30% ஊழியர்களை கூடுதலாக பணிக்கு எடுக்க பிளிப்கார்ட் திட்டம் | இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளது. போட்டி நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல் 600 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கும் முடிவை எடுத்திருக்கும் சூழலில், கூடுதல் பணியாளர்களை எடுக்க பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. பெங்களூரை மையமாக கொண்டு இயங்கி வரும் பிளிப்கார்ட் நிறுவனம் அமேசான் நிறுவனத்தோடு போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் யார் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியைச் சமாளிக்கும் விதமாக அதிகமான ஊழியர்களை இந்த ஆண்டு பணிக்கு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவ னத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நிதின் சேத் கூறியதாவது: இந்த வருடத்தில் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர்களைப் பணிக்கு எடுக்க திட்டமிட்டு வருகிறோம். கடந்த ஆண்டை விட 2017-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலான ஊழியர்களைப் பணிக்கு எடுப்போம் என்று எதிர்பாக்கிறோம். பெரும்பாலும் முன் அனுபவம் உள்ளவர்களைப் பணிக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம். பிளிப்கார்ட் நிறுவனத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் ஊழியர்களை எடுக்க இருக்கிறோம். இவ்வாறு நிதின் சேத் தெரிவித்தார். ஆனால் கடந்த ஆண்டு எவ்வளவு நபர்களை எடுத்தீர்கள், இப்போது கூடுதலாக தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு நிதின் சேத் பதிலளிக்கவில்லை. கடந்த ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் 1,500 ஊழியர்களைப் பணிக்கு எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக 10,000 தற்காலிக ஊழியர்களை பிளிப்கார்ட் நிறுவனம் பணிக்கு எடுத்தது. இவர்கள் பெரும்பாலும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்காக எடுக்கப் பட்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. பிடிஐ எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர்களை எடுக்க திட்டமிட்டு வருகிறோம். முன் அனுபவம் உள்ளவர்களை பணிக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
- READ ALL POST...CLICK HERE...
- PAY COM COLLECTION 2017 DOWNLOAD
- பொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு
- மார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்
- மார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்
- TEACHERS GENERAL COUNSELLING 2017-2018 HELP CENTRE
- PROMOTION PANEL 2017-2018 DOWNLOAD
- MUTUAL TRANSFER ENTRY | VIEW
- TNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு
- TNTET |QP,KEY & STUDY MATERIALS DOWNLOAD.
- தலைப்பு செய்திகள் | Today's Headlines!!!
- MARCH-2017-SSLC-HSC-ANSWER KEY-QP DOWNLOAD
- MARCH-2018-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
- NEET EXAM 2017 NEWS
- IT FORM 2017
- TNSET-2017
- TNPSC ANNUAL PLANNER 2017-2018 DOWNLOAD
- POLICE EXAM-2017
- SBI PROBATIONARY OFFICERS RECRUITMENT 2017
- LAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்
- TNTET EXAM - 2017 NEWS
- KALVISOLAI R.H-2017 | கல்விச்சோலை RH 2017
- Police Recruitment - 2017
- TNPSC-TRB-ONLINE TEST MATERIALS
- ALL LATEST STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- tnpsc study materials,question paper with answers
- DSE | DGE | DEE | G.O | OTHER DOWNLOADS
- Teachers General Counselling 2016-2017
- ALL STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- CLASS 12, 10 | MARCH-2016 | Q.P | KEY ANSWER DOWNLOAD
- LATEST TOP HEADLINES 25 !!! CLICK HERE
- LATEST TOP HEADLINES 200 !!! CLICK HERE
- DSE | DGE | DEE | G.O | LATEST DOWNLOADS
- செய்தித் துளிகள்!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment