Saturday, 15 April 2017

25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.

25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு | இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) நுழைவு வாயில் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி உத்தரவு பிறப்பித் துள்ளார். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில், நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு வகுப்பு களில் (எல்கேஜி, முதல் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். (சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இது பொருந்தாது). வரும் கல்வி ஆண்டில் (2017-18) 25 சதவீத இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், மாணவர் சேர்க் கைக்கான ஆன்லைன் வசதி ஏற்பாடுகள், சேர்க்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய நடை முறைகள் தொடர்பாக மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங் களுக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை அலுவலகங்களில் இதற்கு தேவையான ஏற்பாடு களைச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பம் பெறப் பட்டால் உடனடியாக ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும். ஒவ் வொரு தனியார் பள்ளியிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயிக் கப்பட்டுள்ள இடங்களைக் குறிப்பிட்டு அதற்கான விண்ணப் பங்களை வரவேற்பது குறித்து பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர் விவரம், தகுதியில்லாத விண்ணப் பதாரர் விவரம், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகிய விவரங்கள் பள்ளி தகவல் பலகையில் மே 22-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதல் விண்ணப்பங்கள் வந்திருந்தால் மே 23-ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்ய வேண்டும். விண் ணப்பம் குறைவாக இருந்தால், தகுதியான அனைத்து விண்ணப் பங்களுக்கும் சேர்க்கை வழங்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப் பங்கள் தொடர்பாக பெற்றோரிட மிருந்து கோரிக்கை ஏதும் வந்தால், குலுக்கல் நடைபெறும் நாளுக்கு முன்னர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண் ணப்ப எண்ணுடன் பள்ளி தகவல் பலகையில் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் கொண்ட காத்திருப்பு பட்டியல் மே 24-ம் தேதி வெளியிட வேண்டும். தேர்வான குழந்தைகள் மே 29-ம் தேதிக்குள் பள்ளியில் சேர்க்கப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும். அவர்களிடமிருந்து கல்விக்கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. 25 சதவீத இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் பள்ளியின் பிரதான நுழைவுவாயிலில் பொதுமக்க ளுக்கு நன்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 26 ஆயிரம் இடம் தமிழகத்தில் ஏறத்தாழ 9 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதில் சிறுபான்மையினர் சுயநிதி பள்ளிகளும் அடங்கும். சிறுபான்மையினர் அல்லாத சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர ஏப்ரல் 20 முதல் மே 28-ம் தேதி வரை ஆன்லைனில் (www.dge.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமிருந்து தனியார் பள்ளிகள் எந்தவிதமான கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இதற்கான கல்விக்கட்டணத்தை (குறிப்பிட்ட பள்ளிக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணம்) அரசு வழங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: