Thursday, 2 March 2017

PLUS TWO EXAM-MARCH - 2017 | தேர்வுத்திருவிழா | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் என அனைவருக்கும் எங்களின் இனிய வாழ்த்துகள்.

PLUS TWO EXAM-MARCH - 2017 | தேர்வுத்திருவிழா | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் பிளஸ்-2 தேர்வுகள் | தொடக்கம் 01.03.2017 | முடியும் நாள் 31.03.2017 | 6,550 பள்ளிகள் | 2,427 தேர்வு மையங்கள் | 8,98,763 மாணவமாணவிகள் | 4,17,952 மாணவர் | 4,80,810 மாணவிகள் | 31,843 தனித்தேர்வர்கள் | 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | தேர்வு முடிவு 12.05.2017 | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் என அனைவருக்கும் எங்களின் இனிய வாழ்த்துகள் | பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இத்தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 பேர் எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர். மாணவிகள் 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர். இதைத் தவிர, தனித்தேர்வர்களாக 31,843 பேரும், சிறைக் கைதிகள் 88 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வில் பங்கேற்கின்றனர். இத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,427 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையத்தில் பிட் அடித்தல், காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களை தடுப்பதற்காக 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தேர்வு மைய வளாகத்தில் செல் போன்கள் தடை செய்யப்பட்டுள் ளன. அதையும் மீறி மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்போன் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். தேர்வின்போது பிட் அடித்தல், பார்த்து எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய செயல்களில் ஈடுபட் டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 2 வருடம் சிறை தண்டனை வழங்கப்படும். தேர்வின்போது முறைகேடான செயல்களுக்கு உடந்தையாகவோ, அல்லது அவர்களை ஊக்குவிக் கவோ பள்ளி நிர்வாகம் முயற்சி செய்தால் அந்த தேர்வு மையத்தை ரத்து செய்து பள்ளியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது. டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பார்வையற்ற வர்கள், காதுகேளாதோர், வாய் பேசாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக சொல்வதை எழுதுபவர் நியமனம், கூடுதலாக 1 மணி நேரம் ஆகிய சலுகைகள் இந்த தேர்வில் அளிக்கப்படுகிறது. இதற்காக தேர்வு மையங்களில் போதிய அளவு மேஜை, நாற் காலிகள் இடப்பட்டு மாணவர்களின் தேர்வு எண்கள் எழுதப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், தேர்வு மையங்களில் மின்தடை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க ஜெனரேட்டர் வசதியும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

No comments:

TRB