Wednesday, 25 May 2016

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு | ராசிபுரம் மாநிலத்தில் முதலிடம் | 498 மதிப்பெண் பெற்று 50 பேர் மாநிலத்தில் 2வது இடம் |

  • 10 ஆம் வகுப்பில்  93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  • ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், 
  • கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர். 
  • தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிவடைந்தது. 
  • மொத்தம் 10.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர். 
  • தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின. 
  • தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். 
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.
  • தற்காலிக சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமும், பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் ஜூன், 1ல் கிடைக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். 
  • அதேநேரத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 28ம் தேதிக்குள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
  • நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த பிரேமசுதா 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்தவர் ஆவார். 
  • விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் நோபல் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்
  • 10-ம் வகுப்பு தேர்வு... 499 மதிப்பெண்கள் பெற்று 2 மாணவர்கள் முதலிடம்!
  • விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சிவக்குமாரும், நாமக்கல் மாவட்டம் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்த பிரேம சுதாவும் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
  • இதேபோல், 498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.  இந்த தேர்வில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். இந்த ஆண்டும், வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவியரே அதிகம்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சதம் அடித்த மாணவர்கள்...
  • ஆங்கில பாடத்தில் 51 மாணவர்கள்.
  • தமிழ் பாடத்தில் 73 மாணவர்கள்.
  • கணிதம் பாடத்தில் 18,754 மாணவர்கள்.
  • அறிவியல் பாடத்தில் 18,642 மாணவர்கள்.
  • சமூக அறிவியல் பாடத்தில் 39,398 மாணவர்கள் சதம் அடித்துள்ளனர்.
தேர்ச்சி விகிதம்...
  • மாணவிகள் - 95.9 சதவீதம்
  • மாணவர்கள் - 91.3 சதவீதம்
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்...
  • 1. கன்னியாகுமரி-- 98.17    
  • 2. திருநெல்வேலி- 95.3
  • 3. தூத்துக்குடி-- 96.93
  • 4. ராமநாதபுரம் - 97.1
  • 5. சிவகங்கை - 96.66
  • 6. விருதுநகர் - 97.81
  • 7. தேனி - 96.57
  • 8. மதுரை - 95.68
  • 9. திண்டுக்கல் - 92.57
  • 10. ஊட்டி - 93.25
  • 11. திருப்பூர் - 95.62
  • 12. கோவை - 96.22
  • 13. ஈரோடு - 98.48
  • 14. சேலம் - 94.21
  • 15. நாமக்கல் - 96
  • 16. கிருஷ்ணகிரி - 95.05
  • 17. தர்மபுரி - 94.77
  • 18. புதுக்கோட்டை - 94.46
  • 19. கரூர் - 96.67
  • 2-0. அரியலூர் - 92.52
  • 21. பெரம்பலூர் - 96.52
  • 22. திருச்சி - 95.92
  • 23. நாகப்பட்டினம்- 89.43
  • 24. திருவாரூர் - 89.33
  • 25. தஞ்சாவூர் - 95.39
  • 26. பாண்டிசேரி - 92.42
  • 27. விழுப்புரம் - 88.07
  • 28. கூடலூர் - 89.13
  • 29. திருவண்ணாமலை- 89.03
  • 30. வேலூர் - 86.49
  • 31. காஞ்சீபுரம் - 92.77
  • 32. திருவள்ளூர் - 90.84
  • 33. சென்னை - 94.25
  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தற்காலிக மதி்ப்பெண் பட்டியல்களை ஜூன் 1-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்ததேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். இவர்களை தவிர 48 ஆயிரத்து 564 பேர் தனித் தேர்வர்களாகவும் எழுதியுள்ளனர். தேர்வு எழுதிய மாணவ- மாணவியர் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். இவை தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், படித்த பள்ளிகளிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


No comments:

TRB