Thursday, 23 February 2017

சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் | அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் கடந்த 16 மற்றும் 17-ம் தேதியில் ஆன்லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை 23-ம் தேதி (இன்று வியாழக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு அரசு தேர்வுத் துறையின் இணைதளத்துக்குள் (www.dge.tn.gov.in) சென்று "ஹால் டிக்கெட் டவுன்லோடு" என்ற பகுதியை கிளிக் செய்து அதில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: