Friday, July 01, 2016

பொது அறிவு

பொது அறிவு சோதனை
1) 2016-ம் ஆண்டு நடைபெற்ற ‘கல்ப் ஏர் பக்ரைன் கிராண்ட் பிரி’ கார் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் யார்?
2) இந்தியாவின் மிதக்கும் தபால் நிலையம் முதன்முதலாக எங்கு அமைக்கப்பட்டது?
3) ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த சகோதரர்கள் ருடால்ப் மற்றும் அடால்ப் டஸ்ஸல்லர்ஸ் இடையே பிரச்சினை ஏற்பட்ட போது அவர்கள் குடும்பம் நிர்வகித்து வந்த காலணிகள் தயாரிக்கும் நிறுவனம் இரண்டாக பிரிந்தது. அப்போது உருவான புகழ்பெற்ற அந்த காலணிகள் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் என்ன?
4) இந்தியாவின் முதலாவது அதிவேக ரெயிலான காதிமான் எக்ஸ்பிரஸ் ரெயிலின் அதிகபட்ச வேகம் எவ்வளவு?
5) இதுவரை நடந்த உலக கோப்பை கபடி சாம்பியன் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி எது?
6) தனி நபர் போக்குவரத்து வாகனம் (மெட்ரினோ பாட் புராஜக்ட்) பயன்படுத்தும் திட்டம் இந்தியாவில் எந்த நகரில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது?
7) நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை முதன்முதலில் கண்டுபிடித்த இந்திய செயற்கைகோளின் பெயர் என்ன?
8) 2016-ம் ஆண்டுக்கான ‘ஜி-7’ நாடுகள் மாநாட்டை எந்த நாடு நடத்தியது?
9) ஐ.நா சபையின் தலைமையகத்தில் 13.4.2016 அன்று யாருடைய பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது?
10) மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாளை தனது நாட்டின் தேசிய அறிவியல் தினமாக அறிவித்த நாடு எது?
விடைகள்
1) ஜெர்மனி நாட்டைச்சேர்ந்த நிகோ ரோஸ்பெர்க்.
2) ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரி.
3) அடிடாஸ் மற்றும் பூமா.
4) மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம்.
5) இந்தியா
6) அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான்
7) இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தின் சந்திரயான்-1 செயற்கைகோள்
8) ஜப்பான் (26-27 மே).
9) சட்ட மேதை அம்பேத்கார்
10) சுவிட்சர்லாந்து


No comments:

Popular Posts