Tuesday, 14 June 2016

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை துணைவேந்தர் பி.வணங்காமுடிதொடங்கிவைத்தார்.

சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை துணைவேந்தர் பி.வணங்காமுடி விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் சென்னை, செங்கல் பட்டு. வேலூர், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரி கள் உள்ளன. இவற்றில் 5 ஆண்டு பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் 1,052 இடங்களும், 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் 1,262 இடங்களும் இருக்கின்றன. 5 ஆண்டு படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும், 3 ஆண்டு படிப்புக்கு பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) 5 ஆண்டு, 3 ஆண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஜூன் 13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித் திருந்தது. விண்ணப்ப விநியோகத்தை சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் தில் துணைவேந்தர் பி.வணங்காமுடி தொடங்கிவைத்தார். சட்டப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.500. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ.250. கட்டணம் செலுத்துவதற்கான வங்கிச் செலானை அரசு சட்டக் கல்லூரியிலோ அல்லது பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) இருந்து பதி விறக்கம் செய்தோ பெறலாம். அந்த செலானை இந்தியன் வங்கிக் கிளையில் கொடுத்து பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தப்பட்ட செலான் பிரதியை அரசு சட்டக் கல் லூரியில் கொடுத்து விண்ணப்பங் களைப் பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டு படிப்புக்கான விண்ணப்பங்களை ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள்ளும், 3 ஆண்டு படிப்புக்கான விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். 5 சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 15-ம் தேதி வாக்கில் வெளியிடப்படும் என்று துணைவேந்தர் வணங்காமுடி நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.


No comments: