Tuesday, 30 May 2017

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு அறிவிப்பு. 31.5.2017 முதல் 3.6.2017 வரை விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு அறிவிப்பு 31.5.2017 முதல் 3.6.2017 வரை விண்ணப்பிக்க வேண்டும்.| எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தனியார் 'இன்டர்நெட்' மையம் மூலம் விண்ணப்பிக்க இயலாது. மார்ச்-2017 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்கள், வருகை புரியாதவர்களுக்காக வருகிற 28.6.2017 முதல் 6.7.2017 வரை எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள், தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலம் 31.5.2017 முதல் 3.6.2017 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் 'இன்டர்நெட்' மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும், ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகள், தேர்வு மையங்களிலேயே பணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வு எழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது  | DOWNLOAD

No comments: