Tuesday, 7 October 2014

பிராந்திய மொழிகளை போற்றும் விதம் தாய்மொழி வாரம்.

பிராந்திய மொழிகளை போற்றும் விதமாக ‘தாய்மொழி வாரம்’ கொண் டாடலாம் என்ற தமிழக பாஜகவின ரின் யோசனையை மத்திய ஏற் றுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தாய்மொழி வாரம் கொண்டாடுவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமென்று தெரிகிறது.

பாஜக தலைமையிலான புதிய அரசு, சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண் டும் என்று, ஜூன் 30-ம் தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையை சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுப்பியது. இதில் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இதன்படி அப்பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கொண்டாடும் விதமான நிகழ்ச்சிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு உருவானது. அதிமுக, திமுக மட்டுமன்றி பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள்கூட இந்த விஷயத்தை எதிர்த்தன. இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “சமஸ்கிருத வாரம் என்பது வெறும் கட்டுரை போட்டிதான்” என்று விளக்க மளித்தார். ஆனாலும், இதை தமிழக கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஆசிரியர் தினத்தை ‘குரு உத்ஸவ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கும் எதிர்ப்புகள் கிளம்பின. 

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்த தமிழக சூழலை விளக்கு வதற்காக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், சில வாரங்களுக்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்து பேசினார். அப்போது சமஸ்கிருத வாரம் போல் அந்தந்த மாநில மொழிகளையும் போற்ற ‘தாய்மொழி வாரம்’ கொண் டாடும் திட்டத்துக்கு ஸ்மிருதி இரானி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 
இது தொடர்பாக இல.கணேசன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: 

சமஸ்கிருதத்துக்கு முக்கியத் துவம் கொடுக்கப்படுவதுபோல் செம்மொழியாக உள்ள தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் தமிழ் செம்மொழி வாரத்தை கொண்டாட அனுமதி வழங்க வேண்டும். ஏனென்றால் மத்திய அரசின்கீழ் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழ் செம்மொழி வார கொண்டாட்டத்தை அந்த நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தலாம் என்று கோரிக்கைகள் விடுத்தோம். இதை கேட்ட ஸ்மிருதி இரானி, தமிழுக்கு மட்டும் தனியே கொண்டாடினால் மற்ற மொழி பேசுபவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். எனவே இந்தியாவிலுள்ள மொழிகளை கொண்டாடும் விதமாக தாய்மொழி வாரம் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யலாம் என்று உறுதியளித்தார். பிராந்தியங்களில் மொழி பாரம்பரியத்துக்கு தொடர்புடைய சில பண்டிகைகள் உண்டு. உதாரணத்துக்கு, தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அல்லது சித்திரை வருடப்பிறப்பினை சொல்லலாம். இவற்றில் ஏதோ ஒன்றில் தாய்மொழி வார கொண்டாட்டம் நடத்தலாம். இதேபோல் மற்ற மாநிலங்களிலும் மொழிகளுக்கு தொடர்புடைய பண்டிகைகளின்போது தாய் மொழி வாரம் கொண்டாட ஆலோசனைகள் நடந்து வருகிறது. இவை விரைவில் செயல்படுத்தப்படும். இதுகுறித்து ஸ்மிருதி இரானி உறுதியளித்துள்ளார். இந்நிலையில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையின் போது தமிழை போற்ற ‘தாய் மொழி’ வாரம் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,