Friday, 27 May 2016

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்களுக்காக வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை எழுத விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று வெள்ளிக்கிழமை (மே 27) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையநிறுவனங்களின் மூலம் விண்ணப்பிக்க முடியாது. தேர்வுக் கட்டணம்: தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, கூடுதல் கட்டணம் ரூ.35, ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.135 ரொக்கமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு: தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு மையம், பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.





1 comment:

Don Pc said...

result eppo varum???

TRB