Monday, 23 May 2016

குடிமைப் பணியில் தேர்வு பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்..!!

குடிமைப் பணியில் தேர்வு பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்..!!
மத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வ மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
2015-ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் கடந்த வாரம் வெளியானது. இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களின் அதிகாரப்பூர்வ மதிப்பெண் சான்றிதழ் தற்போது யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை வெற்றி பெற்றவர்கள் தற்போது டவுன்லோடு செய்துகொள்ளமுடியும். இந்த சான்றிதழைப் பெற http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். பின்னர் அங்கு 'Marksheet-Civil Services (Preliminary Examination) 2015' என்ர இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் உங்கள் பதிவு எண், பாஸ்வேர்ட் ஆகியவற்றைக் கொடுத்து சான்றிதழை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொண்டு எதிர்காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.


No comments: