Tuesday, 4 April 2017

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு | சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட தேர்வு 2016-ம் வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. முடிவை இணையதளத்தில் ( https://www.ideunom.ac.in/) இன்று இரவு 8 மணி முதல் காணலாம். அதே இணையதளத்திற்கு சென்று தகுதி உடையவர்கள் மறுமதிப்பீட்டுக்கு ஒரு தாளுக்கு ரூ.1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு ஒரு தாளுக்கு ரூ.300 செலுத்தவேண்டும். மறு கூட்டலுக்கும், மறுமதிப்பீட்டுக்கும் நாளை (புதன்கிழமை) முதல் 11-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரி எம்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

No comments: