Saturday, 22 April 2017

வெயில் கொளுத்துவதால் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கூடாது பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு

வெயில் கொளுத்துவதால் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கூடாது பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு | வெயில் கொளுத்துவதால், கோடை விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் அதிக வெப்பக்காற்று உரு வாகியுள்ளதாக அறிவித்துள்ளது. வானிலை ஆராய்ச்சி மையத் தின் அறிவுறுத்தலையும், பெற் றோரின் வேண்டுகோளையும் கருத் தில்கொண்டு அனைத்து வகுப்பு களுக்கான தேர்வுகள் முன்கூட் டியே நடத்தப்பட்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி கள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் இதர வாரிய பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21 (இன்று) முதல் கோடை விடு முறை விடப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார். எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளும் இது தொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவர்களின் நலன் கருதி எக்காரணம் கொண்டும் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து வகை பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்குமாறு முதன் மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.

No comments: