Saturday, 4 October 2014

2-ம் பருவ பாடப் புத்தகங்கள் அக்.7-ல் கிடைக்க பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதத்தில் 1 - முதல் 9-ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்ட முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் 3 பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. ஜூன் - செப்டம்பர் (முதல் பருவம்), அக்டோபர் - டிசம்பர் (இரண்டாம் பருவம்), ஜனவரி - ஏப்ரல் (மூன்றாம் பருவம்) என மூன்றாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கான பாடங் கள் தனித்தனியாக அச்சிடப் பட்டு மாணவர்களுக்கு வழங்கப் படுகின்றன. காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அக்டோபர் 6-ம் தேதி (திங்கள்கிழமை) பள்ளி கள் திறக்க இருந்தன. பக்ரீத் பண்டிகைக்காக திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளதால், பள்ளிகள் 7-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் 2-ம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள், நோட்டுகளை அன்றைய தினமே வழங்க பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டுவிட்டன.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,