட்டது. அதன்படி மெயின் தேர்வு டிசம்பர் மாதம் 14-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைகிறது. முதல் நாள் அன்று காலையில் கட்டுரைத் தாள் தேர்வும், பிற்பகல் ஆங்கில தேர்வும் நடைபெறுகிறது. டிசம்பர் 15-ம் தேதி காலையில் பொது அறிவு தாள் ஒன்றும், பிற்பகல் இரண்டாம் தாள் தேர்வும் அதைத்தொடர்ந்து, 17-ம் தேதி காலை பொது அறிவு தாள் 3-ம், மதியம் 4-ம் தாள் தேர்வும் நடைபெறுகின்றன. அதன்பிறகு 19-ம் தேதி காலையும், பிற்பகலும் விருப்பப் பாடங்கள் தேர்வுகளும் 20-ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழித்தாள் தேர்வுகளும் நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள் ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,