Monday, 23 May 2016

நீங்கள் டாக்டரா.... புதுச்சேரி ஜிப்மரில் வேலை ரெடி...!!

நீங்கள் டாக்டரா.... புதுச்சேரி ஜிப்மரில் வேலை ரெடி...!!
புதுச்சேரி மாநிலத்திலுள்ள உலகப்புகழ்பெற்ற ஜிம்பர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இங்கு மொத்தம் 111 பணியிடங்கள் காலியாகவுள்ளன.
அனஸ்தீசியாலஜி, அனாட்டமி என பல்வேறு பிரிவுகளில் 111 டாக்டர் பணியிடங்கல் காலியாகவுள்ளன. இந்தப் படிப்புகளில் சேர சம்பந்தப்பட்ட பிரிவுகளில் எம்டி, எஸ், டிஎன்பி படிப்புகளைப் படித்திருக்கவேண்டும். வயது 33 முதல் 35-க்குள் இருக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும் (பிற்படுத்தப்பட்ட பிரிவு). எஸ்.சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் டாக்டர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் அதை பிரிண்ட் அவுட் எடுத்து Innovation Centre, Ground Floor, Administrative Block, JIPMER, Puducherry- 06 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://jipmer.edu.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


No comments: