Wednesday, 17 May 2017

தருமபுரி மாவட்ட தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர்கள் கலந்தாய்வு விவரம் வெளியீடு.

தருமபுரி மாவட்ட தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர்கள் கலந்தாய்வு விவரம் வெளியீடு | இது குறித்து தருமபுரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்  திரு.கா.பழனிசாமி  வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழக அரசு உத்தரவின்படி, தொடக்கக்கல்வித் துறையின் சார்பாக 2017-18 ஆம் ஆண்டிற்கான ஊராட்சி/ நகராட்சி/அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அனைத்து வகையும் இணையதளம் (online) வாயிலாக தருமபுரி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெறுகிறது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள், பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு-மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)- 22.05.2017அன்றும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு – 23.05.2017அன்றும், இடைநிலை ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வு 24.05.2017அன்றும், இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு-ஒன்றியத்திற்குள், இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு-மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)- 25.05.2017 அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டம் விட்டு மாவட்டம் -26.05.2017 அன்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் - 29.05.2017 மற்றும் 30.05.2017 அன்றும் நடைபெறும். கலந்தாய்விற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுநகல் உரிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் மேலொப்பம் பெறப்பட்டு முன்னுரிமை கோரும் அசல் சான்றிதழுடன் உரிய ஆசிரியர்கள் மட்டும் கலந்தாய்வு மையத்தில் கலந்தாய்வு நாளன்று காலை 9.30 மணிக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments: