Thursday, 31 July 2014

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற உள்ளனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியலும் விரைவில் வெளியாகும்.

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற உள்ளனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியலும் விரைவில் வெளியாகும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கும்பகோணத்தில் 2004-ம் ஆண்டு நிகழ்ந்த பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில், அந்தப் பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.51,65,700 அபராதமும் 8 பேருக்கு 5 ஆண்டு, ஒருவருக்கு 2 ஆண்டு கடுங்காவல், விதித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி முகம்மது அலி புதன்கிழமை தீர்ப்பளித்தார். 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.

கும்பகோணத்தில் 2004-ம் ஆண்டு நிகழ்ந்த பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில், அந்தப் பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.51,65,700 அபராதமும் விதித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி முகம்மது அலி புதன்கிழமை தீர்ப்பளித்தார். 11 பேர் விடுவிக்கப்பட்டனர். கும்பகோணம் காசிநாதன் தெருவில் இருந்த கிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 16.7.2004 அன்று காலை 10.30 மணியளவில் சமையல் அறையில் பற்றிய தீ மேலே இருந்த வகுப்பறைகளுக்கும் பரவி 94 குழந்தைகளின் உயிரைப் பறித்தது. மேலும், 18 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர். 

இது தொடர்பாக பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட 24 பேர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 5.7.2005 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த எம்.பழனிச்சாமி, வட்டாட்சியராக இருந்த எஸ்.பரமசிவம், தொடக்கக் கல்வித் துறை இயக்குநராக இருந்த ஆர்.கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டனர். 

இந்த வழக்கு ஒவ்வொரு நீதிமன்றமாக மாறிக்கொண்டே இருந்ததால் வழக்கு விசாரணை தடைபட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போதுதான் இந்த வழக்கு இன்னும் முடிவடையாதது உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து வழக்கை இந்த ஆண்டு ஜூலை 31-க்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகம்மது அலி முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணை ஜூலை 17-ல் முடிவுற்றது. இந்த வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரும் தீர்ப்பு நாளான புதன்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராயினர். 

வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அப்போதைய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவ லர்கள் கே.பாலகிருஷ்ணன், மாதவன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி) வி.பாலசுப்பிரமணியன், பள்ளி ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி ஆணையர் எஸ்.சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் கே.முருகன் ஆகிய 11 பேரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி முகம்மது அலி அறிவித்தார். 

இதைத் தொடர்ந்து 2 மணி நேரம் கழித்து மீண்டும் நீதிமன்றம் கூடியபோது மீதமுள்ள 10 பேருக்கான தண்டனைகளை நீதிபதி அறிவித்தார். இதன்படி, பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு(85) ஆயுள் தண்டனையும் ரூ.51,65,700 அபராதமும் விதிக்கப்பட்டது. இவரது மனைவியும் பள்ளித் தாளாளருமான சரஸ்வதி(81), பள்ளி முதல்வர் சாந்தலட்சுமி(52), சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி(49), சமையலர் வசந்தி(52) ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், கட்டிடப் பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு(70) 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதமும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.பாலாஜி (68), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம் (59), கண்காணிப்பாளர் தாண்டவன்(66), மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் தனி உதவியாளர் ஜி.துரைராஜ் (67) ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி முகம்மது அலி தீர்ப்பளித்தார். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 30 July 2014

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு -13 | 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு School Diary with Calendar.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் 4 போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, அதாவது School Diary with Calendar 3 கோடி ரூபாய் செலவில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு- 5 முதல் 12 வரை

5.வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் என்னால் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தினால் அரசுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

6.அனைத்துப் பள்ளிகளிலும் 100 விழுக்காடு கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பு பணி எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, கழிவறை வசதிகள் இல்லாத 2,057 பள்ளிகளுக்குக் கழிவறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. கழிவறைகளை கட்டிக் கொடுத்தால் மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி அக்கழிவறைகளை சுத்தமாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாக, கழிவறைகளை பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.

7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தரமான கட்டணமில்லாக் கல்வி வழங்குவதோடு, விலையில்லா பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், கிரையான்கள், வரைபடப் புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, 3 சீருடை, காலணி, ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1 ஆம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகள் வழங்கவும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத் திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகள் வழங்கவும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைப் பயிற்சி ஏடுகள் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். 

8. தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 74 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும். 

9. சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித் திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும் இத்திட்டம் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

10. குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதோடு, கல்வி பயில்வதற்கேற்ற இனிய சூழல் தேவை என்பதை கருத்தில் கொண்டு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 72 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 1,175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியே 270 கழிப்பறைகளும் கட்டித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

11. 2013-14 ஆம் ஆண்டு 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,638 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், 22 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 9,641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சியும், 14,997 குழந்தைகளுக்கு உறைவிட வசதியின்றி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

12. சிறப்புக் கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, 31 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சிகள், உதவும் உபகரணங்கள், அதாவது Assistive Devices  ஆகியவை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 


Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு-4 | 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு-3 | 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், 760 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக, சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 2 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு-2 | 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும்.

2009 ஆம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமைக்கப்பட வேண்டும். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு-1 | 128 புதிய தொடக்கப் பள்ளிகள்.

கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.பி.பி.எஸ். படிக்கும் ஏழை மாணவிக்கு கல்வி கடன் வழங்கவேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிக்கும் ஏழை மாணவிக்கு கல்வி கடன் வழங்கவேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், சி.மீனாட்சி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் ஏழை ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கடந்த 2009-ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்தேன்.ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 560 வீதம் 4 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். 5-வது ஆண்டில் ரூ.1.96 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை தெரிந்தவர்களிடம் கடனாக பெற்று கட்டிவிட்டேன். ஆனால், அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால், பாரத ஸ்டேட் வங்கியில், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், வங்கி நிர்வாகம் எனக்கு ரூ.4 லட்சம் மட்டும் கடன் வழங்கியது.எனவே, எனக்கு முழு கட்டணத்தையும் கடனாக வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உட்பட்ட எஸ்.சி., எஸ்.டி. குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்கிடும் என 2012-ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கல்விக் கட்டணத்தை அரசே வழங்குவதால், முழு கட்டணத்தையும் மனுதாரருக்கு வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், அந்த அரசாணை 2012-ம் ஆண்டுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 2009-ம் ஆண்டு முதலே எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். எனவே கடன் வழங்க வங்கி நிர்வாகம் மறுக்க முடியாது. மனுதாரர் புதிதாக கடன் கேட்டு விண்ணப்பம் செய்யவேண்டும். அந்த விண்ணப்பத்தை வங்கி நிர்வாகம் 2 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் என்ஜினீயரிங் இடங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன.1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகக் கிடக்கின்றன.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைகிறது. என்ஜினீயரிங் இடங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன. கலந்தாய்வு முடிவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக் கிடக்கும் நிலைமை உள்ளது.என்ஜினீயரிங் கலந்தாய்வுதமிழ்நாடு முழுவதும் உள்ள 541 என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பி.இ. சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த கலந்தாய்வுக்கு கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் 2 லட்சத்து 4 ஆயிரத்து 79.அந்த இடங்களுக்கு கடந்த ஒரு மாதமாக பொது கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து கலந்தாய்வில் கலந்துகொண்டு மதிப்பெண் எடுத்ததற்கு ஏற்ற வகையில் கல்லூரியையும், பி.இ. படிப்பில் குரூப்பையும் தேர்ந்து எடுத்து செல்கிறார்கள்.முதல் இடம்மெக்கானிக்கல் பிரிவை 19 ஆயிரத்து 418 மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுத்துள்ளனர். இது கலந்தாய்வில் முதல் இடம் வகிக்கிறது. அடுத்து எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவு 2-வது இடத்தில் உள்ளது. அந்த பிரிவை 15 ஆயிரத்து 653 பேர் எடுத்துள்ளனர். சிவில் பிரிவை 12 ஆயிரத்து 262 பேர் தேர்ந்து எடுத்திருக்கிறார்கள்.இந்த கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைகிறது. அன்று கட் ஆப் மதிப்பெண் 200-க்கு 77.5 வரை அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 26 பேர். அவர்களில் 37 ஆயிரத்து 619 பேர் வரவில்லை. இது 31.6 சதவீதம். கலந்தாய்வுக்கு வந்துவிட்டு இடத்தை தேர்ந்து எடுக்காதவர்கள் 324 பேர். கலந்தாய்வு இன்னும் 6 நாட்கள் தான் நடைபெற உள்ளன. 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பும் கலந்தாய்வு முடிகிற அன்று கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 79 இடங்களில் 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கும். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக்கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர பல கல்லூரிகளில் 1 அல்லது 2 மாணவர்களே சேர்ந்துள்ளனர்.ஆனால் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேராத சில கல்லூரிகளில், கல்வி கட்டணத்தை குறைப்பதால் நிர்வாக ஒதுக்கீட்டில் கணிசமான மாணவ-மாணவிகள் சேர்ந்ததாக கூறப்படுகிறது. கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைந்தாலும் அதற்கு முன்பாகவே 1-ந் தேதி பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குகின்றன.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் சென்னையில் புதன்கிழமை (ஜூலை 30) தொடங்குகிறது.

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் சென்னையில் புதன்கிழமை (ஜூலை 30) தொடங்குகிறது. இளங்கலை கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்சி.), பி.டெக். (உணவு தொழில்நுட்பம்), பி.டெக். (கோழியின உற்பத்தி) ஆகிய படிப்புகளுக்கான கவுன்சலிங் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை தொடங்குகிறது. பி.வி.எஸ்சி. படிப்புக்கு 30, 31-ம் தேதிகளிலும், பி.டெக். படிப்புகளுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதியும் கவுன்சலிங் நடைபெறுகிறது. இதற்கான கட் ஆப் மார்க், கால அட்டவணை விவரங்களை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tanuvas.ac.in) தெரிந்துகொள்ளலாம். கவுன்சலிங்குக்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் உரிய கட் ஆப் மதிப்பெண் உள்ள மாணவர்கள் குறிப்பிட்ட நாளில் தேவையான சான்றிதழ்களுடன் கவுன்சலிங்கில் நேரடியாக கலந்துகொள்ளலாம். கவுன்சலிங்குக்கு வரும் மாணவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னரே வந்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங் களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா வியாழக்கிழமை (ஜூலை 31) மாலை 4 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்க இருப்பதாக இளங்கலை கால்நடை படிப்பு தேர்வுக்குழு தலைவர் எம்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன. கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. மதுரையை சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களைநிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2008ல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வில் ஆசிரியர் அனுபவத்திற்கு 15 மதிப்பெண், பி.எச்டி., எம்.பில். படிப்புக்கு9 மதிப்பெண், ஆராய்ச்சி படிப்புக்கு 5 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண் என்று மொத்தம் 39 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மதிப்பெண் கணக்கிடும் முறை சட்ட விரோதமானது. எனவே, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார். ‘2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் முடிந்து விட்டன. தற்போது, நியமன முறைகளை ரத்து செய்தால் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களை விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

நாட்டை உலுக்கிய விபத்து தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி நடந்தது. அன்று நடைபெறப் போகும் அசம்பாவிதத்தை அறியாமல் வழக்கம்போல குழந்தைகளும், சிறுவர்களும் குதூகலமாக பள்ளிக்கு சென்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி தான் அது. இந்த பள்ளியில் அன்று மதிய உணவிற்காக சமையல் செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் பிடித்த தீ, பள்ளி கட்டிடத்திற்கும் வேகமாக பரவியது.

பள்ளியின் மேல்மாடியில் இயங்கி வந்த கூரை வேயப்பட்ட வகுப்பறை கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் வேகமாக வெளியேற போதிய இடவசதியும் அங்கு இல்லை. இதனால் அந்த அறையில் இருந்த 94 குழந்தைகள் தப்ப முடியாமல் உடல் கருகி மடிந்தார்கள். 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்து, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர்.
தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்திய இந்த கொடூர விபத்து தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். குறுகலான அந்த கட்டிடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தது. 3 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 700 மாணவ-மாணவிகள் படித்துவந்தனர். அங்கு போதிய பாதுகாப்பு வசதியும், தீயணைப்பு கருவிகளும் இல்லாதது தெரியவந்தது.

அந்த பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிசாமி, பள்ளி தாளாளரான அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பி.பழனிச்சாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய 24 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

அவர்கள் மீது 304 (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்), 120பி (சதிச்செயல்), 338 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல்) மற்றும் சிறுவர் நீதி சட்டம், தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டம், மாநகராட்சி சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் 488 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடக்கக்கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.விபத்து நடந்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் காயத்துடன் உயிர்தப்பிய குழந்தைகள், பலியான குழந்தைகளின் பெற்றோர், அப்போதைய கலெக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட 230 பேர் சாட்சியம் அளித்தனர்.அரசுதரப்பு சாட்சிகள் விசாரணை மார்ச் 28-ந் தேதி முடிவடைந்தது. பின்னர் இருதரப்பு வக்கீல்கள் வாதம் நடைபெற்றது. 22 மாதங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 17-ந் தேதி முடிவடைந்தது.

இந்த கொடூர சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி தீர்ப்பை வழங்குகிறார். இந்ததீர்ப்பை நாடே பரபரப்புடன் எதிர்பார்த்து இருக்கிறது.இந்த விபத்தில் காயமடைந்து உயிர்தப்பிய குழந்தைகளின் தழும்புகளும் மறையவில்லை. உயிர்நீத்த குழந்தைகளின் நினைவுகளும் அவர்களது பெற்றோர் மனதில் இருந்து நீங்கவில்லை.இந்த தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கூறும்போது, ‘‘எங்கள் குழந்தைகள் இறந்தபோது தொலைந்துபோன எங்கள் சந்தோஷம் இதுவரை திரும்ப கிடைக்கவில்லை. தீ விபத்துக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த தீர்ப்பு, பாதுகாப்பு இல்லாமல் மோசமான பள்ளிகளை நடத்தும் நிர்வாகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்’’ என்றனர்.இன்று தீர்ப்பு கூறப்படுவதையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கல்வி அதிகாரிகள் உள்பட 21 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்கள். அதோடு தீர்ப்பை எதிர்பார்த்து ஏராளமானவர்களும் நீதிமன்றத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர். வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதி தேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 28 July 2014

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் முதுகலை கல்வியியல் (எம்.எட்) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஜூன் 30-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பி.எட். பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மட்டுமே இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள். பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையம், உறுப்புக் கல்லூரிகள், அனைத்துப் பயிற்சி மையங்கள், படிப்பு மையங்களில் ரூ.500-க்கான வங்கி வரைவோலையை அளித்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்களை பல்கலைக்கழக வலைதளத்தின் http://www.bdu.ac.in/cde_admission.php மூலம் பதிவிறக்கம் செய்து கொள்பவர்கள் ரூ.500-க்கான வங்கி வரைவோலையையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் அளிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசிநாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 0431-2407027,28,54.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 27 July 2014

பள்ளிக்கல்வித்துறையில் 15 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதலும் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் அளித்து பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


பள்ளிக்கல்வித்துறையில் 15 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதலும் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் அளித்து பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

மாவட்ட முதன்மை அலுவலர்கள் மாறுதல்:

  1. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், 
  2. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கஸ்தூரிபாய் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  3. நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கடலூருக்கும், 
  4. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி திருச்சிக்கும், 
  5. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் வேலூருக்கும், 
  6. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் சேலத்துக்கும், 
  7. கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் சென்னைக்கும் (எஸ்எஸ்ஏ), 
  8. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) சுபாஷினி திண்டுக்கல்லுக்கும், 
  9. வேலூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் சுப்பிரமணியன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும், 
  10. விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(எஸ்எஸ்ஏ) சுவாமிநாதன் விழுப்புரத்துக்கும் (எஸ்எஸ்ஏ), 
  11. சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கணேசமூர்த்திநீலகிரிக்கும், 
  12. நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) முருகன் திருப்பூருக்கும், 
  13. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கோபிதாஸ் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  14. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) பூபதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராகவும், 
  15. ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் சீதாலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ) மாற்றப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு விவரம்:

  1. சென்னை ஐஎம்எஸ்சில் பணிபுரிந்து வந்த அனிதா, வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), 
  2. தூத்துக்குடி டிஇஓ ரத்தினம், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்விஅலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), 
  3. திண்டுக்கல் ஐஎம்எஸ்சில் பணிபுரிந்து வந்த பால்ராஜ், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), 
  4. பட்டுகோட்டை டிஇஓ நாகேந்திரன், கரூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), 
  5. கிருஷ்ணகிரி டிஇஓ துரைசாமி, திருநெல்வேலி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), 
  6. திருவண்ணாமலை டிஇஓ கணேசன், பெரம்பலூர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  7. பழனி டிஇஓ கலையரசி, திருச்சி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  8. அறந்தாங்கி டிஇஓ தாமரை, நாமக்கல் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  9. சிவகங்கை டிஇஓ ரவிக்குமார், நீலகிரி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  10. கடலூர் டிஇஇஓ குணசேகரன், ஈரோடு கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  11. கடலூர் டிஇஓ மல்லிகா, கோயம்புத்தூர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  12. உத்தமபாளையம் டிஇஓ ஜெயலட்சுமி, தேனி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  13. அரியலூர் டிஇஓ கணேசன், புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  14. தூத்துக்குடி டிஇஓ செந்தமிழ்ச்செல்வி, நாகப்பட்டினம் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  15. தென்காசி டிஇஓ வசந்தி, சிவகங்கை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

இதற்கான உத்தரவை தமிழக பள்ளிக் கல்வி துறைநேற்று பிறப்பித்துள்ளது.




Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 26 July 2014

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 809 பேருக்கு ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 809 பேருக்கு ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2013-2014ம் ஆண்டு குரூப் 4 தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டதில் 1395 பேர் பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவ தற்கான கலந்தாய்வு இணைய தளம் வாயிலாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 809 பேர் பங்கேற்றனர். இவர் களுக்கு அவரவர் முகவரியில் குறிப்பிட்டி ருந்த மாவட்டத்தில் இருந்த காலிப் பணியிடங்களை தேர்வு செய்து அதற்கான பணி நியமன ஆணைகளை வெள்ளிக் கிழமையே பெற்றுக்கொண்டனர். மேலும் பணியிடங்களை தேர்வு செய்யாமல் உள்ளவர்களுக்கு அவரவர் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது.மருத்துவக் கல்லூரிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட கவுன்சலிங் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி நடைபெற்றது. இந்த கவுன்சலிங்கில் 2,606 இடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் மாணவ, மாணவிகள் சேராததால் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 14 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 16 பிடிஎஸ் இடங்கள், 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரி களில் அரசு ஒதுக்கீடான 25 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகரிக்கப்பட்ட 50 இடங்கள் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகரிக்கப்பட்ட 25 இடங்கள் என மொத்தம் 175 எம்பிபிஎஸ் இடங் களுக்கும் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) வழங்கியது. இதேபோல 18 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 1,020 பிடிஎஸ் இடங்கள் கிடைத்தன. இதையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் மட்டும் மொத்தம் 253 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 1036 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: இந்த இரண்டு கட்ட கவுன்சலிங்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரப்பப் பட்டுவிட்டன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்ட 15 சதவீதம் இடங்களில் ஏதாவது திரும்பி கிடைத்தாலோ, இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் தேர்வான மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் சேராமல் இருந்தாலோ, தனியார் கல்லூரிகளுக்கு புதிதாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அனுமதி வழங்கினாலோ செப்டம்பர் முதல் வாரத்தில் மூன்றாம் கட்ட கவுன்சலிங் நடத்தப்படும். இல்லை என்றால், மூன்றாம் கட்ட கவுன்சலிங் நடைபெறாது. மருத்துவக் கல்லூரிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 25 July 2014

தமிழகம் முழுவதும் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வின் அதிகாரபூர்வ கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி-ஆல் வெளியிடப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் 79 காலியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 20-ந்தேதி குரூப்-1 முதல்நிலைத்தேர்வு நடத்தப் பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்த விளக்கங்களை உரிய ஆவணங்களுடன் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு ஜூலை 31-ந்தேதிக்குள் அனுப்புமாறும், அதன்பிறகு வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கிளிக் செய்யவும்...
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 24 July 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார். "மத்திய அரசின் கீழ் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தற்போது வாரத்தில் ஐந்து வேலை நாள்கள் உள்ளன. அதை வாரம் ஆறு நாள்களாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. அதுபோன்ற கோரிக்கைகளையோ, யோசனையையோ மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. அதே போல் ஈட்டிய விடுப்பு, சாதாரண விடுப்பு ஆகியவற்றை உயர்த்தும் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை' என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி (திண்டுக்கல் தொகுதி) கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார். அதாவது, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படியும், 23-8-2010 நாளிட்ட தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் அறிவிக்கையின் அடிப்படையில் 1 முதல் 8 வகுப்பு வரை நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அரசு அதிகாரம் பெற்ற அமைப்பால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், தேர்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண் 60 சதவீதம் இருக்க வேண்டும் எனவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அரசாணை நிலை எண் 181, நாள் 15-11-2011-ன்படி தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வினை நடத்தும் முகவாண்மையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் 12-7-2012 அன்று தகுதித்தேர்வை நடத்தியது, இதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 448 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 0.34 சதவீதம் ஆகும்.

தேர்ச்சி விகிதம் மிக குறைந்த அளவே இருந்ததால், ஆசிரியர் தேர்வு வாரியம் 14-10-2012 அன்று துணைத் தகுதித்தேர்வினை நடத்தியது. இதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதியதில், 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2.99 சதவீதம் ஆகும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ளவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் 17-8-2013 மற்றும் 18-8-2013 ஆகிய தேதிகளில் தகுதித் தேர்வினை நடத்தியது. இதில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர்களில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிய 4 லட்சத்து 311 பேரில் 16 ஆயிரத்து 922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் என்பதை இடஒதுக்கீட்டு பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் குறைத்து நிர்ணயம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, அரசாணை நிலை எண் 25, பள்ளி கல்வித்துறை நாள் 6-2-2014-ல், 60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைத்தும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முகமதியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய தேர்வர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் அல்லது 82 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்தும் ஆணை வெளியிடப்பட்டது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட இச்சலுகையினால் 17-8-2013 மற்றும் 18-8-2013 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் ஒன்றில், 17 ஆயிரத்து 996 பேர்களும், தாள் இரண்டில் 25 ஆயிரத்து 187 பேர்களும் ஆக மொத்தம் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்த 29 ஆயிரத்து 518 பேர்களுடன் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 183 பேர்கள் ஆக மொத்தம் 72 ஆயிரத்து 701 பேர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான ஒரு சில விடைக்குறிப்புகள் சரியானது அல்ல என பணிநாடுநர்களால் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைகளில் வழக்குகள் தொடரப்பட்டன.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் முடிவுற்ற நிலையில், தீர்ப்புகள் பெறப்பட்டவுடன் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனம் வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடர் நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் பாலபாரதி, ‘‘முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதம் தளர்வு அளித்த பிறகு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 72 ஆயிரத்து 701 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், 10 ஆயிரம் காலி பணியிடங்களைத்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் நீதிமன்றம் வெயிட்டேஜ் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது. வெயிட்டேஜ் என்று வரும்போது அதில் பிளஸ்-2 மதிப்பெண்ணும் சேர்க்கப்படுகிறது. நாம் அப்போது படிக்கும்போது பிளஸ்-2-வில் மாவட்டத்திற்கு ஒருவர் தான் அதிக மதிப்பெண் பெறுவார்கள். ஆனால் இப்போது 200-க்கும் மேற்பட்டோர் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். எனவே, பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘அரசின் விதிமுறையை மாற்றும் கோரிக்கையை உறுப்பினர் இங்கே வைக்கிறார். இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக 80 வழக்குகள் போடப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளும் அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. வழக்குகளின் நகல்கள் பெறப்பட்டவுடன், இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது’’ என்றார்.

இதுகுறித்து, கல்வித்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதிக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்படும். இன்னும் 3 வாரத்திற்குள் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்’’ என்றார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 23 July 2014

TRB LATEST NEWS | போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசித்து வருகிறது.

போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது. அதிக வேலை பளு: டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. இணையதளம் : இந்நிலையை மாற்றி, எளிமையான முறையில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணைய தளம் வழியாக, விண்ணப்பதாரர், எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால், கட்டணமும், வெகுவாக குறையும். விண்ணப்ப கட்டணம், 500 ரூபாயாக உள்ளது. இதுவே, இணையதள முறைக்கு மாறினால், பதிவு கட்டணமாக, மிக குறைந்த தொகையை வசூலிக்க, வாய்ப்பு ஏற்படும். மேலும், விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும், டி.ஆர்.பி., வாய்ப்பு கொடுக்கும். இதுபோன்று, பல வசதிகள் இருப்பதால், அரசு பொறியியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது ஆய்வு நடந்து வருகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில், 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய, அக்டோபர், 26ம் தேதி, போட்டி தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கு, ஆகஸ்ட், 20ம் தேதி முதல் செப்டம்பர், 5ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள்...: இதற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. எனவே, இந்த தேர்வில் இருந்து, இணையதள பதிவு முறையை, டி.ஆர்.பி., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப முறையா; இணையதள பதிவு முறையா என்பது, இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில், அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளில் இருந்த, 228 இடங்களும் நிரம்பின.

மருத்துவப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில், அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளில் இருந்த, 228 இடங்களும் நிரம்பின. சுயநிதிக் கல்லூரி இடங்களுக்கு, இன்று கலந்தாய்வு நடக்கிறது. தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று, திருவாரூர், திருச்சி, சேலம் மருத்துவக் கல்லூரிகளில் இருந்த, 149 இடங்கள்; மாணவர் ஒப்படைத்த, 14 இடங்கள்; கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், 65 இடங்கள் என, 228 எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின. சுயநிதிக் கல்லூரிகளில் காலியாக உள்ள, 25 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கும், 1,020 பி.டி.எஸ்., படிப்புகளுக்குமான கலந்தாய்வு, இன்று நடக்கிறது. இந்த கலந்தாய்வு, 25ம் தேதி நிறைவடைகிறது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு, இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர், மூன்று ஆண்டு படிப்பான பி.லிட்., முடித்தால், பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி டிப்ளமோவை, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில், சில ஆண்டுகளுக்கு முன், ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில், தாமதம் ஏற்பட்டது.

உதாரணமாக, 2007--08 கல்வியாண்டில், இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு, பல்வேறு குளறுபடிகளால், கல்வியாண்டுக்கான தேர்வு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது.இதனால், டிசம்பர் அல்லது ஜனவரியில், தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற பின், ஒரு கல்வியாண்டை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில், ஏராளமானோர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி.லிட்., படிப்பில் சேர்ந்தனர்.படித்து முடித்து, தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும், வெற்றி பெற்று, தங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, அதிர்ச்சியே, பதிலாக கிடைத்துள்ளது.செப்டம்பர் மாதத்தில், ஆசிரியர் கல்வி டிப்ளமோவை முடித்துவிட்டு, அதே கல்வியாண்டில், பி.லிட்., சேர்ந்திருப்பதால், அந்த பட்டம் செல்லாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. அதனால், ஏராளமானோர், அதிர்ச்சியில், என்ன செய்வதென தெரியாமல், திகைத்து நிற்கின்றனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த, 2007--08ம் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ சேர்ந்து, 2008--09ம் கல்வியாண்டில், படிப்பை முடித்தோம். ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டதால், செப்டம்பரில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட்டது. படித்த படிப்புக்கான காலம், 2008--09வுடன் முடிவடைந்துவிட்டதால், 2009--10க்கான கல்வியாண்டில், பி.லிட்., சேர்த்துக்கொண்டனர். அப்போது, பல்கலைக்கழகம், தேர்வுத்துறை உள்ளிட்டவை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.தற்போது, இத்தனை ஆண்டு காத்திருப்பில், அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டால், தகுதியில்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு, தேர்வர் எப்படி பொறுப்பாக முடியும் என தெரியவில்லை. அரசு நிறுவனமான ஆசிரியர் தேர்வுத்துறை, தாமதமாக தேர்வு நடத்தியமைக்கு, எங்கள் வாழ்க்கை பலியாகிறது.கடந்த ஆண்டில், இதேபோன்று படித்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், பணி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் எங்களுக்கு மட்டும் பணிவாய்ப்பு மறுக்கப்படுவது, எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, இம்மாதம் 31ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பொது சுகாதாரத் துறையின் கீழ், பிறப்பு, இறப்பு விவரங்கள் பதிவு செய்ய, மாவட்டந்தோறும் மையங்கள் உள்ளன. இந்த மையத்திற்கு, தற்காலிகமாக, 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.மாவட்டந்தோறும் ஒருவரும், தலைமையகத்தில் இரண்டு பேரும் சேர்க்கப்பட உள்ளனர்.இதற்கு, 'பி.எஸ்.சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., படித்து, கணினி பயன்பாடு, தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த சான்றிதழ் படிப்பும் படித்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளோர், தீதீதீ.tணடஞுச்டூtட.ணிணூஞ் என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இம்மாதம் 31ம் தேதிக்குள், அனுப்ப வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆதிதிராவிடர் என்ற பெயரை மாற்றுவது தொடர்பாக, குழு அளித்த அறிக்கை, அரசு பரிசீலனையில் உள்ளது,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் என்ற பெயரை மாற்றுவது தொடர்பாக, குழு அளித்த அறிக்கை, அரசு பரிசீலனையில் உள்ளது,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்:

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி: தமிழகத்தில் மட்டும், 'ஆதிதிராவிடர்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களில், எஸ்.சி., எஸ்.டி., என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. எனவே, தமிழகத்திலும், எஸ்.சி., என்றே அழைக்கலாம். கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட, எஸ்.சி., என்றே அழைக்கின்றனர்.

இந்திய குடியரசு கட்சி, செ.கு.தமிழரசன்: தமிழகத்தில் ஆதிதிராவிடர் என்பதுபோல், ஆந்திராவில் ஆதி ஆந்திரர், கர்நாடகாவில் ஆதி கன்னடர் உள்ளனர்.

கிருஷ்ணசாமி: துறைக்கு அந்த பெயர் இல்லை. துறை பெயரை மாற்ற வேண்டாம்.

அமைச்சர் சுப்ரமணியன்: உறுப்பினர் கிருஷ்ணசாமி, கடந்த ஆண்டும், இதே கோரிக்கையை வலியுறுத்தினார். 76 உட்பிரிவுகளை உள்ளடக்கிய, ஆதிதிராவிடர்களுக்கு, வேறு பெயர் வைக்கலாமா என, மக்கள் கருத்துக்களை அறிய, குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. அந்த அறிக்கை, அரசு பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு, விவாதம் நடந்தது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், காலியாக உள்ள, 1,408 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், காலியாக உள்ள, 1,408 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

இது குறித்து, சட்டசபையில் நடந்த விவாதம்:

மா.கம்யூ., டில்லிபாபு: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க, மாவட்டம்தோறும், தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் சுப்ரமணியன்: ஏற்கனவே, நான்கு நீதிமன்றங்கள் உள்ளன.

இ.கம்யூ., லிங்கமுத்து: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் உள்ள, காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அமைச்சர்: 1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், 1.27 லட்சம் பேர்; 301 பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில், 31,594 பேர் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், 11,412 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன; 10,004 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, 1,408 ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் காலியாக உள்ளன. அவற்றையும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், விரைவில் நிரப்ப, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி: நலத்துறை பள்ளிகளில், கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வதில்லை. வருவாய் துறை அதிகாரிகள் தான் செல்கின்றனர். இதனால், இப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இதை தடுக்க, நலத்துறை பள்ளிகளை, கல்வித்துறையோடு இணைக்க வேண்டும்.

அமைச்சர்: தேர்ச்சி விகிதம், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, 10ம் வகுப்பில், 82 சதவீத பேர், பிளஸ் 2 தேர்வில், 82 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு, விவாதம் நடந்தது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.இ., கலந்தாய்வில் 53,526 இடங்கள் நிரம்பின. 1.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதுவரை, 20,256 பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.

கடந்த, 7ம் தேதி துவங்கிய பி.இ., சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வில், நேற்று முன்தினம் வரை, 53,526 இடங்கள் நிரம்பின. இன்னும், 1.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதுவரை, 20,256 பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.

பி.இ., பொதுப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு, கடந்த, 7ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை, தொடர்ச்சியாக, 15 நாட்கள் நடந்துள்ளன. தொடர்ந்து, ஆகஸ்ட், 4ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. இதுவரை நடந்த கலந்தாய்வில், 53,526 இடங்கள் நிரம்பி உள்ளன. இன்னும், 1,50,319 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், தினமும், 'ஆப்சென்ட்' ஆகும் மாணவர்கள் எண்ணிக்கை, அண்ணா பல்கலையை, கவலை அடையச் செய்துள்ளது. இதுவரை, 20,256 பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். ஒவ்வொரு நாளும், 1,000 பேருக்கு குறையாமல், 'ஆப்சென்ட்' ஆகின்றனர். மொத்த இடங்களில், இதுவரை, 26.26 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட பாட பிரிவுகளில், மெக்கானிக்கல் பிரிவு, முதலிடம் பிடித்து உள்ளது. இந்த பிரிவில், 11,503 பேர் சேர்ந்துள்ளனர். இ.சி.இ., - எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிக்கேஷன் இன்ஜினியரிங் பிரிவில், 11,029; சிவில் பிரிவில், 7,346; கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், 7,041; இ.இ.இ., - எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில், 6,263; மற்றும் ஐ.டி., பிரிவில், 3,049 பேர் சேர்ந்துள்ளனர்.

கிண்டி பொறியியல் கல்லூரியில், சிவில் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய, இரு பிரிவுகள் மட்டும், தமிழ் வழியில் வழங்கப்படுகின்றன. இதில், சிவில் பிரிவில், மொத்தம் உள்ள, 659 இடங்களில், 78 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில், 718 இடங்களுக்கு, 78 இடங்களும் நிரம்பி உள்ளன. முதல் தலைமுறை பட்டதாரிகளாக, 26,275 பேர் சேர்ந்துள்ளனர்.

பொறியியல் கல்வியில், அரசு ஒதுக்கீடாக, 2.11 லட்சம் இடங்கள் உள்ளன. தனியார் ஒதுக்கீட்டையும் சேர்த்து, மொத்தமாக, 2.88 லட்சம் இடங்கள், நடப்பாண்டில் உள்ளன. இவற்றில் சேர, 1.60 லட்சம் விண்ணப்பங்களே வந்துள்ளன. இம்மாதம் 7ம் தேதி துவங்கிய கவுன்சிலிங்கில், தினந்தோறும் 4,000 மாணவர்கள் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், 1,000 மாணவர்கள் கூட வருவதில்லை. விண்ணப்பித்த மாணவர்களில், 30 சதவீதம் பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்பதில்லை. அவர்களது மன நிலை மாறிவிட்டது. பாரம்பரிய கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புகின்றனர். எனவே, புதிதாக பொறியியல் கல்லூரி துவங்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.

Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள், மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.

ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள், மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.சாரணர் இயக்கம் தமிழக சட்டசபையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அமைச்சர் ந.சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார்.அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:–ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும்உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சாரணர் சாரணியர் இயக்கத்தை சீரிய முறையில் செயல்படுத்த ஒரு பள்ளிக்கு ரூ.55 ஆயிரம் வீதம், 207 பள்ளிகளுக்கு ரூ.1.14 கோடி செலவினம் மேற்கொள்ளப்படும்.சோலார் விளக்கு தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 96 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு பள்ளிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.இந்த துறையின் கீழ் மலைப்பகுதிகளில் இயங்கி வரும் 216 அரசுபழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் 6 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் 13 ஆயிரத்து 154 மாணவ, மாணவியருக்கு முதற்கட்டமாக ஒரு மாணவருக்கு ரூ.550 மதிப்புள்ள ஒரு சூரிய எரிசக்தியுடன் கூடிய ‘‘சோலார்’’ விளக்கு வழங்கப்படும்.ஆயத்த பயிற்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மாணவ, மாணவியரை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ஒரு பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் வீதம், 207 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பணம் அளிக்கப்படும்.

பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியர்கள், ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. போன்ற மேற்படிப்பில் சேர, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பொறியியல்பட்டதாரிகளை தேர்வு செய்து, தகுதியின் அடிப்படையில் அந்த தேர்வைஎழுதுவதற்காக ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.50 லட்சத்தில் ஆயத்த பயிற்சி அளிக்கப்படும்.முதலுதவி பெட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்காக ஆயிரத்து 346 விடுதிகளுக்கும் 100 அரசு பழங்குடியின உண்டி உறைவிட பள்ளிகளுக்கும் தலா ஒரு முதலுதவி பெட்டி வழங்கப்படும்.இந்த துறையின் கீழ் இயங்கும் 110 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 75 மேல்நிலைப்பள்ளிகளில் 32 ஆயிரத்து 112 மாணவிகள் படிக்கின்றனர். அவர்களின் சுகாதார நலனை பாதுகாக்கும் வகையில் ஒரு பள்ளிக்கு ஒரு ‘‘நாப்கின் பர்னர்’’ என்ற சுகாதார குட்டை தகளி வழங்கப்படும். வட்டாட்சியர் அலுவலகம் நீலகிரி மாவட்டத்தில் 32 ஆயிரத்து 813 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட தலைநகரான உதகமண்டலத்திலிருந்து கூடலூர் மற்றும் குன்னூர் பகுதிகள் 40 கி.மீ. தொலைவில் உள்ளதால், அரசின் நலத்திட்டங்கள் பழங்குடியின மக்களை எளிதில் சென்றடைய குன்னூர் மற்றும் கூடலூர் கோட்டங்களில் தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவிக்கப்படும். 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 207 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கிடையே மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஐ.ஏ.எஸ். தேர்வு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும்ஆயிரத்து 397 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்காக, 100 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 107 உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் 414 ஆசிரியர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் வாயிலாக யோகா பயிற்சி அளிக்கப்படும். இந்திய குடிமைப்பணிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி–1) முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் பழங்குடியின தேர்வர்களுக்கு, முதன்மைத் தேர்வினை எழுத ஆகும் இடைநிகழ் செலவினை மேற்கொள்ள ஏதுவாக ஒரு தேர்வருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை, மத்திய அரசின் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 22 July 2014

TRB ANNOUNCED COMPETITIVE EXAM FOR LECTURER (SENIOR SCALE) POST IN LAW COLLEGE | அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமிப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 11.08.2014 முதல் | கடைசி தேதி : 26.08.2014 | தேர்வு நாள் : 21.09.2014

Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.

வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படஉள்ளன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம்தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர்தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது. இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாககுறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர்வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச்சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம்தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாகஇந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும்ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம் ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களுடைய சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம் ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களுடைய சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான படிவங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப். எஸ். உள்பட அனைத்து நிலை ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பெயரில், மனைவி அல்லதுகணவன், மைனர் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்து விவரங்கள், முதலீட்டு விவரங்கள், கடன் கொடுத்த விவரங்கள், அவர்களுடைய பெயரில் உள்ள கடன் உள்ளிட்ட விவரங்களை தர வேண்டும். அவர்களுடைய பெயர்களில் உள்ள மோட்டார் வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், படகுகள், தங்கம், வெள்ளி, கரன்சிகள் உள்ளிட்ட விவரங்களை யும், அசையும், அசையா சொத்துகளின் விவரங்களையும் தர வேண்டும் என்று படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக லோக்பால் சட்டத்தின்கீழ் புதிய விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் (சொத்துகள், கடன்கள் குறித்து ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வது, விதிவிலக்குகள்) விதிகள், 2014ன்கீழ் இந்த அறிக்கையை மத்திய பணியாளர்கள்மற்றும் பயிற்சி துறை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின்படி, அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்துக்கான அறிக்கையை அந்த ஆண்டு ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஊழியரின் 4 மாத அடிப்படை சம்பளம் அல்லது ரூ.2 லட்சம், இதில் எது அதிகமோ அந்த தொகைக்கான சொத்துகளின் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டாம். இந்த விதிவிலக்கை, சம்பந்தபட்ட அதிகார அமைப்பு அளிக்கலாம். இந்த விதிகளின்படி ஏற்கனவே சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்திருந்தாலும், 2014 ஆகஸ்ட் 1ம் தேதிக்கான அறிக்கையை செப்டம்பர் 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்வு பெற்ற இளநிலை உதவியாளர்களில், 1,395 பேர், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நிகழ்ச்சி, ஆன்-லைன் வழியில், வரும், 25ம் தேதி மற்றும் 26ம் தேதி நடக்கிறது.தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் முகவரி அடங்கிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, நேரில் செல்ல வேண்டும். ஒரு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு, 25ம் தேதி, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.சொந்த மாவட்டங்களில் காலியிடம் இல்லாதவர்களுக்கும், வெளி மாவட்டங்களில், பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும், 26ம் தேதி, காலை, 9:00 மணிக்கு கலந்தாய்வு நடத்தப்படும். தேர்வு பெற்றவர்கள், ஒரு மணி நேரம் முன்னதாக, முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வர வேண்டும். டி.என்.பி.எஸ்சி.,யால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு உத்தரவு, கல்வி சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களை, தவறாமல் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ‘பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியான இளங்கலை பட்டப் படிப்பையும், பிஎட் படிப்பையும் தமிழ் வழியில் படித்தவர்கள் மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவார்கள். அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித் தகுதியை தமிழ்வழி அல்லது ஆங்கில வழி எந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை. பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருக் கிறார்களா என்பது மட்டும் இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு பார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில், பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங் கள் வரவேண்டியுள்ளது. அந்த துறைகளில் காலி இடங்கள் வரும் பட்சத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சட்டப் படிப்புக்கு 2வது கட்ட கவுன்சலிங்

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்பட 7 அரசு சட்டக் கல்லூரிகளில், 5 ஆண்டு பிஏ.பிஎல் படிப்பு வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், இந்த கல்லூரி களில் பிஏ.பிஎல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு முதல்கட்ட கவுன்சலிங் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில், 324 இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி இடங்களை நிரப்புவதற்கான 2வது கட்ட கவுன்சலிங், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் (செவ்வாய், புதன்) நடை பெறுகிறது. காலை 10 மணிக்கு கவுன்சலிங் தொடங்கும். மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை துணைவேந்தர் பி.வணங்காமுடி வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதிவரை நடைபெறுகின்றன.

சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதிவரை நடைபெறுகின்றன. சுருக்கெழுத்து உயர்வேகத் தேர்வு சென்னை தரமணியில் உள்ள மாநில வணிகவியல் கல்வி நிறுவனத்தில் மட்டும் நடத் தப்படுகிறது. முதல் 2 நாட்கள் சுருக்கெழுத்து உயர்வேக தேர்வும் அதைத் தொடர்ந்து இளநிலை, முதுநிலை சுருக்கெழுத்து தட்டச்சு தேர்வுகளும் தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம்தேதி வரை பல்வேறு மையங்களில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வு வாரியத்தின் தலைவருமான குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 21 July 2014

‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத் திட்டப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. ‘சி-டெட்’ தகுதித் தேர்வு செப்டம்பர் இறுதி வாரத்தில் நாடு முழுவதும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பிஎட் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு சலுகை உண்டு. தகுதியுடைய ஆசிரியர்கள் www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த ஆகஸ்ட் 6ம் தேதி கடைசி நாள். தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நாடு முழு வதும் நடத்தப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட இடத்தில் ‘சி-டெட்’ தேர்வுக்கு, ஆன்லைனில் இலவசமாக விண்ணப் பிக்க சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கால்நடை மருத்துவப் படிப்புக்கு வரும் 30ம் தேதி முதல் கவுன்சலிங் நடைபெறும் என மருத்துவப் படிப்பு தேர்வுக்குழு தலைவர் மா.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவப் படிப்புக்கு வரும் 30ம் தேதி முதல் கவுன்சலிங் நடைபெறும் என மருத்துவப் படிப்பு தேர்வுக்குழு தலைவர் மா.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2014&15ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 19 ஆயிரத்து 746 விண்ணப்பங்கள் விற்பனையானது. இதில், பூர்த்தி செய்யப்பட்டு 18 ஆயிரத்து 698 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் 18 ஆயிரத்து 78 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் கால்நடை மருத்துவ படிப்பில் உள்ள இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை படிப்புக்கான கவுன்சலிங் நடைபெறும். அடுத்த மாதம் 1ம் தேதி பிடெக் (எப்டி) மற்றும் பிடெக் (பிபிடி) பிரிவுகளுக்கான கவுன்சலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவப் படிப்பு தேர்வுக்குழு தலைவர் மா.திருநாவுக்கரசு கூறியதாவது:
இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை படிப்புக்கு தமிழகம் முழுவதும் 280 இடங்கள் உள்ளன. இதில் இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலுக்கான 42 இடங்கள்(15 சதவீதம்) போக மீதமுள்ள 238 இடங்களுக்கு இம்மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் கவுன்சலிங் நடைபெறும். ஒரத்தநாடு, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 80 இடங்களுக்கு இந்த வருடம் கால்நடை மருத்துவ கவுன்சலிங் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறப்பு ஒதுக்கீடு மற்றும் தொழில் பிரிவு மாணவர்களுக்கு 30ம் தேதியும், கலையியல் மாணவர்களுக்கு 31ம் தேதியும் கவுன்சலிங் நடைபெறும். மேலும், பி.டெக்(உணவு தொழில்நுட்பம்), பி.டெக்.(கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளில் காலியாக உள்ள 20 இடங்களுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 1ம் தேதி நடைபெறும். கட்ஆப் மதிப்பெண்ணை பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 197, இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை படிப்பில், கலையியல் பிரிவு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 197.75, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 197.00, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்களுக்கு 193.50, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 196.75 என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 193, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவினருக்கு 190, பழங்குடியினருக்கு 182.75, தொழில் பிரிவில் பொதுப்பிரிவினருக்கு 193, பி.டெக்.(உணவு தொழில்நுட்பம்) படிப்புக்கு பொதுப்பிரிவினருக்கு 195.75, பி.டெக்.(கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம்) படிப்புக்கு பொதுப்பிரிவினருக்கு 191.50 ஆகவும் கட்ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடந்த 3 கல்வியாண்டுகளாக தமிழகத்தில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கையை கணக்கிட்டு வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6ம் வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி தொடங்க அரசு உத்தரவிடப்பட்டது. அதனைதொடர்ந்து கடந்த 3 கல்வியாண்டுகளாக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. மாணவர் எண்ணிக்கை குறைவு, தமிழ்வழி மாணவர்களை ஆங்கில வழி பள்ளியில் சேர்ப்பது போன்ற பிரச்னைகளும் இருந்து வருகிறது. ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை, புத்தகங்கள் தட்டுப்பாடு போன்றவையும் ஆங்கில வழி வகுப்புகளை செயல்படுத்துவதில் சவாலாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 கல்வியாண்டுகளாக தமிழகத்தில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கையை கணக்கிட்டு வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநரால் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து ஆங்கில பள்ளிகள் விபரத்தை மாவட்ட அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். கடந்த 15ம் தேதி அடிப்படையில் ஒன்றிய வாரியாக ஆங்கில வழி வகுப்புகள் உள்ள பள்ளிகள், மாணவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. 2012&13, 2013&14, 2014&15 ஆகிய கல்வியாண்டுகளில் உள்ள விவரங்களை கல்வி அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில் ஆங்கில வழி பள்ளிகள் முறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வில் 89,433 (55 சதவீதம்) பேர் தேர்வு எழுதவரவில்லை. குரூப் 1 பதவியில் 79 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டுள்ளது.தேர்வுக்கான கீ ஆன்சர் இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படும். தேர்வுக்கான ரிசல்ட்டை 2 அல்லது 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வில் 89,433 (55 சதவீதம்) பேர் தேர்வு எழுதவரவில்லை. சென்னையில் 21,692 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இவ்வளவு பேர் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உயர் பதவிகளான துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் (3), போலீஸ் டிஎஸ்பி (33), வணிகவரித் துறை இணை ஆணையாளர் (33) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் (10) ஆகிய 79 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஜூலை 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று குரூப் 1 முதல்நிலை தேர்வு நடந்தது. இத்தேர்வை எழுத தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 35,675 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்காக மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 557 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. கெல்லட் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி என மொத்தம் 108 அரசு பள்ளிகள், கல்லூரிகளில் இத்தேர்வு நடந்தது.
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. தேர்வு எழுதுவதற்கு பல மையங்களில் ஆண்களும், பெண்களும் காலை 8 மணிக்கே வரத் தொடங்கினர். இதற்கு ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி அடிப்படை தகுதியாக கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வை ஏராளமான முதுநிலை, மருத்துவம், இன்ஜினியரிங் படித்த பட்டதாரி மாணவ& மாணவிகளும் எழுதினர்.

பல பெண்கள் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில் குழந்தையை கணவன்மார்கள் பார்த்துக் கொண்டனர். தேர்வு எழுதுவோர், சோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்குலேட்டர், செல்போன் போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் தடுக்க மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், தலைமை கண்காணிப்பாளர் 570 பேர், கண்காணிப்பாளர் 7009 பேர், ஆய்வு அதிகாரிகள் 570 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.சென்னையில் மட்டும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கண்காணிப்பில் தேர்வுகள் நடந்தது. பல்வேறு மையங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. தேர்வு நடந்த அனைத்து இடங்களிலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. முறைகேடு நடக்கும் என்று கண்டறியப்பட்ட மையங்கள் வெப் கேமரா மூலம் சென்னையில் இருந்து கண்காணிக்கப்பட்டது. தேர்வு நடைபெற்ற அனைத்து பள்ளிகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் திருவல்லிக்கேணியில் உள்ள சி.எஸ்.ஐ. கெல்லட் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, தேர்வுக்கட்டுப் பாட்டு அதிகாரி ஷோபனா உடன் இருந்தார்.

தேர்வில் பொது அறிவியலில் 150 வினாக்களும், ஒருவரின் சிந்தனைத்திறன், பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறனை ஆய்வு செய்யும் வகையில் 50 வினாக்களும் என 200 வினாக்கள் கேட்கப்பட்டன. மொத்தம் 300 மதிப்பெண்கள். தேர்வு எழுதி விட்டு வந்தவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் சுமார் 45 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதாவது 73,173 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 55 சதவீதம் பேர் அதாவது 89,433 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.சென்னையில் 35, 675 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 42 சதவீதம் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதாவது 14,983 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 21,692(48 சதவீதம்) பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என்று டி.என்.பி. எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்வு நடந்த பல மைய ங்கள் ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த அளவுக்கு ஆப்சென்ட் ஆகியுள்ளதை கண்டு டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு பேர் ஆப்சென்ட் ஆக என்ன காரணம் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர்(பொறுப்பு) பால சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

குரூப் 1 பதவியில் 79 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டுள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது அரசின் கையில்தான் உள்ளது. தேர்வுக்கான கீ ஆன்சர் இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படும். அதில், ஏதேனும் ஆட்சேபம் இருப்பதாக தேர்வாளர்கள் தெரிவித்தால் அதுகுறித்து கமிட்டி ஆய்வு செய்து மறு கீஆன்சர் வெளியிடப்படும். அதன் பின்னர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். தேர்வுக்கான ரிசல்ட்டை 2 அல்லது 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடத்தப்படும். ஒரு காலி பணியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 4,000 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மெயின் தேர்வில் வெற்றி பெறுவோர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர், மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 20 July 2014

“இந்திய பொறியியல் துறையில் உயர்கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த பாடுபட வேண்டும்” என்று திருச்சி என்.ஐ.டி. பொன்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

“இந்திய பொறியியல் துறையில் உயர்கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த பாடுபட வேண்டும்” என்று திருச்சி என்.ஐ.டி. பொன்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.பிரணாப் முகர்ஜிதிருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்.ஐ.டி) ஐம்பதாவது ஆண்டு பொன்விழா நேற்று மாலை நடைபெற்றது. தேசிய தொழில்நுட்ப கழகத்தின் நிர்வாகக்குழு தலைவர் ராஜாராம் நித்தியானந்தா வரவேற்று பேசினார். திருச்சி என்.ஐ.டி இயக்குனர் சுந்தர்ராஜன் பொன்விழா ஆண்டறிக்கையை படித்தார்.இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-இந்திய பொறியியல் துறையில் திருச்சி ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பெற்று உள்ளது. திருச்சி அருகில் காவிரியின் குறுக்கே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை நீர்ப்பாசன ஒழுங்குமுறையில் உலக அளவில் சிறப்பான இடத்தை பெற்று உள்ளது. தஞ்சை பெரிய கோவிலின் உச்சியில் 90 டன் எடை உள்ள ஒற்றைக்கல்லை வைத்து இருப்பது கட்டுமான தொழில்நுட்பத்தில் இந்தியாவின் இரண்டாவது மைல்கல் ஆகும்.சர்வதேச தரம்பொறியியல் துறையை பொறுத்தவரை இந்திய அளவில் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. ஆனால் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள் எடுத்த புள்ளி விவர கணக்கின்படி முதல் 200 நிறுவனங்களில் இந்திய பொறியியல் கல்வி கூடங்கள் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இது தான் நிலைமை. எனவே பொறியியல் துறையில் உயர்கல்வியின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்த நாம் பாடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்.தற்போது நமது நாட்டின் சில ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் 50 முன்னணி சிவில் மற்றும் மின்னியல் பொறியியல் துறையில் இடம் பெற்று உள்ளன. பிரிக்ஸ் நாடுகளில் முன்னணியில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் ஐந்து கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன. ஆசிய அளவில் முதல் 100 இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களில், இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது மூன்றில் இருந்து 10 ஆக உயர்ந்து உள்ளது. எனவே சர்வதேச அளவில் இந்திய பொறியியல் துறையின் தரத்தை உயர்த்திக்காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சர்வதேச தரத்தில் இந்திய பொறியியல் கல்வியை உயர்த்துவதற்கான பூர்வாங்க பணிகளை ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டும். இதற்கான முயற்சிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.சவால்கள்பொறியியல் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் குறுகிய கால கல்வி ஒப்பந்தங்களை செய்து கொள்ளவேண்டும். நமது பொறியியல் தொழில்நுட்பம் சாதாரண விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களுக்கும், சிறு தொழில் புரிவோருக்கும் பயன்படும் அளவில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகளில் பொறியியல் ஆசிரியர்களும், மாணவர்களும் இறங்கவேண்டும். திருச்சி என்.ஐ.டி.யில் ஏற்கனவே கிராமப்புற தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.கவர்னர் ரோசய்யாவிழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா வாழ்த்தி பேசினார். என்.ஐ.டி. பொன்விழா மலரை கவர்னர் ரோசய்யா வெளியிட அதனை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE