Tuesday, 31 May 2016

ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆதி திராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 
ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை யின்கீழ் 24 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 2016-17-ம் கல்வியாண்டில் புதிதாக மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
விண்ணப்பதாரரின் பெற்றோர் களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு இருப்பிடம், உணவு வசதி இலவசமாக செய்து தரப்படும். இவ்விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் அவரவர் பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங் களுக்கு அருகில் உள்ள ஆதிதிரா விடர் நல விடுதிகளின் காப்பாளர் களிடமிருந்து விடுதி சேர்க்கை விண்ணப்ப படிவத்தை பள்ளி விடுதிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி (நாளை) முதல், கல்லூரி விடுதிகளில் கல்லூரி திறக்கும் நாளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தில் கோரியுள்ள ஆவணங்களுடன் 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், தங்களது குடும்ப அட்டை நகல், விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியரது பெயரில் தேசிய உடைமை ஆக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டதற்கான வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை இருப்பின் அதன் நகல் ஆகிய வற்றில் சுய சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்த விண் ணப்பத்தில் பள்ளி தலைமையா சிரியர், கல்லூரி முதல்வரின் சான்றொப்பம் பெற்று உரிய சான்றுகளுடன் பள்ளி மாணவ, மாணவியர் ஜூன் 19-ம் தேதிக் குள்ளும், கல்லூரி மாணவ, மாண வியர் வரும் 14-ம் தேதிக்குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாள ரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.


No comments:

TRB