Wednesday, 30 April 2014

குரூப் 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்...ஏப்ரல் 30-ஆம் தேதி

குரூப்-2-ஏ பணிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2269 பணியிடங்களுடன் மேலும்  புதியதாக மேலும் 577 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது...
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 2-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்எ ம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 2-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.

Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,ANNAMALAI UNIVERSITY MBBS,BDS ADMISSION 2014-2015 NOTIFICATION
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 29 April 2014

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரியில் சென்டாக் கவுன்சிலிங்கை தாமதம் இல்லாமல் துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சென்டாக் கவுன்சிலிங்கை தாமதம் இல்லாமல் துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம், புதுச்சேரியில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதியன்று வெளியிடப்படும் என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

"பி.இ., பி.டெக். கவுன்சிலிங்கிற்கான அறிவிப்பு மே 2ம் தேதியன்று வெளியிடப்படும், மறுநாள் 3ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்" என, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதற்கிடையில், மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் அட்டவணையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளையும், தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்கும் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் தாமதமின்றி அறிவிக்கப்படுகிறது.

மேலும், சேர்க்கையும் உடனுக்குடன் நடத்தி முடிக்கப்படுகிறது. அதே சமயம் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங் புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் காலதாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. மேலும், பிராந்திய ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளும் எழுகிறது.

எனவே, தமிழகத்தைப் பின்பற்றி சென்டாக் கவுன்சிலிங்கை தாமதம் இல்லாமல் துவக்கவும், விரைவாக நடத்தி முடிக்கவும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவ மாணவிகள், பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இளங்கலை படிப்புக்கான விண்ணப்பங்கள், வரும் 12-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.

கோவையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. ராமசாமி, இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரும் 12-ம் தேதி முதல் வினியோகிக்கப்பட இருப்பதாகவும், 5 இளங்கலை பிரிவுகள் மற்றும் 8 தொழில்நுட்ப பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு புதிதாக 2 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன் மாதம் 7-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்திற்கு வந்துசேரவேண்டும் என திரு. ராமசாமி தெரிவித்தார்.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,AGRI ADMISSION
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார்.

தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார். மேலும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.. 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு குறித்து வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் ”இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது” என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் தளர்வு வழங்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என தொடரப்பட்ட வழங்கில் இது குறித்து வழக்கு தொடர்வதற்கு உரிய முகாந்திரம் இல்லை என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,TET FLASH NEWS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரும் மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரும் மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கும் நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.கலையரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்: சென்னை உயர்நீதிமன்றத்துக்கான கோடைக் கால விடுமுறையில் (மே மாதம் 1- முதல் ஜூன் மாதம் 1-ஆம் தேதி வரை) வழக்கு விசாரணைக்கான நீதிபதி அமர்வுகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

 அதில், மே 1 முதல் 11-ஆம் தேதி வரை நீதிபதிகள் ஆர்.சுதாகர் மற்றும் கே.கே.சசிதரன் ஆகியோர் தலைமையில் அமர்வு வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெறும். அதன் பிறகு இருவரும் தனியாக வழக்குகளை விசாரணை செய்வர். நீதிபதி சி.எஸ்.கர்ணன் குற்றவியல் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வார்.  மே 12 முதல் 18- ஆம் தேதி வரை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி கே.பி.கே.வாசுகி குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்வர்.

மே 19 முதல் 25-ஆம் தேதி வரை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.ரவிச்சந்திர பாபு ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி ஆர்.மகாதேவன் குற்றவியல் வழக்குகளையும் விசாரணை செய்வார்கள்.

 மே 26 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நீதிபதிகள் அருணா ஜெகதீசன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி ஜி.சொக்கலிங்கம் குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்வார்கள்.  மேலும், திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கலும், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வழக்கு விசாரணைகளும் நடைபெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
CHENNAI HIGH COURT SUMMER HOLIDAY
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன. இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இரண்டாமாண்டு தேர்வு அட்டவணை:

ஜூன் 11 - புதன்கிழமை - இந்தியக் கல்வி முறை

ஜூன் 12-வியாழக்கிழமை-கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-2

ஜூன் 13 - வெள்ளிக்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 2, இளஞ்சிறார் கல்வி-2

ஜூன் 14 - சனிக்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி -2

ஜூன் 16 - திங்கள்கிழமை - கணிதவியல் கல்வி -2

ஜூன் 17 - செவ்வாய்க்கிழமை - அறிவியல் கல்வி - 2

ஜூன் 18 - புதன்கிழமை - சமூக அறிவியல் கல்வி -2



முதலாமாண்டு தேர்வு அட்டவணை:

ஜூன் 20 - வெள்ளிக்கிழமை - கற்கும் குழந்தை

ஜூன் 21 - சனிக்கிழமை - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் -1

ஜூன் 23- திங்கள்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) -1, இளஞ்சிறார் கல்வி -1

ஜூன் 24 - செவ்வாய்க்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி - 1

ஜூன் 25 - புதன்கிழமை - கணிதவியல் கல்வி -1

ஜூன் 26 - வியாழக்கிழமை - அறிவியல் கல்வி-1

ஜூன் 27 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல் கல்வி-1
Tags :
D.T.ED TIME TABLE,D.EL.ED JUNE 2014 TIME TABLE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

செல்போன் சேவை அளிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலி சர்வீசஸ், ஏர்செல் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 3-ஜி சேவையை இதன் வாடிக்கை யாளர்கள் பெற முடியும்.

செல்போன் சேவை அளிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலி சர்வீசஸ், ஏர்செல் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 3-ஜி சேவையை இதன் வாடிக்கை யாளர்கள் பெற முடியும். தத்தமது வாடிக்கையாளர்கள் 3-ஜி சேவை ஒருங்கிணைப்பை நாடு முழுவதும் பெறுவதற்காக இம்மூன்று நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவ னங்கள் 3-ஜி சேவையை அளிக்க 13 இடங்களில் லைசென்ஸ் பெற்றுள்ளன. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் வசம் 9 இடங்களில் 3 ஜி சேவை அளிப்பதற்கான லைசென்ஸ் உள்ளது. இம்மூன்று நிறுவனங்களும் சேர்வதன் மூலம் மொத்தமுள்ள 22 இடங் களுக்குமான சேவையை இம்மூன்று நிறுவன வாடிக்கை யாளர்களும் பெற முடியும். ரிலையன்ஸ் நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், இமாசலப் பிரதேசம், பிஹார், ஒடிசா, அசாம், ஜம்மு காஷ்மீரின் வட கிழக்குப் பகுதிகளில் தொலைத் தொடர்பு வட்டாரங்களில் சேவை அளிக்கிறது. இந்த ஒப்பந் தத்தின் மூலம் இந்நிறுவன சேவை அல்லாத ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளில் சேவை அளிக்க முடியும். இதேபோல ஏர்செல் நிறுவனம் டிடிஎஸ்எல் நிறுவனத்துடன் சேர்ந்ததால் மகாராஷ்டிரம், குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் சேவை அளிக்க முடியும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதிக கட்டணம் உள்ள டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் சேவை அளிக்க டாடா மற்றும் ஏர்செல் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வாய்ப்பளிக்கும். 2013 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு 3.62 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடி பேர் 3 ஜி வாடிக்கையாளர்களாவர்.
Tags :
AIRCEL,RELIANCE,TATATELESERVICE,3G NETWORK
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணை வேந்தரை தேர்வுசெய்ய சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை முன்னாள் பேராசிரியர் டாக்டர் எஸ்.ஆழ்வார் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணை வேந்தரை தேர்வுசெய்ய சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை முன்னாள் பேராசிரியர் டாக்டர் எஸ்.ஆழ்வார் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பி.குணசேகரன், தமிழ்நாடு மாநில பிற்படுத்தப் பட்டோர் ஆணையத் தின் உறுப்பினர் சி.முருகதாஸ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதியான நபர்கள் துணை வேந்தர் பதவிக்கு தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் மே மாதம் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு என்று தேர்வுக் குழுவின் அமைப்பாளரான டாக்டர் குணசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags :
ANNAMALAI UNIVERSITY VC SELECTION COMMITTE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் .

அரசு துறைகளில் தட்டச்சர், சுருக் கெழுத்தர் பணிகளுக்கு கணினிப் பயிற்சி தொடர்பான ஆபீஸ் ஆட் டோமேஷன் சான்றிதழ் தேர்ச்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. (தேர்ச்சி இல்லாமல் அரசு பணியில் சேரும்பட்சத்தில் தகுதிகாண் பரு வத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும்). இந்த கணினி சான்றிதழ் பயிற்சி தேர்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கணினி சான்றிதழ் பயிற்சி தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 30-ம் தேதி ஆகும். அபராத கட்டணம் ரூ.5 செலுத்தி ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை www.tndte.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் அறிவித்துள்ளார்.
Tags :
www.tndte.com
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்சிஏ, எம்பிஏ இடங்களும் இந்த ஆண்டு முதல்முறையாக பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்சிஏ, எம்பிஏ இடங்களும் இந்த ஆண்டு முதல்முறையாக பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. 

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக். இடங்களும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன. 

பொது கலந்தாய்வு முறையில் மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக் கும் தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை. ஒரு விண்ணப்பம் அனுப்பினால் போதும். கட் ஆப் மார்க் வைத்து தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார் கள். அன்றைய நாளில் உள்ள கல்லூரிகளில் தங்களுக்கு விருப்ப மான கல்லூரியை தேர்வுசெய்து கொள்ளலாம். 

இதேபோன்றுதான் “டான்செட்” நுழைவுத்தேர்வு மதிப்பெண் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும் எம்இ., எம்டெக். எம்பிஏ, எம்சிஏ இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்இ, எம்டெக் இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட்டாலும் அங்குள்ள எம்சிஏ, எம்பிஏ. இடங்கள் மட்டும் கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக தனியாக நிரப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்சிஏ, எம்பிஏ இடங்களும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக மாநில தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். 

“டான்செட்” மதிப்பெண் அடிப்படையில் பொது கலந்தாய்வு மூலமாக எம்இ, எம்டெக். படிப்பு களில் ஏறத்தாழ 7,500 இடங்களும், எம்சிஏ படிப்பில் 2,200 இடங்களும் எம்பிஏ படிப்பில் 3,500 இடங்களும் நிரப்பப்படுகின்றன. 

இந்த ஆண்டு இடங்களின் எண்ணிக்கை சற்று மாறுபடலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்சிஏ, எம்பிஏ படிப்புகளில் எத்தனை இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
Tags :
ANNA UNIVERSITY NEWS,MCA,MBA COUNSELLING
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாடு முழுவதும் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்ட 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மறு ஆய்வு செய்யத் திட்டமிட் டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்ட 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மறு ஆய்வு செய்யத் திட்டமிட் டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 122 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த டாண்டன் குழு, அவற்றை மூன்று பிரிவுகளாக பிரித்தது. இதில், கடைசி பிரிவில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்த 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகா ரத்தை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை அளித்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப மையம், வேல்டெக் ரங்கராஜன் கல்லுாரி, பாரத் உயர்கல்வி மையம், சவீதா உயர்கல்வி மையம், சேலம் விநாயகா மிஷன், கற்பகம் தொழில்நுட்ப கல்லுாரி, டாக்டர் எம்ஜிஆர் கல்வி மையம் உள்ளிட் டவை அடங்கும். இதில், ஒரு பல்கலை உயர்கல்வி சிறப்பு மையம் என்று மாற்றிக் கொண்டது. 

இரண்டு பல்கலைக் கழகங்கள் நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை திரும்ப ஒப்படைத்து விட்டன. எஞ்சியுள்ள 41 கல்வி மையங்கள் குறித்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விக்ரம்ஜித் சென் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. யுஜிசி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “பட்டியலில் உள்ள 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மறு ஆய்வு செய்ய யுஜிசி திட்டமிட்டுள்ளது,” என்றார். இதற்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், “யுஜிசி, டாண்டன் குழு, அதிகாரிகள் குழு அளித்துள்ள மூன்று அறிக்கைகள் உள்ளன. எனவே, மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் அறிக்கைகளை வைத்தே முடிவு எடுக்கலாம்,” என்றார். இதுகுறித்து, மே 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags :
UGC NEWS,DEEMED UNIVERSITY
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டது. 

இதில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்குமட்டும், இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்துள்ளது. 600க்கும் அதிகமான தமிழ் ஆசிரியர்கள், பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம்உள்ளிட்ட, பல முக்கிய பாடங்களுக்கு இறுதி தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும்வெளியிடவில்லை.இதைக் கண்டித்து, முதுகலை தேர்வர்கள், நேற்று காலை, சென்னையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள், மேற்கண்ட பாடங்களுக்கு, இறுதி தேர்வு பட்டியலை, உடனடியாக வெளியிட வலியுறுத்தினர்.

இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: ஒரே போட்டித் தேர்வில், குறிப்பிட்ட பாடத்தை சேர்ந்தவர்கள் மட்டும், பணி நியமனம் பெற்று உள்ளனர். எங்களுக்கு இன்னும், தேர்வு இறுதி பட்டியலையே வெளியிடாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னை, உயர்நீதிமன்றத்தில், 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்' என, தெரிவித்தனர். ஆனால், எங்களுக்கு தெரிந்து, வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. வேண்டுமென்றே, டி.ஆர்.பி., இழுத்தடிப்பு வேலையை செய்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசு, இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க, முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Tags :
TRB PGT APPOINTMENT,TRB NEWS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விஐடி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் VITEEE-2014 நுழைவுத்தேர்வின் தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி வெளியிடப்படுகின்றது.

விஐடி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் VITEEE-2014 நுழைவுத்தேர்வின் தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி வெளியிடப்படுகின்றது. இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர VITEEE-2014 என்ற நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக ஏப்ரல் 9ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 4,197 சேர்க்கைக்கான இடங்கள் உள்ளது. இந்நிலையில் 1.93 லட்சம் பேர் நுழைவுத்தேர்வில் பங்கேற்றனர். ஏப்ரல் 28ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை மே 1ம் தேதி விஐடி பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
Tags :
VITEEE-2014 RESULT
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு இல்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில், ஆங்காங்கே நடந்த சிறு சிறு பிரச்சினைகள் குறித்தும் அதிகாரிகள் தொகுதி வாரியாக விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் தொகுதியில் ஒரு ஓட்டு பெட்டியின் சீல் உடைக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார் குறித்தும் விசாரிக்கப்பட்டது. இதில் அந்த தொகுதிக்கான தேர்தல் பார்வையாளரிடம் இருந்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தேர்தல் கமிஷனுக்கு வரவில்லை. தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆட்சேபனை தெரிவித்தது தொடர்பாக தேர்தல் பார்வையாளரிடம் புகார் மனு கொடுத்திருந்தால் அதை தேர்தல் பார்வையாளர் பரிசீலித்து முடிவை அறிவிப்பார். ஆனால் இதுவரை தமிழ் நாட்டில் எந்த தொகுதியிலும் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு தேர்தல் பார்வையாளர்கள் புகார் தராததால் மறு வாக்குப்பதிவுக்கு இடமில்லை. இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
Tags :
election news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 28 April 2014

கோடை விடுமுறையை கொண்டாட எங்கு செல்லலாம்?: இதோ டிப்ஸ்

கோடை விடுமுறையும் விட்டாச்சி... பாராளுமன்ற தேர்தலும் நடந்து முடிஞ்சிடுச்சி.

இப்போ அடிக்கிற கோடை வெயிலில் தப்பிக்க முடியாமல் தான் மக்களால் தினமும் திண்டாட வேண்டிய நிலை உள்ளது.

கோடை விடுமுறையை வழக்கம் போல் மக்கள் பல இடங்களுக்கு சென்று உற்சாகமாக கொண்டாடுவார்கள். அதேபோல் இந்த ஆண்டும் விடுமுறையை கழிக்க ஈரோடு மாவட்ட மக்கள் குடும்பத்துடன் புறப்பட்டு விட்டார்கள்.

இவர்களில் பலர் சென்னை, திருநெல்வேலி மற்றும் வெளியூர்களில் உள்ள தங்களின் உறவினர்கள் வீட்டுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளனர்.

சென்னையில் மெரீனா பீச், சென்னை அருகே மகாபலிபுரம், கிஷ்கிந்தா.. இப்படி பல சுற்றுலா தலங்களுக்கு நிச்சயம் ஒரு ரவுண்ட் அடிப்பார்கள்.

இன்னும் பலர் ஒரு நாள் அல்லது 2 நாள் சுற்றுலா கோடை ஸ்தலங்களுக்கு புறப்பட ஆயத்தமாகி விடுகிறார்கள். இப்போ அடிக்கிற வெயிலில் எந்த ஊருக்கு சென்றாலும் விரட்டி.. விரட்டி தான் வெயில் தாக்கும். அதனால் எந்த இடங்களுக்கு போவது? என மக்கள் யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்காக இதோ ஒரு சின்ன டிப்ஸ்:–

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அருகே உள்ள சுற்றுலா கோடை கால ஸ்தலங்கள் என்றால் ஊட்டி, ஏற்காடு மற்றும் கொல்லிமலை தான்.

இதில் ஊட்டிக்கு போனால் வெயிலின் அகோர பசியில் இருந்து ஒரளவு தப்பிக்கலாம். ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்களை ரசிக்கலாம். உற்சாகமாக ‘போட்டிங்’ போகலாம். மலை உச்சி சிகரமான தொட்டபெட்டா அழகையும் அதை தொட்டு கொண்டு செல்லும் மலை மேகக் கூட்டத்தையும் பார்த்து பரவசம் அடையலாம்.

இதேபோல் சேலம் மாவட்டம் ஏற்காடு மலைக்கு சென்றாலும் இதே உற்சாகத்தை கொண்டாடலாம். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சென்றால் மலையின் அழகையும், சல....சல...வென வெள்ளியை உருக்கி ஓடுவது போல சிறு...சிறு நீரோடைகளையும் பார்த்து மகிழலாம். மேலும் கொடைக்கானலும் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இடமாகும். அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வதே தனி அலாதிதான்.

இதெல்லாம் போன இடம் தான். போகாத இடம் எதுவும் உள்ளதா? என்று பலர் கேட்பது புரிகிறது.

ஏன்... நம்ம ஈரோடு மாவட்டத்திலேயே பல சுற்றுலா தலங்கள் உள்ளதே... வெயிலின் சீற்றத்தில் இருந்து ஒரளவு தப்பிக்க சத்தியமங்கலம் வனப்பகுதியான திம்பம்... ஆசனூருக்கு ஒரு ரவுண்ட் போய் விட்டு வரலாம்.

பவானிசாகர் அணைக்கு ஒரு ‘‘விசிட்’’ செல்லலாம். சுற்றி பார்க்க கண்ணை கவரும் பூங்கா.. வாய்க்கும் ருசியாக அணை எதிரே உள்ள பல கடைகளில் மீன்வறுவல்... மீன் குழம்பு சாப்பாடும் கிடைக்கும். ஒரு வெட்டு வெட்டி... ரவுண்ட் அடிக்கலாம்.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மற்றும் குண்டேரிபள்ளம் அணையின் அழகை ரசிக்க குடும்பத்துடன் செல்லலாம்.

மேலும் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சொக்கநாத ஈஸ்வரன் கோவில் இப்படி புகழ்மிக்க ஆன்மீக சுற்றுலா தலங்களும் நம் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.

தினம் ஒரு இடத்துக்கு சென்று வந்தாலே கோடை விடுமுறையை சந்தோஷமாக கழிக்கலாம்.

என்ன இப்போதே புறப்பட்டாச்சா...? ஜமாய்ங்க்!
Tags :
tour tips,edu news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மீண்டும் சூடு பிடிக்கும் இரட்டைப்பட்ட வழக்கு...

2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தம் முடிவடைந்த விட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது .

ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்குவருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.

1) 01.01.2012 முதல் தங்களுக்குறியseniority -ஐ வழங்க வேண்டும்

2)01.01.2012pannel -லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் ( மூன்று வருட பட்டபடிப்பு )நிலையிறக்கம் செய்ய வேண்டும்

3)01.01.2013pannel-இல் ஓராண்டு பட்டம் பெற்றவர்களை pannel -ல் சேர்த்து பதவியுயர்வு வழங்க வேண்டும்.அது வரை பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டு உள்ளதாக தெரிய வருகிறது.எனவே 01.01.2012 - pannel -ன் மூலம் பதவியுயர்வுபெற்றவர்களுக்கு நிலையிறக்கம் (கீழ் இறக்கம் )நிலை உருவாகி உள்ளது.01.01.2013pannelமற்றும் 01.01.2014pannel -இல் இடம் பெற்றவர்களுக்கும் சிக்கல் உருவாகி உள்ளது .ஓராண்டு பட்டம் பெற்றவர்களை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இறுதி வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்மென இரண்டு வருடங்களாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்துபவர்கள் விரும்புகின்றனர்.

எனவே அது தொடர்பான தகவல்களுக்கு கீழ் கண்ட mobile number -ஐ தொடர்பு கொள்ளவும் - 94432 15526, 99764 74082
Tags :
Double degree Case
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வருகிற 6–ந்
தேதி தொடங்குகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்த சலுகை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் அறிவித்தார். இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 150–க்கு 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.

ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல் 89 மதிப்பெண்கள் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 5 மையங்களில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் கூறுகையில், ‘‘5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே மாதம் 6–ந் தேதி தொடங்குகிறது. திருச்சியில் வாசவி வித்யாலாய பள்ளியில் இந்த பணி நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 1,086 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது. மே 12–ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடையும்’’ என்றார்.
Tags :
TNTET CV dates
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.இ. கலந்தாய்வு தொடர்பான விவரங்களை மாணவர்கள் எளிதாகத் தெரிந்து கொள்வதற்காக ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம்திட்டமிட்டுள்ளது.

பி.இ. கலந்தாய்வு தொடர்பான விவரங்களை மாணவர்கள் எளிதாகத் தெரிந்து கொள்வதற்காக ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம்திட்டமிட்டுள்ளது. பி.இ. கலந்தாய்வு கமிட்டி ஒப்புதல் கிடைத்தவுடன், இந்தபுதிய நடைமுறை அமலுக்குக் கொண்டுவரப்படும் என பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.2014-15 கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 3-ஆம் தேதி தொடங்குகிறது."எஸ்.எம்.எஸ். அலர்ட்': கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும் என்பதோடு, எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்கள் அளிக்கும் வசதி கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.அதாவது, கலந்தாய்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.இதற்காக விண்ணப்பத்தோடு அவர்களது செல்பேசி எண்ணும் பெறப்பட்டது. வழக்கமான அழைப்புக் கடிதம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் லிஸ்ட்ஆகியவற்றோடு இந்த எஸ்.எம்.எஸ். தகவல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நடைமுறை இந்த ஆண்டும் தொடரும் என்பதோடு, புதிதாக"டி.என்.இ.ஏ.' என்ற பெயரில் புதிதாக 3ஜி அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.இந்த இலவச அப்ளிகேஷனை மாணவர்கள் தங்களுடைய செல்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.பின்னர் விண்ணப்ப எண்ணை சமர்ப்பித்தால், கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்கின்றனர் பல்கலைக்கழக நிர்வாகிகள்.
Tags :
Anna University Engineering Admission Andriod Application
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரிசல்ட் வெள்ளிகள்.

மே மாதத்தில், தொடர்ந்து மூன்று வாரமும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமை வெளிவருவது, அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது. மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் எதிர்பார்க்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, மே மாதம் 9ம் தேதி, வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதைத் தொடர்ந்து, 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், அடுத்த வெள்ளிக்கிழமையான, 16ம் தேதி, ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, அதற்கடுத்தவெள்ளிக்கிழமையான, 23ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படி, தொடர்ந்து மூன்று வாரங்களும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமையாக அமைந்துள்ளது, பொதுமக்கள் தரப்பில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.ஓட்டு கேட்ட வேட்பாளர்கள் முதல், ஓட்டு போட்ட வாக்காளர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் அடுத்தடுத்த வெள்ளிக்கிழமையை, "ரிசல்ட்' தெரிந்து கொள்ளும் ஆவலுடன்எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
Tags :
SSLC RESULT,PLUS TWO RESULT,ELECTION RESULT.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பகுதி நேர ஆசிரியர்களுக்கு , பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு , பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் , அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் , பள்ளிகளில் 16 ஆயிரத்து 582 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு , 5000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.அரசு வேலை என்பதால் , பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் குறைந்த ஊதியமாக இருப்பினும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வாரத்துக்கு மூன்று நாட்கள் , பள்ளிகளில் கற்பிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதால் , தனியார் பள்ளிகளில் முழு நேரமாகவும் , பகுதி நேரமாகவும் பணி வாய்ப்பு கிடைப்பதில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு , அரையாண்டு , காலாண்டு விடுமுறையின்போது ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் , தேர்வுகளுக்கு முன்பு கூடுதல் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்திக்கொண்டு , முழு ஊதியத்தையும் வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.ஆனால் , மூன்று ஆண்டுகளாகியும் மே மாதத்தில் , கோடை விடுமுறை என்பதால் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் , ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சக ஆசிரியர்களை போன்று இவர்களுக்கும் , மே மாத ஊதியத்தை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில் ,'' பகுதி நேர ஆசிரியர்கள் எந்நேரத்திலும் , பணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். பகுதி நேரம் என்றாலும் , பல இடங்களில் தலைமையாசிரியர்களின் வற்புறுத்தலால் பள்ளிகளில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மே மாதத்தில் , ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால் , ஆசிரியர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். சக ஆசிரியர்களை போன்று , பகுதிநேர ஆசிரியர்களுக்கும் மே மாதத்தில் , ஊதியம் வழங்க வேண்டும் ,'' என்றார்.
Tags :
Part time teachers salary
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலைவாய்ப்பு இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் இணைப்பு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவுத் துறை "வெப்சைட்"டில் பொதுத்தேர்வு எழுதிய மாணவரின் தேர்வு முடிவும் இணைக்கப்படுவதால், பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு ஒரே மாதிரியான "சீனியாரிட்டி" பின்பற்றப்படுகிறது. அவ்வாறில்லாமல், "பிரவுசிங் சென்டர்"களில் வேலைவாய்ப்பு பதிவு செய்தால் மாணவரின் "சீனியாரிட்டி" தேதியில் மாற்றம் ஏற்படும்" என, வேலைவாய்ப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

 தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவு மே 23ம் தேதியும் வெளியாகிறது. இரண்டு ஆண்டுக்கு முன் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று வேலைவாய்ப்பு பதிவு செய்து வந்தனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கூட்ட நெரிசல், அலைக்கழிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் பலர் பொதுத்தேர்வு முடிவுகளை பதிவு செய்யவில்லை. 

இந்நிலையில், தேர்வுத் துறையும், வேலைவாய்ப்பு துறையும் இணைந்து பொதுத்தேர்வு மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவை, அந்தந்த பள்ளிகள் மூலமாக "ஆன் - லைனில்" பதிவு செய்யும் முறையை அமல்படுத்தின. தற்போது, பொதுத்தேர்வு முடிவுகளை வேலைவாய்ப்பு துறை வெப்சைட்டில் தேர்வுத் துறை இணைக்க உள்ளது. அதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் பிரத்யோகமான அடையாள, ரகசிய வார்த்தைகள் கொடுக்கப்பட உள்ளது. அதில், ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வுத் துறை வழங்கிய எண்ணை பதிவு செய்தால் மாணவரின் முழுவிவரங்களும் தெரிந்துவிடும். அதைக்கொண்டு, நடப்பு தேர்வு முடிவு, பள்ளிகள் மூலமாக வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்று, இருப்பரிமாண பட்டக் குறியீடு, கூடுதல் ரகசிய குறியீடுடன் சான்று வழங்கப்படும். 

தேர்ச்சியடைந்த மாணவர்களின் தேர்வு முடிவு, வேலைவாய்ப்பு பதிவுத் துறையுடன் இணைக்கப்படும். மாணவர் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு அட்டை வழங்கப்படும். தேர்வு முடிவு வெளியிட்ட தேதியை கணக்கில் கொண்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரே மாதிரியான சீனியாரிட்டி தான் பின்பற்றப்படும். "பிரவுசிங் சென்டர்"களில் வேலைவாய்ப்பு பதிவு செய்தால் எந்த நாளில் பதிவு செய்தாரோ, அந்த நாளில் தான் "சீனியாரிட்டி" எடுத்துக் கொள்ளப்படும். எனவே, தேர்ச்சியடைந்த மாணவர்கள் கண்டிப்பாக அந்தந்த பள்ளி அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரில் சென்று தங்களது வேலைவாய்ப்பை பதிவு செய்து கொள்ள வேண்டும். நடப்பாண்டு தேர்ச்சியான 100 சதவீத மாணவரின் வேலைவாய்ப்பு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
Tags :
Student employment Registration
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மே 14-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம் குறித்த அரசு அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) வெளியிடப்படுகிறது.

மே 14-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை விநியோகிக்க மருத்துவக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மே 3 முதல் பி.இ. விண்ணப்பம்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 9-ஆம் தேதி வெளியாகின்றன. பிளஸ் 2 பாடத் திட்டத்தில் கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகியவற்றை முக்கிய பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள் பி.இ. படிப்பையும், உயிரியல்-வேதியியல்-இயற்பியல் ஆகியவற்றை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்த பெரும்பாலான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளையும் தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது.

எனினும் கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பொருத்து உயிரியல் படித்த மாணவர்கள்கூட பி.இ. படிப்பைத் தேர்வு செய்வது உண்டு.

பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 3-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் விநியோகிக்க உள்ளது.

2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழகத்தில் மொத்தம் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இவற்றில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 2,555; இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய 15 சதவீத இடங்கள், அதாவது 383 எம்.பி.பி.எஸ். இடங்கள் போக மீதமுள்ள 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரியவை ஆகும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000-த்தையும் சேர்த்து ஆண்டுக் கட்டணம் ரூ.12,290தான். இந்த இடங்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கலந்தாய்வு நடைபெறும்.

900 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்படும் 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஒரே விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து வழக்கம்போல் ஒரே விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்தாலே போதுமானது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கிடைக்காத மாணவர்களுக்கு, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பி.டி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.
Tags :
mbbs admission,medical counselling 2014-2015,tn mbbs seats
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 73.67 சதவீத வாக்குகள் பதிவு விரிவான விவரம்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். 39 தொகுதிகளிலும் இறுதி வாக்குப்பதிவு பட்டி யலையும் அவர் வெளியிட்டார். வாக்குப்பதிவு தொடர்பாக இறுதிசெய்யப்பட்ட தகவலின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 73.67 சதவீதம் ஆகும். ஆண் வாக்காளர்களில் 73.49 சதவீதம் பேரும் பெண் வாக்காளர்களில் 73.85 சதவீதம் பேரும் மற்றவர்கள் (திருநங்கைகள்) 12.72 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். அதிகபட்ச அளவாக தருமபுரி தொகுதியில் 81.07 சதவீதமும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 60.4 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண் வாக்காளர்களில் தருமபுரியில் அதிகபட்சமாக 81.58 சதவீதமும் பெண் வாக்காளர்களில் அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 81.91 சதவீதமும் வாக்களித்துள்ளனர். தபால் ஓட்டுக்காக சுமார் 2 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. தபால் வாக்குகளையும் சேர்த்தால் வாக்குப்பதிவு சதவீதம் 0.5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கக் கூடும். சென்னை மாவட்டத்தில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 61.83 சதவீதம் ஆகும். ஆண்கள் வாக்குப்பதிவு 63.59 சதவீதமாகவும், பெண்கள் வாக்குப்பதிவு 60.09 சதவீதமாகவும், மற்றவர்களின் (திருநங்கைகள்) வாக்குப்பதிவு 2.29 சதவீதமாகவும் இருந்தது. ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 64.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்கள் 66.2 சதவீதம், பெண்கள் 62.73 சதவீதம் ஆகும்.


Tags :
Lok Sabha General election news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே அல்லது ஜூன் மாதம் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, இடமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு காலியிடங்கள் குறித்த பட்டியல் ஆன்லைனில் காண்பிக்கப்படும். பணிமூப்பு, முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு விருப்பமான பள்ளியை தேர்வுசெய்துகொள்வார்கள். அவர்களுக்கு அங்கேயே இடமாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டு விடும். கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் ஆசிரியர் இடமாறுதலுக்கு ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இந்த கலந்தாய்வை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி முடிவடைந்ததும். மே மாதம் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
Tags :
Teachers Counselling News,Tamil Nadu Teachers Counselling News,Tamil Nadu Teachers Transfer Application 2014-2015
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரும் கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்புக்கென தனிப்பிரிவு தொடங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

வரும் கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்புக்கென தனிப்பிரிவு தொடங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத் தில் எம்பிஏ படித்த மாணவர் களுக்கு டி.சி.எஸ்., ஹெச்.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் தேர்வுகளை நடத்தி, 60 மாணவர் களை தேர்வு செய்துள்ளன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. துணைவேந்தர் ஆர்.தாண்டவன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

பின்னர், அவர் பேசியதாவது: சென்னை பல்கலைக்கழகத் தில் 73 துறைகள் உள்ளன. இவற்றில், முக்கியமான துறை களில் ஒன்றாக மேலாண்மை படிப்பு துறையும் விளங்குகிறது. தற்போது 60 மாணவர்கள் பணி ஆணைகளைப் பெற்றுள்ளனர். கிராமப்புற விவசாய குடும்பத்தில் இருந்து அதிகமான மாணவர்கள் வந்து படிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது முக்கியமானதாக இருக்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நடவடிக்கைகளை பல் கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இந்த வளாகத்தில் வேலைவாய்ப்புக் கென தனிப் பிரிவு ஒன்று புதிதாக தொடங்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறை மாணவர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் இதேபோல், ஹெல்த்கேர் மையமும், மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்க சிறப்பு மைய மும் உருவாக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் பி.டேவிட் ஜவஹர், மேலாண்மை படிப்புத் துறை தலைவர் டாக்டர் பி.டி.சீனிவாசன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ராஜேந்திர மால் லோதா (64) இன்று பொறுப்பேற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ராஜேந்திர மால் லோதா (64) பொறுப்பேற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் 41-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற அவருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் நேற்று (சனிக்கிழமை) ஓய்வு பெற்றார்.

இதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.லோதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், 5 மாத காலத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்த லோதா, 1973-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் இணைந்தார். 1994-ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு மே 13-ஆம் தேதி பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், அதே ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் அவர் பொறுப்பேற்றார்.

நிலக்கரி சுரங்க முறைகேடுகள் குறித்து சிபிஐ நடத்தி வரும் விசாரணையை மேற்பார்வையிடும் குழுவுக்கு தலைமை வகித்து வந்த இவர், அரசியல் கட்சிகளின் பிடியிலிருந்து சிபிஐ-யை விடுவிக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளில் முக்கியப் பங்காற்றியவர்.

நீதிமன்றங்களின் மேற்பார்வையில் நடைபெறும் சிபிஐ வழக்குகளில், சாட்சிகளை விசாரிக்க அரசின் அனுமதி தேவையில்லை என்ற பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது, இவரது தலைமையிலான நீதிமன்ற அமர்வுதான் என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பாக, நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களை அரசுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என அதிரடியாக உத்தரவிட்டதும் இவர்தான்.

பாதுகாப்புப் படையினரின் ஜனநாயக உரிமை பாதிக்கப்படாத வகையில், சண்டை நடைபெறாத ராணுவ நிலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள வீரர்கள் தங்களது தொகுதிகளில் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி லோதா தலைமையிலான நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்திருந்ததும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக மின் வாரியத்தின் நஷ்டம் ரூ.45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கடந்த 2005-ம்ஆண்டுக்குப் பிறகு 2011-ம் ஆண்டுவரை மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதன்காரணமாக 2011-ம் ஆண்டு வரை மின் வாரியத்துக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மின் வாரியம் திவாலாகும் நிலையில் இருந்ததால் வங்கிகள் அதற்கு கடன் கொடுப்பதை நிறுத்தின.

இதைத் தொடர்ந்து 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மின் துறையை வளப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்படி, மின் வாரியத்தின் கடன் தொகைக்கு தமிழக அரசே உத்தரவாதம் கொடுத்தது. மேலும், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் திட்டம் ஆகியவற்றின் மூலம் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை மின் வாரியத்துக்கு நிதி கிடைத்தது.

மின் வாரிய பங்குகளும் தனியாருக்கு விற்கப்பட்டன. அத்துடன் 2012-ல் மின் கட்டணம் 37 சதவீதம் உயர்த்தப்பட்டது. நஷ்டத்தை சமாளிக்க, தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதன்பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக மின் வாரியத்துக்கான அரசின் மானியம் மட்டும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் மின் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மின் வாரியத்தின் இழப்பு ரூ.45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நிலைமையை சரிசெய்ய, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆண்டுக் கணக்கையும் மின் கட்டணம் குறித்த மறுஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு 15 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்த அறிக்கையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரிகள் விரைவில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நஷ்டத் தொகை, தற்போது 75 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்ததற்கு பல காரணங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

சமீபகாலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிலக்கரி மற்றும் நாப்தா விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. இதனால் புதிய மின் திட்டங்களுக்கு அதிக நிதி செலவிட வேண்டியுள்ளது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் நஷ்டம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 26 April 2014

பொறியியல் படிப்புக்கு மே 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கு மே 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 570 பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள பி.இ., பி.டெக். இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என சுமார் 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) மூலம் நிரப்பப்படும். இதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும். இதற்காக துணை வேந்தர் எம்.ராஜாராம் தலை மையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மே 3 முதல் விண்ணப்பம் இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு தேதி, விண்ணப்பம் வழங்கப் படும் நாள், கடைசி தேதி உள்ளிட்ட விவரங்களை அண்ணா பல் கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறிய தாவது: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு நாளிதழ்களில் மே 2-ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்ப படிவங்கள் மே 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு எப்போது? விண்ணப்பதாரர்களுக்கு ரேண்டம் எண் வழங்கும் நாள், ரேங்க் பட்டியல் வெளியிடும் நாள், கலந்தாய்வு தொடங்கும் தேதி ஆகியவை பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிட வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தடை நீடிக்கும்-தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் மக்களவை தேர்தல்நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில்தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால் அதிகாரிகளை நேரடியாக சந்திக்கவோ, புதிய அறிவிப்புகள்எதனையும் வெளியிடவோ கூடாது என்றும் தேர்தல் ஆணையம்கூறியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது, மேலும் வேட்பாளர்கள் ஜூன் 15ம் தேதிக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தில்லியிலிருந்து வரும் தேர்தல் பார்வையாளர்களை வேட்பாளர் செலவுக் கணக்கை தணிக்கை செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தமிழகத்தில் 2,518 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்குகளில், மே 16ம் தேதிக்குள் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்  நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு  போராடினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு தேர்வு வைத்து பணி  நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிலும் சிலர் தேர்ச்சி பெறவில்லை. 

எனவே அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதைத்தொடர்ந்து கம்ப்யூட்டர்  ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம்  என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, இனிமேல் கம்ப்யூட்டர்  ஆசிரியர்களை அரசு பள்ளிகளில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு  அடிப்படையில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக 1,000  கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்  தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்போதும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி  தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் சில வித  ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடஒதுக்கீடு  அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அதுபோல புதிதாக  கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 1,000 பேர் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு  அடிப்படையில் பணி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு  தேர்தல் முடிந்த பின்னர் வர உள்ளது.இந்த தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன. இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன. இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம்  வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி  நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என 400-க்கும் மேற்பட்ட  நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் முதலாம்  ஆண்டில் 9 ஆயிரம் பேரும், இரண்டாம் ஆண்டில் 8 ஆயிரம் பேரும் படித்து  வருகின்றனர். இதில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 11 முதல்  18 வரையிலும், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 20 முதல் 27  வரையிலும் நடைபெறும். தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை  நடைபெறும்.

இரண்டாமாண்டு தேர்வு அட்டவணை:  ஜூன் 11 - புதன்கிழமை - இந்தியக் கல்வி முறை ஜூன் 12-வியாழக்கிழமை-கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-2 ஜூன் 13 - வெள்ளிக்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 2, இளஞ்சிறார் கல்வி-2 ஜூன் 14 - சனிக்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி -2  ஜூன் 16 - திங்கள்கிழமை - கணிதவியல் கல்வி -2 ஜூன் 17 - செவ்வாய்க்கிழமை - அறிவியல் கல்வி - 2 ஜூன் 18 - புதன்கிழமை - சமூக அறிவியல் கல்வி -2

முதலாமாண்டு தேர்வு அட்டவணை:  ஜூன் 20 - வெள்ளிக்கிழமை - கற்கும் குழந்தை ஜூன் 21 - சனிக்கிழமை - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் -1 ஜூன் 23- திங்கள்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) -1, இளஞ்சிறார் கல்வி -1 ஜூன் 24 - செவ்வாய்க்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி - 1 ஜூன் 25 - புதன்கிழமை - கணிதவியல் கல்வி -1 ஜூன் 26 - வியாழக்கிழமை - அறிவியல் கல்வி-1 ஜூன் 27 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல் கல்வி-1
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Union Bank of India Recruitment 2014: 42 Specialist Officers Posts

Union Bank of India is commonly known with its short name i.e. UBI. In the present days, Union Bank of India has declared a advertisement to recruit 42 candidates under its jobs, vacancies & recruitment project 2014.  So, it is a great opportunity given by Union Bank of India for those candidates who are desired to make career in Union Bank of India. Candidates can download the official advertisement of  Union Bank of India from then link given below under the head of reference.

The bank regularly held various recruitment exams to fill up open vacancies in all over branches in India. So, the candidates who are interested to do job in a bank as a officer or manager having a good opportunity to do job in Union Bank of India. The candidates should read the following information carefully to know the procedure for application and selection. This page is exclusive only for the Union Bank of India Recruitment 2014 projects. So, you can bookmark without any doubt to know the latest vacancies open in the bank. The aspirants who are waiting for the UBI Recruitment should not miss this great opportunity. But for those who are not preparing for the exam should also apply and start preparing from today. The aspirants must posses the following eligibility criteria as fixed by the bank but don’t worry if you are not eligible for the post, you can visit our Bank Jobs section and all government jobs 2014 section.


Union Bank of India Recruitment 2014 for the 42 posts of Specialist Officers: With the most proactive and upbeat modes the bank which is being serving from the date 11th Nov 1919 is the Union Bank of India. The economic growth is being unvaryingly and uniformly achieved with e helping hand of banks like these.

Union Bank of India had announced to make the selection and unoccupied seats are divided among the posts whose detail is as below:

2 posts of Economist Grade II
40 posts of Security Officer Grade I

Age limit: 

The requirement of the accurate aptitude is being felt at the most by any of the institute that is being making the placement of the applicants. Union Bank of India had mentioned that to have the proper eligibility the age factor which is being decided is the 21 years to the maximum age 35 years. This relaxation in the age is further permissible to the applicants who belong to SC, ST by 5 years, 3 years to the OBC candidates and by 10 years to the PWD applicants.

Educational Criterion Set: Union Bank of India had set the particular educational need for the applicants. The requisite from the applicants under the post is to be passed in the post graduation with the aggregate marks of 55% and have the possession of the graduation degree which is being mandatory to be passed with the summative marks of 60%. The additional requirement which is being associated with the applicants is the completion of the computer course in the awareness and Office Automation.

Fees Schedule: The suitable payment have to make by the applicants if wants to sort out the registration. Under the structured plan the fee schedule is being summed up as per the category. Applicants under the category General and OBC are made the payment of Rs. 600 along with the intimation charges of Rs. 100. Applicants other than this category are required to make the payment of the intimation charges of Rs. 100 only.

Selection Method: The expertise and proficiency of the applicants will be firstly judged via the written examination that covers the very general topics like awareness, reasoning and English language. Eligible applicants from test will make the move on for the group discussion and this process is to further proceed for the personal interview session.

Scheme to submit an application: Applicants wishing to apply for the post make the usage of the official website of Union Bank of India and need to compile the online arranged application. Print out of application has to be retained to use at the future selection process.

Important Date:

21st April 2014: Date from which the process of the online submission of the application and payment of fee will get initiated.
5th May 2014: Last date for making the registration online as well for the payment of the fee.
June 2014: The month in which the written examination is under the thought process to be conducted.
Important Link:

The recruitment notification is being required at most to get the complete association of rules and regulations and this is available at the web portal below:


To apply for the post online the connection which is needed is being mentioned by the Union Bank of India as below:
Apply Online Through Online Application Form
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரம்பு மீறிய வருவாய் துறை; வறுத்தெடுத்த ஆசிரியர்கள்

சிவகங்கையில் தேர்தல் பணியில் கிட்டதட்ட 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் 20 சதவீத ஆசிரியர்கள் சமுதாய கூடத்தில் அவசர உதவிக்காகவும், மாற்று பணிக்காகவும் தடுத்து வைக்கப்பட்டனர். இதில் 80 சதவீதம் பெண் ஆசிரியர்கள். இச்சமுதாய கூடத்தில் இயற்கை உபாதை கழிக்க கூட வசதி செய்து தரப்படவில்லை. இருந்தாலும் கூட தேச பணிக்காக அனைத்தையும் பொறுத்து கொண்ட ஆசிரியர்கள் பொறுமை காத்தனர். இதில் வருவாய் துறையை சார்ந்த ஒரு ஊழியர் தன்னை இந்திய தேர்தல் ஆணையர் போல் கற்பனை செய்துகொண்டு மைக்கில் வார்த்தைகளை உபயோகிப்பதும், பெண் ஆசிரியர்களை மிரட்டுவதும் என்ற தோரணையில் நடந்து கொண்டார்.

ஒரு கட்டத்தில் பெண் ஆசிரியர்களை பார்த்து உங்களுக்கு கொடுக்கும் மதிப்பூதியம் தண்டம் என்றும் வாய் கூசும் வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார். தகவலறிந்த நாம் அந்த குறிபிபட்ட நபரை தேடியபொழுது ஜீப்பில் மாயமாகி விட்டார். அதன் பின் வந்த அலுவலர்களிடம் நாம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். அந்த அநாகரிகமான நபரை காப்பற்ற வருவாய் துறை தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தியது. நம்முடைய கோபம் அதிகமானது. அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக மண்டபத்திற்கு வெளியில் கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். நம்மைப்பற்றி தரக்குறைவாக பேசிய வருவாய் அலுவலர் உடனடியாக இங்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தோம். நம்மை எள்ளி நகையாடிய அந்த நபர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் போரடிக் கொண்டிருந்த வேளையில் மேல்நிலைப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இது யாருக்கோ நடந்த சம்பவம் போல் மதிப்பூதியம் பெறுவதில் முனைப்பு காட்டியது அங்கு குழுமியிருந்த ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செய்தி உடனடியாக செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பானது. நம்முடைய போராட்டம் மிக கடுமையானது. கோஸங்கள் விண்ணை பிளந்தது. நிலைமை கட்டுங்கடங்காமல் போகவே சிவகங்கை தாசில்தார் உடனடியாக விரைந்து வந்தார்.

தாசில்தாரும் தன்னுடைய சகாவை காப்பாற்றும் விதமாக விசயத்தை மழுங்கடிப்பு செய்ய முயன்றார். கோபமுற்ற நாம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டோம். பெண் ஆசிரியர் சகோதரிகளும் குறிப்பாக சிங்கம்புணரி பெண் ஆசிரியர்களும் தாசில்தாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் மருதுபாண்டியர் வளாகம் முழுவதும் எதிரொலித்து. இறுதியாக தன்னுடைய துறையின் தவறை உணர்ந்த அதிகாரி இந்த குறிபிட்ட நபர் காரைக்குடி அவசர தேர்தல் பணிக்காக சென்று விட்டதாகவும் அவருக்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் கூறினார். அதன் பின் மாவட்ட தேர்தல் பணி அலுவலரும் நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். அந்த நபருக்கு உடனடியாக விளக்கம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டதாக நம்மிடம் தெரிவித்தார். பின்னர் ஆசிரியர்கள் கலைநது சென்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை அடிமை போல் நடத்துவதை வருவாய்துறை வருங்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி

அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே உள்ள பால்காரர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி(வயது48).அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன், சசிகலா(22) என்ற மகள் உள்ளனர். பூங்கொடிக்கு வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் பணி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் தும்பேரி சென்றார். 

அங்கு நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்டார். ஓட்டுப்பதிவு எந்திரங்களை பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் எடுத்து செல்ல நள்ளிரவு ஆனது. இதனையடுத்து வேகமாக பணிகளை முடித்து விட்டு அந்த வாக்குச்சாவடியில் இருந்த அனைவரும் ஊருக்கு செல்ல வாணியம்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு பூங்கொடி அரக்கோணம் ரெயில்கள் நிற்கும் இடத்துக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை நோக்கி வேகமாக வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் பூங்கொடி மீது மோதியது. ரெயில் என்ஜினீல் சிக்கிய ஆசிரியை உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலின் ஒருபகுதி ரெயிலில் தொங்கியபடி சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதனால் ரத்தம், சதையுமாக அவரது உடல் சிதறியது. இதனை பார்த்து அவருடன் வந்த ஆசிரியர்கள் திடுக்கிட்டு அலறினர். 

இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசிரியை உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை பூங்கொடியின் மகள் சசிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 4–ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. பூங்கொடியும் அவரது கணவரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். திருமண மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் பூங்கொடி இறந்ததால் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எம்.எஸ். மூலம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 3-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 8.78 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தேர்வர்கள் தங்களது பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்: www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in.

இவற்றில் www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி ஸ்மார்ட் போன் மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள்: மாணவர்கள் எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவுகளை மே 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் அறிந்து கொள்ளலாம். அதற்காக 09282232585 என்ற எண்ணுக்கு கீழ்க்கண்டவாறு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும். TNBOARD space Register No space DOB in DDMMYYYY என்ற அடிப்படையில் எஸ்.எம்.எஸ். செய்யலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்: ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 

இந்த அரசு பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களில், பணிமூப்பு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள், முப்படையினரின் வாழ்க்கை துணை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், இதய நோயாளிகள், கணவன்-மனைவி இருவரும் பணியாற்றுபவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் இடமாறுதல் பொது இடமாறுதலின்போது எந்தெந்த பள்ளிகளில் காலியிடங் கள் உள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களை தேர்வுசெய்வார்கள். வருடாந்திர பொது இடமாறுதல் நீங்கலாக, நிர்வாக நலன் கருதி அவ்வப்போது இடமாற்றங்கள் செய்யப்படும். சென்னை உள்பட முக்கிய இடங்களில் ஆசிரியர் காலியிடங் கள் மறைக்கப்பட்டு அரசியல், நிர்வாக சிபாரிசு அடிப்படையில் வேண்டியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது என்றும், இதற்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகி றார்கள். 

தென்மாவட்டங்களுக்கு இடம் மாறிச்செல்ல எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க ஒரு சில ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப் படுகிறது. ரகசிய கணக்கெடுப்பு இத்தகைய சூழலில், கடந்த திமுக ஆட்சியி்ல் (2006-2011) தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர் இடமாறுதல் குறித்து ரகசிய கணக்கெடுப்பு நடத்த அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திமுக ஆட்சிக்காலத் தில் நடந்த ஆசிரியர் இட மாறுதல் குறித்த விவரங்களை கணக்கெடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதா வும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் கணக்கெடுப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரிட மிருந்து அதிகாரப்பூர் வமாக உத்தரவு ஏதும் அனுப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்கள் ஏமாற்றம்:தேர்தல் பயிற்சி பெற்றவர்களுக்கு பணம் இல்லை; பணியிலும் குழப்பம்

தேர்தல் பணிக்காக 3 நாள் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர்கள் உரிய பணம் வழங்கவில்லை. தேர்தல் பணிக்கான உத்தரவிலும் குழப்பம் இருந்ததால் பல இடங்களில் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் அதிகாரி உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த 3 நாள் பயிற்சியில் பங்கேற்ற பல ஆசிரியர்களுக்கு உரிய பணம் வழங்கப்படவில்லை. 

இதுதவிர தேர்தலுக்கு முதல்நாள் இரவுதான் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு தேர்தல் பணிக்கான இடங்களை கண்டுபிடித்து செல்வதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர். கலெக்டர்கள் வழங்கிய உத்தரவில் பல குழப்பங்கள் இருந்ததால் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்ல முடியாமல் பல ஆசிரியர்கள் திரும்பினர். மேலும் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டிய ஆசிரியர்களுக்கு வாகன வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. வாக்குச் சாவடிகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற இடவசதியும் செய்யப்படவில்லை. உணவும் பிரச்னைதான். இதேபோல தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் ஆதங்கப்பட்டனர். 

மேலும் படிவம் 12பி மற்றும் 12 படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுத்த ஆசிரியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யவில்லை என்ற குறை உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இதுபோல் பாதிக்கப்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியர்கள், கலெக்டர்களிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து பயிற்சிக்கான பணம் வழங்கவும், தபால் வாக்களிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14 வரை விண்ணப்பிக்கலாம்,'' என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச்சில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்கள், எந்த பாடத்திற்கும், விடைத்தாள் நகல் கேட்டோ, மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள், மே 9 முதல், 14 வரையிலான தேதிகளில், மாலை, 5:00 மணி வரை (ஞாயிறு தவிர), தாங்கள் படித்த பள்ளி மூலமாகவே விண்ணப்பிக்கலாம்; தனித் தேர்வு மாணவர்கள், தேர்வெழுதிய மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் கேட்கும் மாணவர், அதோடு கூடவே, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், மறு மதிப்பீடு அல்லது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் விவரம்: விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு, 550 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் செலுத்த வேண்டும். இதை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் செலுத்த வேண்டும். மறுகூட்டல் எனில், மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடத்திற்கு, 305 ரூபாய்; இதர பாடங்களுக்கு, 205 ரூபாய் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இதை, மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தான், விடைத்தாள் நகல்களை, இணையதளம் வழியாக, பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறியவும் முடியும். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் நாள், அதற்கான இணைய தள முகவரி, பின்னர் அறிவிக்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 25 April 2014

பிளஸ் 2 தேர்வு முடிவு, வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு, வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் மாணவ, மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து, முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம் என்றும், ஸ்மார்ட் போன், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்போர் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மாணவர்கள் பயின்ற அந்தந்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டுமென செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 24 April 2014

மக்களவைத் தேர்தலையொட்டி இன்று அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி இன்று அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை ஆணையர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித் துவச் சட்டம் பிரிவு 135(பி)-ன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (ஐ.டி. நிறுவனங்கள் உள்பட) உணவு நிறுவனங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் (தினக்கூலி/ தற்காலிகம்/ ஒப்பந்தப் பணியாளர்கள் உள்பட) தேர்தல் நாளான ஏப்ரல் 24-ம் தேதி (இன்று), அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தகவல் ஏற்கெனவே ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில அமைப்புகள் விடுமுறை அளிக்காமல் அனுமதி மட்டும் அளிப்பதாக, தொழிலாளர் துறைக்கு தகவல் வந்துள்ளது. எனவே, மேற்கூறிய அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுடைய தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘டெட் ' தேர்வில் கூடுதலாக தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் குறைக்கப் பட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புக் கடிதம் ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டது. இணையதளத்தில் தங்கள் பதிவுஎண்ணை குறிப்பிட்டு பதி விறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். யாருக்கும் தபால் மூலம் அழைப் புக்கடிதம் அனுப்பப்பட மாட்டாது. ஏற்கெனவே கடந்த ஜனவரி 20 முதல் 26-ம் தேதி நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள், தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்காத வர்கள் ஆகியோருக்கு தற் போதைய சான்றிதழ் சரிபார்ப் பின் கடைசி நாளில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 2-ல் பாலிடெக்னிக்குகள் மீண்டும் திறக்கப்படும். விடுமுறை காலத்தில், தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தவறாமல் தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் அறிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உங்கள் வாக்குச்சாவடியை கண்டறிவது எப்படி?

நீங்கள் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள சுலபமான வழி உள்ளது. பொது மக்கள் EPIC என டைப் செய்து இடைவெளி விட்டு, தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 9444123456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். சிறிது நேரத்தில் வாக்காள ரின் பெயர், அவர் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும், அந்த வாக்குச்சாவடி யின் முகவரி ஆகிய தகவல்கள் வாக்காளரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்-2 நேர்காணல் அல்லாத பணிகளில் உள்ள காலியிடங் களுக்கு 3-வது கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப்-2 நேர்காணல் அல்லாத பணிகளில் உள்ள காலியிடங் களுக்கு 3-வது கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

 இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2011-2013-ல் அடங்கிய குரூப்-2 பதவிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 4.11.2012 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப் பட்டது. இதில் நேர்காணல் அல்லாத பணிகளில் எஞ்சியுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஏப்ரல் 28-ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்ட 197 பேரின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அழைப்புக்கடிதம் விரைவு தபால் மூலம் தனித் தனியே அனுப்பப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்தும் அழைப்புக்கடிதத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்குறிப்பிட்ட நாளன்று காலை 8.30 மணியளவில் கலந்தாய்வுக்கு வந்துவிடுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத் தப்படுகிறார்கள். 

விண்ணப்பதாரர்கள் கலந் தாய்வுக்குப் பரிசீலிக்கப்படும் போது காலிப்பணியிடங்கள் உள் ளதைப் பொறுத்தே அனுமதிக்கப் படுவார்கள். எனவே, கலந்தாய் வுக்கு அழைக்கப்படும் அனை வருக்கும் பணிநியமனம் வழங்கப் படும் என்பதை உறுதிகூற இயலாது. கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப் படமாட்டாது. ஆதரவற்ற விதவைகள், முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர் களுக்கான காலியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு பின்னர் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கப்படும் என்பதை உறுதிகூற இயலாது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள்,பொறியியல் கல்லூரிகளைப் போல,பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் “நாக்” (National Assessment and Accreditation Council-NAAC) தர அந்தஸ்தை கட்டாயமாக்கி யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள்,பொறியியல் கல்லூரிகளைப் போல,பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் “நாக்” (National Assessment and Accreditation Council-NAAC) தர அந்தஸ்தை கட்டாயமாக்கி யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

“நாக்” என்று அழைக்கப்படும் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் அமைப் பானது பல்கலைக்கழக மானியக்குழு வின் (யுஜிசி) ஓர் அங்கம் ஆகும். இது, நாடு முழுவதும் உள்ள கலை- அறி வியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங் கள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து ஏ, பி, சி., டி என தர அந்தஸ்து வழங்குகிறது. 

இதற்கு குறிப்பிட்ட கல்வி நிறுவனத் தின் செயல்பாடுகள், பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல் மதிப்பீடு, ஆசிரியர் களின் தரம், ஆராய்ச்சி, உள்கட்ட மைப்பு வசதி, நிர்வாகம், நிதிநிலை, மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தர அந்தஸ்து வழங்கப்படும். இது 5 ஆண்டுகளுக்கு செல்லும். குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் நிறை-குறைகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும், யுஜிசி உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து நிதி உதவி பெறவும் நாக் தர அந்தஸ்து பெரிதும் உதவும். 

இந்த நிலையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைப் போல, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் நாக் தர அந்தஸ்தை கட்டாயமாக்கி யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் தர அந்தஸ்துபெறத் தகுதியுள்ள கல்லூரிகளை கணக்கெடுக்கும் பணியில் மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தமிழகத்தில் 41 அரசு பாலிடெக் னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 406 தனியார் பாலிடெக்னிக்குகள் உள்ளன. இவற்றில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் டிப்ளமா படிப்பு படிக்கின்றனர். நாக் அமைப்பிடமிருந்து வந்த அறிவிப்பை அடுத்து, நாக் தர அந்தஸ்து பெறத் தகுதியுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளின் தகவல் தொகுப்பை தயாரிக்கும் பணியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

இதுதொடர்பாக அனைத்து பாலிடெக்னிக் முதல்வர்களுக்கும் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் அனுப்பியுள்ள உத்தர வில், கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு, வழங்கப்படும் படிப்புகளின் தரம், அவை தர அங்கீகாரம் பெற்ற படிப்புகளா என்பன உள்ளிட்ட விவரங்களை உடனடியாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB