Monday, 13 October 2014

The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2014 | 2014ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் திரோலுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் திரோலுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையின் பலம் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆய்வுக்கான இந்த
பரிசு வழங்கப்படுகிறது.சந்தை முறைப்படுத்துதல் மற்றும் சந்தை வலிமை பற்றிய அவரது ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக, ராயல் அகாடமி ஆப் சயின்ஸஸ் தெரிவித் துள்ளது. “நடப்பாண்டு நோபல் பரிசால் கவுரவிக்கப்படும் இரண்டாவது பிரெஞ்சுக் குடிமகனான ஜீன்   நமது காலத்தில் மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார நிபுணர்” என நோபல் பரிசு தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. சில பெரு நிறுவனங்கள் அல்லது ஏகபோகம் மிக்க ஒரே நிறுவனம், தொழிற்துறையின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. இவற்றை ஒழுங்குமுறைக்கு உட்படுத்த இயலாமல் போன தால், இவற்றின் ஆதிக்கம் அதிக மாகியுள்ளது. நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவது, பெரு நிறுவனங்கள் புதிய நிறுவனங்களை வாங்கி இணைத்துக் கொள்வது, தனிப் பட்ட ஒரு நிறுவனத்தின் சந்தை முற்றுரிமையை அரசு எவ்வாறு கட்டுப்படுத்தி, ஒழுங்குமுறைக்கு உட்படுத்துவது என்பது பற்றிய கொள்கை முடிவுகளை ழானின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பொருளாதாரத்துக்கான நோபல், வழக்கமான நோபல் பரிசுகளைப் போல 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்படுவதில்லை. ஸ்வீடனின் மத்திய வங்கி, 1968-ம் ஆண்டு இதனை உருவாக்கி, 1969-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பொரு ளாதாரத்துக்கான நோபல் பரிசு களில் அமெரிக்க நிபுணர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இக்காலகட்டத்தில் நோபல் பரிசு பெற்ற 20 பொருளாதார நிபுணர் களில் 18 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2014 was awarded to Jean Tirole "for his analysis of market power and regulation".


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,