Wednesday, 8 October 2014

நீல ஒளி உமிழும் ‘எல்இடி’ கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் ஜப்பான் விஞ்ஞானி ஷுஜி நகமுரா, ஜப்பான் விஞ்ஞானி கள் இசமு அகாசாகி, ஹிரோஷி அமானோ ஆகியோருக்கு 2014-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் நீலநிற ஒளி உமிழும் டையோடு (எல்இடி)
கண்டுபிடிப்புக்காக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸஸ் இவ்விருதை அறிவித்துள்ளது. ஏற்கெனவே பச்சை மற்றும் சிவப்பு டையோடுகள் இருந்தாலும், அவற்றால் வெள்ளை நிற ஒளியை உருவாக்க முடியாது. நீல
The Nobel Prize in Physics 2014 was awarded jointly to Isamu Akasaki, Hiroshi Amano and Shuji Nakamura "for the invention of efficient blue light-emitting diodes which has enabled bright and energy-saving white light sources".

நிற ஒளி உமிழ்வு டையோடு (எல்இடி)களால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வெண்ணிற ஒளியைத் தரும் விளக்குகளை உருவாக்க முடியும். கணினி, தொலைக்காட்சி, அலைபேசிகளுக்கான எல்இடி திரை தொழில்நுட்பத்தில் இக் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. இசமு அகாசாகி (85), ஹிரோஷி அமானோ(54) ஆகியோர் ஜப்பானின் நகோயா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆவர். அமெரிக்கா வாழ் ஜப்பான் விஞ்ஞானி ஷூஜி நகமுரா (60) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இக் கண்டுபிடிப்பு தொடர்பாக, நோபல் பரிசு தேர்வுக் குழு, “இது 20 ஆண்டுகளுக்கு முந்தைய கண்டுபிடிப்பு என்றபோதும், வெண்ணிற ஒளியை உருவாக்கு வதில் புதிய வழிமுறையைக் கண்டுபிடிப்பதில் ஏற்கெனவே இதன் பங்களிப்பைச் செலுத்திவிட்டது” எனத் தெரிவித்துள்ளது. 1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் விஞ்ஞானிகள் இசமு அகாசாகி, ஹிரோஷி அமானோ, ஷூஜி நகமுரா ஆகியோர் குறைமின் கடத்தி மூலம் நீல ஒளிக்கற்றைகளை உற்பத்தி செய்து காட்டி, ஒளித் தொழில்நுட்பத்தில் முக்கிய மாற்றத்தை நிகழ்த்தினர்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,