Monday, 13 October 2014

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தேயிலைத் தோட்டக் கழகம் ,
பொதுத்துறை சர்க்கரை ஆலை ஆகியவற்றில் பணியாற்றும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ்மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும்டி பிரிவு பணியாளர்களுக்கும் 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசுதெரிவித்துள்ளது. மொத்தத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு 221 கோடியே 75 லட்சம் ரூபாய் போனஸ் ஆக வழங்கப்படும் என முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,