Friday, 27 May 2016

மருத்துவ நுழைவுத்தேர்வு குறித்த அவசர சட்டம் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு . தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய பொது நுழைவுத்தேர்வு மூலம்தான் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த ஆண்டு மட்டும் பொது நுழைவுத்தேர்வு இன்றி மாணவர்களை சேர்க்க வகை செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர சட்டத்தை தடை செய்யக்கோரி மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த்ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதேபோல் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் 3 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தங்களது கருத்தை கேட்க வேண்டும் என்றும், தங்களது கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.மருத்துவ மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்நிலையில், தமிழகம், மகா ராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர் களைச் சேர்க்க தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்தி தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங் களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால், மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசிடம் முறையிடப்பட்டது. இதை யடுத்து, தேசிய நுழைவுத்தேர்வில் இருந்து இந்த ஆண்டு மட்டும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது. இச்சட்டத்துக்கு கடந்த 24-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, மத்திய அரசிதழிலும் பிரசுரிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. நுழைவுத் தேர்வின் இரண்டாம்கட்ட தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை கோரி ஆனந்த் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதிகள் பி.சி.பந்த் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விவேக் தங்க்கா ஆஜராகி வாதிட்டார். இவர் வியாபம் ஊழலை வெளியில் கொண்டு வர காரணமானவர்களில் முக்கியமானவர் என்று கூறப்படு கிறது. ‘உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இது சட்ட விரோதம். எனவே, அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று அவர் வாதிட்டார். சங்கல்ப் அறக்கட்டளை சார்பிலும் அவசர சட்டத்துக்கு எதிராக வாதிடப்பட்டது. மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘அவசர சட்டத்தின்மூலம், விரும்பும் மாநிலங்களுக்கு இந்த கல்வி ஆண்டு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது அதிகார எல்லைக்கு உட்பட்டே இந்த அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் தவறு ஏதும் இல்லை. இம்மனுவை அவசரமாக விசாரிக்கும் அளவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார். இருதரப்பையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த மனு மீது உத்தரவு பிறப்பித்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மாணவர்கள் தெளிவான மனநிலையுடன் முதலில் இரண்டாம்கட்ட தேர்வை எழுதட்டும். அவசர சட்டத்தின் சட்ட அங்கீகாரம் குறித்து கோடை விடுமுறைக்குப் பின் கூடும் நீதிமன்றத்தில் முடிவெடுக்கட்டும்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றம் கடந்த மே 16-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரை கோடை விடுமுறையில் உள்ளது. ஜூன் 29-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழக்கம்போல் செயல்படத் தொடங் கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் மூலம் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், கோவா ஆகியவற்றுக்கு நுழைவுத் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத் தில் நுழைவுத்தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யில் தரவரிசைப் பட்டியல் தயாரிக் கப்பட்டு, அதன்மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சில மாநிலங்களில் மாநில அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில், அவசர சட்டத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகி உள்ளதால், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எங்களது கருத்தைக் கேட்காமல் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங் களுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. புதுடெல்லி, மே.28- மருத்துவ படிப்புகளுக்கு ‘தேசிய தகுதி நுழைவுத்தேர்வு’ என்ற பொது நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. பொது நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு இந்த ஆண்டு முதலே இதை நடைமுறைக்கு கொண்டு வருமாறும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கு ஏற்ப மே மாதம் 1-ந் தேதி பொது நுழைவுத் தேர்வு எழுதாத மாணவர்கள் ஜூலை 24-ந் தேதி நடைபெறும் தேர்வை எழுதலாம் என்றும். அதில் எடுக்கும் மதிப்பெண்களை கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் உள்பட 15 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்று கூறி, மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வை எழுதாத வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தின. அவசர சட்டம் இதைத்தொடர்ந்து மருத்துவ பொது நுழைவுத் தேர்வை இந்த கல்வி ஆண்டில் (2016-17) நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை குழு பரிந்துரை செய்த அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 24-ந் தேதி ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்தின்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்த ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு கிடையாது. சுப்ரீம் கோர்ட்டில் மனு மத்திய அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த் ராய் மற்றும் மருத்துவ மாணவர் சஞ்சீவ் சக்சேனா ஆகியோர் சார்பில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசின் அவசர சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பிரபுல்ல சி.பந்த், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் வினோத் டன்கா நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று முறையிட்டார். அப்போது அவர், ‘‘மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டம் சட்ட விரோதமானது. இது தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவாகும். இதனால் நாடு முழுவதும் மருத்துவ கல்வியை பொறுத்த அளவில் பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும். எனவே, இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு எதிர்ப்பு இதற்கு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தலைபோகிற விஷயம் அல்ல என்றும் எனவே இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:- இது மாணவர்களின் நலன் கருதியே மத்திய அரசு எடுத்த நடவடிக்கை ஆகும். குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சட்டம் அமலில் உள்ளது. அதேபோல, சில மாநிலங்களில் மாணவர்களுக்கான மொழிப்பிரச்சினை, மாறுபட்ட பாடத்திட்டங்கள் போன்ற நடைமுறை பிரச்சினைகளை கருத்தில்கொண்டு இந்த ஆண்டுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. உள்நோக்கம் கிடையாது ஏற்கனவே மே 1-ந் தேதி அன்று நடைபெற்ற பொது நுழைவுத்தேர்வில் 6.5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். மாநில அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மட்டுமே இந்த விலக்கு இந்த ஆண்டுக்கு மட்டும் அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த அவசர சட்டத்தை பிறப்பித்ததில் மத்திய அரசுக்கு உள்நோக்கம் எதுவும் கிடையாது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு முகுல் ரோகத்கி கூறினார். தடை இல்லை இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். நீதிபதிகள் கூறியதாவது:- அவசர சட்டம் என்பது ஒரு முழுமையான சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. அதுவும் மற்றொரு சட்டம் தான். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டம் ஓர் ஆண்டுக்கு மட்டும்தான். இந்த சூழ்நிலையில், மாணவர்கள் மத்தியில் நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. மேலும் இது போன்ற மனுக்களை மிகவும் விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த அவசர சட்டத்தை பொறுத்த அளவில், மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. கோடை விடுமுறை முடிந்ததும் தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர்கள் முறையீடு செய்து கொள்ளலாம். எனவே இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். தமிழக அரசு ‘கேவியட்’ மனு இதற்கிடையே, மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு ‘கேவியட்’ மனு ஒன்றை தாக்கல் செய்தது. தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு அளித்துள்ள மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஏதேனும் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் அந்த விசாரணையில் எங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும். எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக இந்த விஷயத்தில் கோர்ட்டு முடிவு எடுக்கக் கூடாது’ என்று கோரப்பட்டு உள்ளது. இதேபோல் ஏற்கனவே சில மாணவர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.


No comments: