Sunday, 29 May 2016

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி திறக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி திறக்கப்படுகின்றன. பள்ளி திறக்கும் முதல் நாளன்றே 25 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து அரசுப் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பள்ளி திறப்பு நாள் தள்ளிப்போகுமா என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்திருந்தனர். வெயிலின் பாதிப்பை கருத்தில்கொண்டு பள்ளி திறப்பு நாளை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்று ஆசிரியர் அமைப்புகளும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. இதற்கிடையே, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில், ஜூன் 1-ம் தேதி பள்ளி திறக்கும் முதல் நாள் அன்றே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகளை பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர் (தொழிற்கல்வி) பாஸ்கர சேதுபதி ஆகியோர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகளை முதல் நாளன்று வழங்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.புஷ்பா எடுத்து ரைத்தார். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் கூறும் போது, “ஜூன் 1-ம் தேதி பள்ளி திறக்கும் முதல் நாளன்று அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலை யில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் அனைத்துப் பள்ளி களுக்கும் புத்தகங்கள். சீருடைகள் சென்றுவிடும். பள்ளி திறக்கும் முதல் நாளில் 25 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும்” என்றார். பள்ளிகள் வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 55 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஏப்ரல் மாதம் இறுதிவரை பள்ளி இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1-ந் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. தமிழகத்தில் சுட்டெரித்த அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்தது. தென்மாவட்டங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவந்தாலும், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்னும் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. எனவே தொடர்ந்து கொளுத்தும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பதை மேலும் சில நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 1-ந் தேதி திறப்பதாக இருந்த பள்ளிகள், வெயில் காரணமாக ஜூன் 6-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? என்று பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினர். இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் 2016-17-ம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஜூன் 1-ந் தேதி அன்று பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், விலையில்லா சீருடைகள் மற்றும் இதர மாணவர்கள் நலத்திட்ட பொருட்களும் வழங்குவதற்கு தேவையான ஆயத்தப்பணிகளும், தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு தூய்மை மற்றும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளி வளாகம், குறிப்பாக வகுப்பறைகளை சுத்தம் செய்திட வேண்டும். வகுப்பறைகளிலும், வகுப்பறை சுற்றிலும் ‘பிளீச்சிங்’ பவுடர் தூவி தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை மேற்பார்வையிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள், ஆய்வு அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய அறிவுரை வழங்கி கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

TRB