Friday, 27 May 2016

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. ஒரே நாளில் 6,123 பேர் விண்ணப் பங்களை பெற்றுச் சென்றனர். மருத்துவ படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது. 2016-2017 கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்  தொடங் கியது.
குறிப்பாக சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத் துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத் துவ கல்லூரி, அரசினர் தோட்டத் தில் உள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பல் மருத் துவ கல்லூரி ஆகிய 5 இடங்களி லும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. மாணவ, மாணவி கள் பெற்றோருடன் ஆர்வமாக வந்து நேரில் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப் பிக்க வரும் ஜூன் 7-ம் தேதி கடைசியாகும். இதுபற்றி மாணவர்கள் கூறும் போது, “ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்களை பெறலாம். ஆனால் அவற்றை நேரில் பெறும்போது நமக்கு இருக்கும் சில சந்தேகங்களை இங்குள்ள அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். மேலும் இங்கு வந்து விண்ணப்பங்களை நேரில் பெற்றுச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றனர். இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் ஆர்.விமலா கூறும்போது, “முதல் நாளில் மட்டும் 6,123 பேர் விண்ணப்பங்களை பெற் றுச் சென்றுள்ளனர். சென்னையில் மட்டும் 1,794 பேர் விண்ணப் பித்துள்ளனர். மருத்துவ படிப்புக் கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ம் தேதி தொடங்குகிறது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடிப்படையில் நடைபெறும். மேலும், மாண வர்களின் சந்தேகங்களை தீர்க்க விண்ணப்பம் வழங்கும் இடங்களில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.



No comments:

TRB