Thursday, 26 May 2016

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் | இந்த ஆண்டு 93.6 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 0.7 சதவீதம் உயர்வு

இந்த ஆண்டு 93.6 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 0.7 சதவீதம் உயர்வு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று வெளியானது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 11 ஆயிரத்து 919 மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர். அவர்களில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 335 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 93.6 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தேர்ச்சி சதவீதம் 92.9 ஆக இருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் 0.7 சதவீதம் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 5 லட்சத்து 7 ஆயிரத்து 507 மாணவர்கள் எழுதியதில், 4 லட்சத்து 63 ஆயிரத்து 618 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91.3 சதவீத தேர்ச்சி ஆகும். 5 லட்சத்து 4 ஆயிரத்து 412 மாணவிகள் எழுதிய தேர்வில், 4 லட்சத்து 83 ஆயிரத்து 717 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.9 சதவீதம் ஆகும்.எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் விருதுநகர் மாணவர் சிவகுமார், திண்டுக்கல் மாணவி பிரேமசுதா ஆகியோர் 500-க்கு தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர். சென்னை, மே.26- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.31 மணிக்கு வெளியிடப்பட்டன. அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி முடிவுகளை வெளியிட்டார்.
மாநிலத்தில் முதல் இடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில் இந்த ஆண்டு 2 பேர் முதல் இடம் பிடித்து உள்ளனர். இவர்களில் ஒருவர் மாணவர்; மற்றொருவர் மாணவி ஆவார். முதல் இடம் பெற்ற மாணவரின் பெயர் ஆர்.சிவகுமார். இவர் விருதுநகர் அருகே உள்ள பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். முதல் இடம் பெற்ற மாணவியின் பெயர் ஆர்.பிரேமசுதா. திண்டுக்கல் மாவட்டம் எர்ணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குருக்காபுரம் எஸ்.ஆர்.வி. எக்சல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். 500-க்கு தலா 499 இருவரும் 500-க்கு தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர். 2 பேரும் அனைத்து பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களையே பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:- ஆர்.சிவகுமார் தமிழ் 99 ஆங்கிலம் 100 கணிதம் 100 அறிவியல் 100 சமூக அறிவியல் 100 மொத்தம் 499 ஆர்.பிரேமசுதா தமிழ் 99 ஆங்கிலம் 100 கணிதம் 100 அறிவியல் 100 சமூக அறிவியல் 100 மொத்தம் 499 2-வது இடத்தில் 50 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500-க்கு தலா 498 மதிப்பெண்கள் எடுத்து 50 பேர் 2-வது இடத்தை பிடித்து உள்ளனர். இவர்களில் 35 பேர் மாணவிகள். 15 பேர் மாணவர்கள் 224 பேர் 500-க்கு தலா 497 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்து உள்ளனர். இவர்களில் 180 பேர் மாணவிகள், 44 பேர் மாணவர்கள். தமிழில் முதல் இடம் மாநில அளவில் முதல் இடம் பெற்ற விருதுநகர் அருகே உள்ள பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.சிவக்குமார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குருக்காபுரம் எஸ்.ஆர்.வி. எக்ஸல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.பிரேமசுதா ஆகிய இருவரும் தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 100-க்கு தலா 99 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் சிவகுமார் தனது பெற்றோருடன் பெரியவள்ளிக்குளத்தில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை ரகுபதி விருதுநகரில் ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார். தாயார் விஜயலட்சுமி இல்லத்தரசி. மாணவர் சிவகுமார் கூறியதாவது:- ஆடிட்டர் ஆக விருப்பம் நான் இந்த அளவுக்கு மதிப்பெண் பெற்றதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களின் கடின உழைப்பும், பயிற்சியும் தான் காரணம். என்னுடைய பெற்றோரும் வீட்டில் தேர்வு வைத்து ஊக்கப்படுத்தினார்கள். பள்ளியில் நடந்த தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அதுபற்றி கடிந்து கொள்ளாமல் அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முயற்சி செய் என்று ஊக்கப்படுத்தினார்கள். இதெல்லாம் முதல் இடத்தை பெற உதவியாக இருந்தது. பிளஸ்-2 வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்து படித்து ஆடிட்டர் ஆவதே எனது விருப்பம். இவ்வாறு சிவகுமார் கூறினார். விவசாயியின் மகள் முதல் இடம் பெற்ற ராசிபுரம் பள்ளி மாணவி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சி எர்ணம்பட்டியை சேர்ந்தவர் ஆவார். இவருடைய தந்தை ஜி.ராஜேந்திரன், விவசாயி. தாயார் ரேணுகாதேவி, சகோதரி ரேவதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்று உள்ளார். மாநில அளவில் முதலிடம் பிடித்ததை தொடர்ந்து பிரேமசுதாவின் வீட்டிற்கு உறவினர்கள் ஏராளமானோர் வந்து மாணவியை பாராட்டினர். பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் மாணவி பிரேமசுதாவிற்கு ‘கேக்‘ ஊட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஆர்.பிரேமசுதா கூறியதாவது:- இயல்பாக படித்தேன் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். அதேபோல் அதிக மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. ஆனால், மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. சின்ன வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்று எனக்கு ஆசை. எனது குடும்பத்தினரும் எனது விருப்பப்படியே டாக்டருக்கு படிக்க, நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தினர். ஆனால், அதையே அடிக்கடி கூறி எனக்கு மனஅழுத்தத்தை கொடுக்கவில்லை. அதேபோல் பள்ளி ஆசிரியர்களும், எனக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்கவில்லை. அதேநேரம் பாடங்கள் தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் உடனே கேளுங்கள் என்று கூறுவார்கள். எனவே, நான் மிகவும் இயல்பாகவே படித்தேன். ‘தினத்தந்தி’ வினா-விடை புத்தகம் மேலும் தேர்வுக்கு முன்பு வாரந்தோறும் வெளிவந்த ‘தினத்தந்தி’யின் வினா-விடை புத்தகத்தை பள்ளி முதல்வர் சிவராமகிருஷ்ணன் வாங்கி வந்து, அதில் வந்துள்ள வினாக்களை கொடுத்து எழுத சொல்வார். அது தேர்வில் எனக்கு அதிக மதிப்பெண்கள் பெற மிகவும் உதவியாக இருந்தது. அதேபோல் பொதுத்தேர்வுக்கு முன்பு வரை தினமும் தேர்வுகள் வைத்து, தவறுகளை ஆசிரியர்கள் திருத்தினர். ஒவ்வொரு நாளும் வகுப்பில் நடத்தும் பாடங்களை தவறாமல் படித்து முடித்து விடுவேன். பாடத்தில் ஏதேனும் புரியவில்லை என்றால் மனப்பாடம் செய்ய மாட்டேன். புரியாத பாடப்பகுதியை ஆசிரியர்களிடம் கேட்டு புரிந்து கொண்டு படிப்பேன். பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்ததால் என்னால் சாதிக்க முடிந்தது. இரவில் விரைவில் தூங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து படிப்பேன். டாக்டர் ஆவேன் இதனால் பாடங்கள் மனதில் நன்றாக பதிந்துவிடும். இதுபோன்ற காரணங்களால் தான் அதிக அளவில் மதிப்பெண்களை பெற முடிந்தது. மாநில அளவில் முதலிடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ், உயிரியல் எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள் ஆகும். எதிர்காலத்தில் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராவேன். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

TRB