Thursday, 25 February 2016

தமிழ்நாட்டில் பி.எட். படிப்பின் காலம் 2 வருடம் தான். துணைவேந்தர் உறுதி

தமிழ்நாட்டில் பி.எட். படிப்பு 2 வருடம் தான் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி தெரிவித்தார்.பி.எட். படிப்புதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னையில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகள், 14 அரசு
உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், 689 பி.எட். கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முன்பு ஒருவருடம் பி.எட். படிப்பு இருந்தது. ஆனால் மத்திய அரசு 2 வருட பி.எட். படிப்பை அறிமுகப்படுத்தியது. அதன்படி தமிழ்நாட்டில் இந்த வருடம் 2 வருட பி.எட். படிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் தேசிய ஆசிரியர் கல்விக்குழு (என்.சி.இ.ஆர்.டி.) கல்லூரியின் முதல்வர் பிஎச்.டி. படித்திருக்கவேண்டும் என்றும், இட வசதியை அதிகரித்தும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக தனியார் பி.எட். கல்லூரிகள் சில ஐகோர்ட்டை நாடின. புதிய நடைமுறைகளை அமல்படுத்த தேவை இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு சார்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.2 வருடம் தான் இதையொட்டி பி.எட். படிப்பு 2 வருடமா? ஒரு வருடமா? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பி.எட். படிப்பு எத்தனை வருடம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமியிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில் பி.எட். படிப்பு 2 வருடம் தான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. எந்த பி.எட். கல்லூரியிலாவது மாணவர்கள் சேர்ந்துவிட்டு அவர்கள் தினமும் கல்லூரிக்கு போகாமலே போனதாக வருகை பதிவேட்டில் கள்ளக்கணக்கு காட்டும் கல்லூரிகள் பற்றி யாரும் இதுவரை புகார் தரவில்லை. தந்தால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

TRB