Thursday, 26 May 2016

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 90.2 சதவீத தேர்ச்சி

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 90.2 சதவீத தேர்ச்சி அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 90.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகள் தேர்ச்சி சாதனை வருமாறு:- அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் தமிழக அரசு தனது பல்வேறு சிறப்பு திட்டங்களின் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவித்து கல்வி அளித்ததன் விளைவாகவும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளாலும், இந்த ஆண்டு அரசுப்பள்ளிகள் 90.2 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளன.
அதேபோல் இக்கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறப்பு பயிற்சி தற்போது வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஈரோடு மாவட்டம் 98.48 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் 98.17 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 97.81 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. இக்கல்வி ஆண்டில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, கூடுதல் சிறப்பு கையேடு அளித்ததன் மூலமாக 1,429 அரசு பள்ளிகள் 100 சதவித தேர்ச்சியை பெற்று சாதனைப்படைத்துள்ளன. அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளின் தேர்ச்சி முடிவுகள் சதவீதத்தில் வருமாறு:- இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 90.2 சதவீத தேர்ச்சி

   1.ஆதிதிராவிட நலப்பள்ளிகள் 86.21

   2.மாநகராட்சி பள்ளிகள் 94.41

   3.வனத்துறைப் பள்ளிகள் 93.48

   4.அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.87

   5.அரசு பள்ளிகள் 90.21

   6.அறநிலையத்துறை பள்ளிகள் 85.69

   7.கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 94.09

   8.நகராட்சிப் பள்ளிகள் 90.58

   9. சமூக நலத்துறைப் பள்ளிகள் 84.98

   10.பழங்குடியினர் நலப்பள்ளிகள் 86.62


No comments:

TRB