Wednesday, 17 May 2017

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவோரை விளம்பரப்படுத்த வேண்டாம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் வேண்டுகோள்

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவோரை விளம்பரப்படுத்த வேண்டாம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் வேண்டுகோள் | பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்களை விளம் பரப்படுத்த வேண்டாம் என்று தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், படிப்பில் ஆரோக்கிய மற்ற போட்டிச்சூழலை தவிர்க்கும் வகையிலும் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையை (ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை) பள்ளிக் கல்வித் துறை இந்த ஆண்டுமுதல் கைவிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் கடந்த 11-ம் தேதி வெளியிட்டார். எனினும், ஒருசில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் சிறப்பிடங்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெயர் விவரங் களை புகைப்படத்துடன் நாளிதழ் கள், ஊடகங்களில் விளம்பரப் படுத்துகின்றன. இந்நிலையில், பொதுத்தேர்வு களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெயர் விவரங்களை நாளிதழ்கள், ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கும் (ஐஎம்எஸ்) அவர் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையை கைவிட்டு அர சாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்ட கருத்து களை பள்ளி நிர்வாகங்கள் தவறாமல் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. மாணவர்கள் நலன் கருதி வெளி யிடப்பட்ட அரசாணையின் நோக் கத்தை சிதைக்கும் வகையில் ஒருசில மாணவர்களின் பெயர், புகைப்படத்துடன் நாளிதழ்கள், ஊடகங்களில் செய்திகள், விளம்பரங் கள் வெளியிடுவது போன்ற செயல் பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளி கள் ஆய்வாளர்கள் எடுக்கும் நடவடிக்கை விவரங்களை அறிக்கை யாக அனுப்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையை கைவிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments: