Thursday, 14 January 2016

அம்பத்தூர் ஐடிஐ-யில் பணி 22-க்குள் விண்ணப்பிக்கலாம்.

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி பணியிடங்களுக்கு வரும் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வர்ணம் அடிப்பவர், பற்ற வைப்பவர்,
மின்சார பணியாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை அரசு நிரப்ப உள்ளது. இதற்கு 10 -ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் தொழிற்கல்வியில் என்.டி.சி., மற்றும் என்.ஏ.சி., தேர்ச்சி பெற்ற 18 வயது முதல், 30 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களில் பற்றவைப்பவர் பணியிடம் தாழ்த்தப்பட்ட ஆதரவற்ற விதவைக்கும், மின்சாரப் பணியாளர் பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்தோருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளோர் தங்களது சாதி, முன் அனுபவ சான்று, வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் துணை இயக்குநர் மற்றும் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை 600098 (தொலைபேசி எண்: 044-26252453) என்ற முகவரியில் வரும் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

TRB