Tuesday, 18 April 2017

2 ஆயிரத்து 444 பேருக்கு ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணை 21 மாவட்டங்களில் வழங்கப்பட்டது

2 ஆயிரத்து 444 பேருக்கு ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணை 21 மாவட்டங்களில் வழங்கப்பட்டது | 21 மாவட்டங்களில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு 2 ஆயிரத்து 444 பேர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 393 ஆய்வக பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்தப்பட்டு முடிவு கடந்த மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட்டது. சென்னையில் ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறவில்லை. விரைவில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற உள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் யார் யார் சான்றிதழ் சரிபார்க்க வரவேண்டும் என்ற பட்டியல் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒட்டப்பட்டது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கு ஒருவருக்கு 5 பேர் வீதம் அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது. நேற்று 21 மாவட்டங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. முடிவில் பணி நியமன ஆணை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளால் வழங்கப்பட்டது. யார் யாருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்ற விவரம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 2 ஆயிரத்து 444 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இன்று மற்ற மாவட்டங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு 1,678 பேர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:- ஆய்வக உதவியாளர்கள் நியமனம் முழுக்க முழுக்க வெளிப்படையாக நேர்மையாக நடைபெற்றுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல் படி நியமனம் நடைபெற்றுள்ளது. யார் யாருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் விவரம் அனைத்தும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments: