Wednesday, 22 October 2014

மழை விடுமுறை | முதல் ஆண்டு மாணவர்களின் நலன் கருதி மழைக்காக விடப்பட்ட விடுமுறை நாட்களுக்கு அவர்களுக்கு முழு வருகைப்பதிவு அளிக்குமாறு அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

கனமழை காரணமாக கடந்த 18 மற்றும் 20-ம் தேதியில் (சனி, திங்கள்) பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதில் பாலிடெக்னிக் கல்லூரிகளும் அடங்கும். பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலான வர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்
என்பதால் முதல் ஆண்டு மாணவர்களின் நலன் கருதி மழைக்காக விடப்பட்ட விடுமுறை நாட்களுக்கு அவர்களுக்கு முழு வருகைப்பதிவு அளிக்குமாறு அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வருகைப்பதிவு விவரங்களை ஆன்லைனில் வருகிற 24 முதல் 27-ம் தேதிக்குள் அனுப்புமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,