Thursday, 26 May 2016

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஈரோடு மாவட்டம் 98.48 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்

ஈரோடு மாவட்டம் 98.48 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் இடம்   எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஈரோடு மாவட்டம் 98.48 சதவீதம் தேர்ச்சி   பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில்   27 ஆயிரத்து 493 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில், 27 ஆயிரத்து 76   மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் விவரம் வருமாறு:-

   1. ஈரோடு - 98.48
   2. கன்னியாகுமரி - 98.17
   3. விருதுநகர் - 97.81
   4. ராமநாதபுரம் - 97.1
   5. தூத்துக்குடி - 96.93
   6. கரூர் - 96.67
   7. சிவகங்கை - 96.66
   8. தேனி - 96.57
   9. பெரம்பலூர் - 96.52
   10. கோவை - 96.22
   11. நாமக்கல் - 96
   12. திருச்சி - 95.92
   13. மதுரை - 95.68
   14. திருப்பூர் - 95.62
   15. தஞ்சை - 95.39
   16. நெல்லை - 95.3
   17. கிருஷ்ணகிரி - 95.05
   18. தர்மபுரி - 94.77
   19. புதுக்கோட்டை - 94.46
   20. சென்னை - 94.25
   21. சேலம் - 94.21
   22. ஊட்டி - 93.25
   23. காஞ்சீபுரம் - 92.77
   24. திண்டுக்கல் - 92.57
   25. அரியலூர் - 92.52
   26. புதுச்சேரி - 92.42
   27. திருவள்ளூர் - 90.84
   28. நாகப்பட்டினம் - 89.43
   29. திருவாரூர் - 89.33
   30. கடலூர் - 89.13
   31. திருவண்ணாமலை - 89.03
   32. விழுப்புரம் - 88.07
   33. வேலூர் - 86.49.

பிளஸ்-2 தேர்விலும் சதவீத அடிப்படையில் தமிழகத்திலேயே ஈரோடு   மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது. பிளஸ்-2 தேர்வில் ஈரோடு 96.92   சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. பிளஸ்-2 தேர்வை போன்று   எஸ்.எஸ்.எல்.சி தேர்விலும் மாநிலத்திலேயே முதல் இடத்தை ஈரோடு   மாவட்டம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

TRB