Tuesday, 6 October 2015

TNPSC - GROUP I SERVICE - APPLICATION STATUS | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 08.11.2015 அன்று முற்பகல் தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப்பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது. தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்ப விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 08.11.2015 அன்று முற்பகல் தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப்பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கென 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து விண்ணப்பத்தினை தேர்வாணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான விவரத்தினை தேர்வாணைய இணையதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்தியிருந்தும் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரம் மேற்படி இணையதளத்தில் இல்லாவிடில், அவ்விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com க்கு, 13.10.2015 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொகுதி-I பதவிக்கான விண்ணப்ப பதிவு எண் (Registration ID) விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் (ரூபாய்) : கட்டணம் செலுத்திய இடம் : அஞ்சலகம் / இந்தியன் வங்கி வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி : மேற்படி இணையதளத்தில் உள்ள விவரங்கள் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒரு ஒப்புகை மட்டுமேயாகும். விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,