Wednesday, 15 October 2014

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் 5450 குரூப் - "டி" பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பை சென்னை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 02/2013 தேதி: 21.09.2013 வெளியிடப்பட்டது.

1. A, B,T,Q,O,L,F,E ஆகிய ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பமாகும் பெயர்களுக்கு 02.11.2014 தேதி தேர்வு நடைபெறும்.
2. R,Y,H,N ஆகிய ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பமாகும் பெயர்களுக்கு 09.11.2014 தேதி தேர்வு நடைபெறும்.
3. K,M,V ஆகிய ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பமாகும் பெயர்களுக்கு 16.11.2014 தேதி தேர்வு நடைபெறும்.
4. C,I,S ஆகிய ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பமாகும் பெயர்களுக்கு 23.11.2014 தேதி தேர்வு நடைபெறும்.
5. U,W,X,Z,G,P,J,D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பமாகும் பெயர்களுக்கு 30.11.2014 தேதி தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வு எழுத தகுதியானவர்கள் மற்றும் தகுதி இழந்தவர்கள் பற்றிய முழுமையான விவரம் www.rrcmas.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு எழுத தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான அனுமதி கடிதம் அனுப்பப்பட்டு வருவதாகவும் சென்னை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அனுமதி கடிதம் கிடைக்காத பட்சத்தில் சென்னை ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தை நேரில் தொடர்பு கொண்டு அனுமதி கடிதத்தை பெற்றுக் கொள்ளவும்.
எழுத்துத் தேர்வுக்கான அனுமதி கடிதம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து இதர வேலைநாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை 044-28223170 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,