Tuesday, 14 October 2014

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15 புதன்கிழமை வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15 புதன்கிழமை வெளியிடப்படுகிறது. நவம்பர் 10-ந் தேதி வரை புதிய பெயர்களை சேர்க்கலாம். திருத்தம் செய்யலாம். ஜனவரி 5-ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர்
பட்டியல் தமிழ்நாடு முழுவதும் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடையும் ஆண்கள், பெண்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் பணி அக்டோபர் 15-ந் தேதியான நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. புதிதாக சேர்ப்பவர்கள் மட்டுமல்ல வாக்காளர் அடையாள அட்டையில் பிழை இருந்தால் அதை திருத்துவதற்கும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்காக தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாம்களுக்கு பொதுமக்கள் சென்றால் வரைவு வாக்காளர் பட்டியல் இருக்கும். அந்த பட்டியலைப்பார்த்து தங்கள் பெயர் சரியாக உள்ளதா? பிறந்த தேதி சரியாக உள்ளதா? பால் இனம் சரியாக உள்ளதா? உள்ளிட்ட பலவற்றை சரிபார்த்துக்கொள்ளலாம். இல்லையென்றால் அதற்கு உரிய படிவத்தை அந்த முகாமில் பெற்று அங்கேயே பூர்த்தி செய்து அவர்களிடம் கொடுக்க வேண்டும். இந்த முகாம் நவம்பர் 10-ந் தேதி வரை (வேலை நாட்களில் மட்டும்) நடைபெற உள்ளது.இவ்வாறு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை அச்சடிக்கப்பட உள்ளது. அந்த புதிய அட்டைகள் ஜனவரி 5-ந் தேதி வழங்கப்பட உள்ளது.ஏற்கனவே அடையாள அட்டை உள்ளவர்களுக்கு வண்ண அட்டை வழங்கப்படமாட்டாது.ஆலோசனை கூட்டம்இந்த வாக்காளர் அட்டை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டையில் நேற்று நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமை தாங்கி நடத்தினார்.இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வக்கீல் சேதுராமன், தி.மு.க. சார்பில் வக்கீல் கிரிராஜன், காங்கிரஸ் சார்பில் மாநில பொதுச் செயலாளர் சக்திவடிவேலு, தே.மு.தி.க. சார்பில் தலைமை நிலையச்செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ., நிர்வாகி ரவீந்திரன், பா.ஜ.க. சார்பில் ராகவன், பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நிர்வாகிகள் ரமணி, ஆறுமுகநயினார், தேசியவாத காங்கிரஸ் சார்பில் செந்தில்குமார், மகேந்திரபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பின் தி.மு.க. வக்கீல் கிரிராஜன் கூறியதாவது:-ஸ்ரீரங்கம் தேர்தல்வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கும்போது அதை பூத் ஏஜெண்டிடம் காண்பித்துவிட்டு இறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி இல்லாத கிராமங்களில் 200 அல்லது 300 வாக்காளர்கள் இருந்தாலும் அங்கு புதிதாக வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், சட்டசபை செயலாளரிடம் இருந்து முறையாக நோட்டிபிகேசன் வந்தபின்பு தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.18 வயதுதே.மு.தி.க. சட்ட மன்ற உறுப்பினர் பார்த்தசாரதி கூறுகையில், புதிய வாக்காளர் அட்டை தயாரிக்கும்போது கிராமங்களில் பெற்றோர்கள் வயது 18 என்று கூறுவதை வைத்து வாக்காளர் பட்டியல் தயாரிக்கக்கூடாது. அதை நீக்க வேண்டும். உண்மையில் 18 வயது நிரம்பி இருந்தால் மட்டுமே வாக்காளர் அட்டை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,