Wednesday, 29 June 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக அளவு உயர்த்தும்படி அமைச்சரவை செயலர்கள் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக அளவு உயர்த்தும்படி அமைச்சரவை செயலர்கள் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர் கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைய உள்ளனர். மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் ஊதி யத்தை உயர்த்த 7வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக் கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படை யில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத் துள்ளது. பி.கே.சின்ஹா தலைமையி லான அமைச்சரவை செயலர்கள் குழு, மத்திய அரசு ஊழியர் களுக்கு மொத்தமாக 23.55 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என பரிந்துரைத் துள்ளது. ரூ.7 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாகவும், ரூ.90 ஆயிரமாக உள்ள அதிகபட்ச ஊதியத்தை ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தலாம் என்ற 7-வது ஊதிய குழுவின் பரிந் துரையையும் அமைச்சரவை செயலர்கள் குழு திருத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சமாக ரூ.23,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமாகவும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த பரிந் துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதன்பின் புதிய ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதி யதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடையவுள்ளனர். ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதால் மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும். -


No comments: