Saturday, 28 January 2017

சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்

சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம் | சிபிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை ஏற்கெனவே சிபிஎஸ்இ வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு தேதியில் நேற்று முன்தினம் சிறு மாற்றங்களை சிபிஎஸ்இ செய்துள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிகிறது. 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதி முடிகிறது. இரு வகுப்பு தேர்வுகளிலும் 7 பாடங்களுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட அட்டவணையின் படி, 10-ம் வகுப்பு தேர்வில் மார்ச் 10-ம் தேதி நடக்க இருந்த தமிழ் மொழிப் பாடத் தேர்வு 18-ம் தேதிக்கும், 23-ம் தேதி நடக்க இருந்த குருங்க் மொழிப்பாடத் தேர்வு மார்ச் 10-ம் தேதிக்கும், 15-ம் தேதி நடைபெற இருந்த தேசிய மாணவர் படை தேர்வு 23-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், 12-ம் வகுப்பு தேர்வில், ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற இருந்த நாடகவியல் பாடம் மற்றும் தங்குல் கலாச்சார பாடத் தேர்வுகள், 10-ம் தேதிக்கும், 10-ம் தேதி நடைபெற இருந்த உடற்கல்வித் தேர்வு, 12-ம் தேதிக்கும், 12-ம் தேதி நடைபெற இருந்த சமூகவியல் தேர்வு 20-ம் தேதிக்கும், 29-ம் தேதி நடைபெற இருந்த உணவு சேவை-2 தேர்வு 26-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிராகரிப்பு 12-ம் வகுப்பு உயிரியல் தேர்வும், ஜெஇஇ நுழைவுத் தேர்வும் அடுத்தடுத்து வருவதால், உயிரியல் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அந்த கோரிக்கையை சிபிஎஸ்இ நிராகரித்துள்ளது.

No comments: