Sunday, 19 October 2014

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக இரண்டாவது நாளாக தூத்துக்குடி, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு, நீலகிரி, கோத்தகிரி,குன்னூர், குந்தா வட்ட பள்ளிகளுக்கு விழுப்புரம், கடலூர், நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு,புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று (21.10.2014)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நாகை மாவட்டம் திருப்பூண்டியில் அதிகபட்சமாக14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 11 சென்டி மீட்டரும், பாபநாசத்தில் 10 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் தலா 9 சென்டி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,