Wednesday, 26 July 2017

தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு இளைஞர் காவல் படைக்கு 10,500 பேர் நியமனம் | தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற் கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வு வாரியத்தால் 2014-ல் சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 10 ஆயிரத்து 99 நபர்களில், 8 ஆயிரத்து 500 பேர் இரண்டாம் நிலைக் காவலர்களாகத் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு, மேலும் 10 ஆயிரத்து 500 பேர், 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, "தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. இதனை அனைத்து தபால் நிலையங்களிலும் பெற் றுக் கொள்ளலாம். அக்டோபர் 1-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. தேர்வு நாள் நவம்பர் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு? மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்-மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு? மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்-மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி | நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) இருந்து விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாக் கள் தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிறை வேற்றப்பட்டன. இந்த சட்ட மசோ தாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்காக அனுப்பி வைக்கப்பட் டன. அது ஏற்கப்படுகிறதா, நிராகரிக்கப்படுகிறதா என எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சூழலில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முது நிலை மருத்துவப் படிப்புகளுக் கான கலந்தாய்வு நடத்தி முடிக் கப்பட்டது. இதில் அரசு மருத்து வர்களுக்கான 50 சதவீத இடஒதுக் கீடுக்கு பதிலாக, புதிதாக மதிப் பெண் முறை கொண்டுவரப்பட் டது. இதைத் தொடர்ந்து நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், ஏழை, கிரா மப்புற மாணவர்கள் பாதிக்கப் படுவதை தடுக்க எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந் தாய்வை கடந்த 17-ம் தேதி தொடங்க தமிழக அரசு திட்ட மிட்டிருந்தது. கடந்த 14-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிட இருந்த நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி கலந்தாய்வு தொடங்கவில்லை. தரவரிசைப் பட்டியலும் வெளியி டப்படவில்லை. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்த தமிழக அரசு, பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்தது. அதன்படி நேற்று டெல்லி சென்ற முதல்வர் கே.பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு கோரி பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து வலியு றுத்தி வருகின்றனர். இக்கோரிக் கையை வலியுறுத்தி பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அன்புமணி ராமதாஸ் சந்தித் தார். சி.விஜயபாஸ்கர் தலைமையி லான அமைச்சர்கள் குழுவினர், அதிமுக, திமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாயின. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ''நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தால் ஏழை, கிராமப்புற மாணவர்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கிண்டி ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்.

கிண்டி ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம் | கிண்டி ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இரண்டாம் கட்டமாக வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் 14 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். பெண்கள் 14 வயது முதல் வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் அரசு உதவித் தொகையாக ரூ.500 வழங்கப்படும். மேலும், அரசின் இலவச மடிக்கணினி, பாடப்புத்தகம், வரைபடக் கருவிகள், சீருடைகள், மிதிவண்டி, இலவச பஸ் பாஸ் ஆகியனவும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் பெற துணை இயக்குனர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் புதுடெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் (71) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவு கடந்த 20-ம் தேதி வெளியானது. இதில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று புதிய குடியரசுத் தலைவராக தேர்வானார். இந்நிலையில், குடியரசுத் தலைவராக இருந்து வந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்தது. அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரணாப் முகர்ஜியும், ராம்நாத் கோவிந்தும் நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் ராணுவ வீரர்கள் அணி வகுத்து மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வாயிலில் இருவரையும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பாரம்பரிய மரியாதை களுடன் ராம்நாத் கோவிந்த் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பதிவேட்டில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.

ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் | ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) திறந்துவைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு நாளை காலை 10 மணி அளவில் வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார். அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார். 
பிறகு ராமேசுவரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் 'அப்துல்கலாம்-2020' என்ற சாதனை பிரசார வாகனத்தை அவர் கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, அங்கிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் முதல் ராமேசுவரம் வரை 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதேபோல, ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பாம்பன், மண்டபம், ராமேசுவரம் ரெயில் நிலையங்களை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் துணை ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் பார்சல்கள் அனுப்ப தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மட்டுமே முழுமையாக மேற்கொள்ளப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் 'வந்தே மாதரம்' பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு | பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களில் தேசபக்தி பாடலான 'வந்தே மாதரம்' பாடலை பாடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் பங்கேற்ற கே.வீரமணி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாளுக்கான 'டி' டைப் வினாத்தாளில் கேள்வி எண் 107-ல் 'வந்தே மாதரம்' என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால் 'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. அனைத்து பாடப்புத்தகங்களிலும் வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால் இந்த தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவனாக அறிவிக்க வேண்டும். அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். அட்வகேட் ஜெனரல் விளக்கம் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன், இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வக்கீல்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இந்த பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? என்பதற்கு ஆதாரங்களுடன், இந்த ஐகோர்ட்டுக்கு உதவலாம் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி ஆஜராகி, 'வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல்' என்று விளக்கம் அளித்தார். ஐகோர்ட்டு வக்கீல்கள் எஸ்.சுஜாதா, ஏ.எஸ்.பிலால், அண்ணாத்துரை ஆகியோர் இது சமஸ்கிருத பாடல் அல்ல. வங்கமொழியில் எழுதப்பட்ட பாடல் என்று ஆதாரங்களுடன் வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.வி.முரளிதரன்... DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி 22-ந் தேதி நடக்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி 22-ந் தேதி நடக்கிறது | மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 22-ந் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த 'ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்ட முடிவில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் அ.மாயவன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க தாமதமானால் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசு அமைத்துள்ள குழு தீர்வுகாணாமல் காலநீட்டிப்பு செய்து வருகிறது. இதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆகஸ்டு 5-ந் தேதி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்துள்ளோம். அதைத்தொடர்ந்து 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம். அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TUFIDCO RECRUITMENT 2017 | TUFIDCO RECRUITS COMPANY SECRETARY | NO OF POST 1 | LAST DATE 09..08.2017


>>>>>>>
§DATE OF NOTIFICATION20.07.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:OFFLINE
§WEBSITE:---
§NAME OF THE POST:COMPANY SECRETARY
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:3
§SALARY:-
§SELECTION PROCEDURE:MERIT
§LAST DATE:09.08.2017
§DATE OF EXAMINATION:NIL
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க அவசர சட்டம் - தமிழக அரசு தீவிர ஆலோசனை.

தமிழகத்துக்கு 'நீட்' தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க அவசர சட்டம் தமிழக அரசு தீவிர ஆலோசனை | 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதற்காக அவசர சட்டம் கொண்டு வருவதற்கான தீவிர ஆலோசனையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. மருத்துவக் கல்வி இடங்களை 'நீட்' தேர்வு மூலம் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், இந்தத் தேர்வினால் தமிழகத்தின் கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலருக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காத சூழ்நிலை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சட்ட சபையில் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கும் சட்டத்தை ஏகமனதாக சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதியிடம் இந்த சட்டமசோதா கொண்டு செல்லப்பட்டு, அதில் அவர் கையெழுத்திட்ட பிறகுதான் அது சட்டமாக்கப்படும். இதனிடையே, இந்த ஆண்டுக்காக 'நீட்' தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. ஆனாலும், மாநிலப் பாடப் பிரிவில் படித்த மாணவர்கள் 85 சதவீதம் பேருக்கு மருத்துவக் கல்வி இடம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. 'நீட்' தேர்வு மூலம் தமிழக மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை நீக்க அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. சட்டரீதியாக கதவு அடைக்கப்பட்டதை அடுத்து, 'நீட்' தொடர்பான சட்ட மசோதாவுக்கு உயிர்கொடுக் கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது. 'நீட்' சட்டமசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து வருகின்றனர். சில அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 'நீட்' பற்றி தமிழகத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள், "இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்" என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், 'நீட்' தேர்வில் இருந்து தற்காலிக விலக்குபெறும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முன்வைத்துள்ள போதிலும், ஒரு ஆண்டுக்காவது 'நீட்' தேர்வில் இருந்து விலக்குபெற மாநில அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா?, அதற்கேற்ற அவசர சட்டத்தை கொண்டுவர முடியுமா?, அந்த அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? ஆகிய கேள்விகளை முன்வைத்து சட்டரீதியான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, 'சட்டரீதியான ஆலோசனை நடப்பது உண்மை என்றாலும், அவசர சட்டம் தொடர்பாக இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை' என்று கூறப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 July 2017

பள்ளிக் கல்வித்துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

பள்ளிக் கல்வித்துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் வகையில், கல்வித் துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு நடுநிலைப் பள்ளிகளில், முதல் கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில், ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையிலும், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும், ஒன்றிய மற்றும் நகராட்சி அளவில் பயிற்சி மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கப்படும். எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

மின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்ய முடிவு | தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மின் வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து வரு கிறது. ஊழியர்களின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி 325 உதவி பொறி யாளர்கள், 300 தொழில்நுட்ப உதவி யாளர்கள், 250 இளநிலை உதவி யாளர்கள், 400 உதவியாளர்கள், 300 கணக்கீட்டாளர்கள் என, 1,925 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்டார். இந்நிலையில், முதற்கட்டமாக 250 இளநிலை உதவியாளர்கள் - கணக்கு, 300 தொழில்நுட்ப உதவியாளர்கள், 400 உதவியாளர் கள் என 950 காலி பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பு வதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு 28-ந்தேதி நடக்கிறது

மீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு 28-ந்தேதி நடக்கிறது | தமிழ்நாடு மீன்வள சார்நிலைப்பணியில் அடங்கிய மீன்வள உதவி ஆய்வாளர் (12 காலிப்பணியிடங்கள்) மற்றும் முதலாள் (கடல் சார்ந்தது) (4 காலிப்பணியிடங்கள்) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் 1,529 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 37 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விவரம் தேர்வாணைய இணைய தளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 28-ந்தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த தகவல் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS TWO RESULT | பிளஸ்-2 சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு இன்று (25.07.2017) வெளியாகிறது.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று வெளியீடு சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் | பிளஸ்-2 சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது. இன்று பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 27 மற்றும் 28-ந் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்   DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் நாளை முதல் (25.07.2017 )வினியோகம். பெயரில் திருத்தம் செய்ய 4-ந் தேதி கடைசி நாள்

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் நாளை முதல் (25.07.2017 )வினியோகம் பெயரில் திருத்தம் செய்ய 4-ந் தேதி கடைசி நாள் | எஸ்.எஸ்.எல்.சி. மதிப் பெண் சான்றிதழ் நாளை முதல் பள்ளிக்கூடங்களில் வினியோகிக்கப்படும். பெயரில் ஏதேனும் தவறு இருந்தால் திருத்தம் மேற்கொள்வதற்காக விண்ணப்பிக்க 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். இது குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதிய மாணவ- மாணவிகளுக்கு நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தமது மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் பெயர் முதன் முறையாக தமிழில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. பெயரில் ஏதேனும் தவறு இருந்தால் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று, பெயரில் திருத்தம் கோரும் கோரிக்கை கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் நாளை முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதிக்குள் அளிக்கலாம். திருத்தங்கள் கோரும் மாணவ-மாணவிகளிடம் இருந்து விண்ணப்பத்தை பெறவும், திருத்தங்களை இணையதளம் வழியாக அரசுத்தேர்வு துறைக்கு அனுப்பவும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்களை அடுத்த மாதம் 21-ந் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். புதிய மதிப்பெண் சான்றிதழை பெறும்போது ஏற்கனவே பெற்ற பழைய அசல் மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் பெறக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் பெறக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு | 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'மருத்துவப் படிப்புக்காக நாடு முழுவதும் 'நீட்' தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக சட்டசபையில் ஒரு மனதாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தப் பதிலும் இல்லை. அந்த கோப்புகள் தற்போது எங்கு உள்ளது என்பதும் தெரியாமல் உள்ளது. எனவே, 'நீட்' தேர்வுக்கான அந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெறும் நடைமுறைகளை விரைவுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விடுதலை, 'தமிழக அரசு இயற்றியுள்ள சட்ட மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் கிடைக்காததால் தமிழக மாணவர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளனர். தமிழக சட்டசபையில் இயற்றியுள்ள சட்ட மசோதா ஒப்புதலுக்காக கடந்த பிப்ரவரி மாதமே அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இன்னும் ஜனாதிபதி அலுவலகத்தை அது சென்றடையவில்லை' என்று வாதிட்டார். இதை கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 24 July 2017

பொறியியல் கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?

பொறியியல் கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்வது எப்படி? | பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் குறைந்து வருகிறது என்று பொது வாக சொல்லப்பட்டாலும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை என்னவோ ஆண்டுதோறும் கூடிக்கொண்டுதான் போகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு கூடுதலாக 6 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்ததாக உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் கூறியிருக்கிறார். எனவே, கலை அறிவியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். அதே நேரத்தில் பொறியியல் படிப்பு மீதான ஈர்ப்பு குறைந்துவிடவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்பில் 2 லட்சத்து 61 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 500 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஒற்றைச்சாளர முறை யின்படி, மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் அனுப்ப தேவை யில்லை. ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். கலந்தாய்வு மூலம் தங்களுக்கு விருப்பமான கல்லூரியை, பிடித்தமான பாடப்பிரிவை தேர்வுசெய்துகொள்ளலாம். எதற்கு முக்கியத்துவம்? பொறியியல் சேர விரும்பும் மாணவர்களின் முதல் விருப்பமாக இருப்பது அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள்தான். அதிலும் முதல் இடம் கிண்டி பொறியியல் கல்லூரிதான். அதன்பிறகே, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம் பேட்டை எம்ஐடி, அதைத்தொடர்ந்து, அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பின்னர் புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள். பெரும்பாலும் இந்த வரிசையில்தான் பெரும்பாலான மாணவ-மாணவிகள் கல்லூரியை தேர்வுசெய்வது வழக்கம். இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கியது. தொழிற் கல்வி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் உள் ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்கள், விளை யாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், அகாடமிக் எனப்படும் பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 5 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை தேர்வுசெய்தனர். அதிலும், ஒருவரை தவிர மற்ற 9 பேரும் கிண்டி பொறியியல் கல்லூரியையே தேர்வுசெய்தனர். கலந்தாய்வில் பிடித்தமான கல்லூரியை, பிடித்தமான பாடப்பிரிவை தேர்வுசெய்வது என்பது முக்கியமான ஒன்று. பொதுவாக, பொறி யியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் மனதில் தோன்றும் முக்கிய கேள்வி, முதலில் கல்லூரியை தேர்வுசெய்துவிட்டு அதன்பிறகு பாடப்பிரிவை தேர்வு செய்வதா அல்லது முதலில் பாடப்பிரிவை தேர்வுசெய்துவிட்டு அதன்பிறகு கல்லூரியை தேர்வு செய்வதா என்பதுதான். இதில் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும்.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.


1. உடல்உறுப்பு தானத்தில் கின்னஸ் சாதனை படைத்த இந்திய நகரம் எது?
2. இந்தியாவில் எங்கு, முதல் தானியங்கி வானிலை மையம் திறக்கப்பட்டு உள்ளது?
3. எந்த நாடு தனக்கென தனி எழுத்துரு (பாண்ட்) உருவாக்கிக் கொண்ட முதல் நாடு என்ற பெருமை பெற்றுள்ளது?
4. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?
5. இந்திய பொது கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
6. அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் 'மாற்றங்களை உருவாக்கும் சிறந்த முதல்மந்திரி' விருது பெற்றவர் யார்?
7. சிலி ஓபன், சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆன இந்திய விளையாட்டு வீரர் யார்?
8. எந்த இரு நாடுகள், 2020-ல் நிலவில் குடியிருப்பை உருவாக்க தீர்மானித்துள்ளன?
9. ஜூரி ரெமி சிறப்பு விருது பெற்ற படம் எது?
10. 2017-க்கான அவ்வையார் விருது பெற்ற சமூக சேவகர் யார்?
11. இந்தியாவிலேயே உயரமான தேசிய கொடி கம்பம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
12. எங்கு பசுமாடுகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது?
13. யாருடைய ஆயிரமாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக பிரதமர் மோடி சிறப்பு ஸ்டாம்ப் வெளியிட்டார்?
14. ஈபில் டவரைவிட உயரமான ரெயில்வே பாலம் ஒன்று இந்தியாவில் அமைய உள்ளது, அது எங்கு அமைக்கப்படுகிறது?
15. நிதி ஆண்டின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்றி அமைத்த முதல் மாநிலம் எது?
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது

தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது | இந்த ஆண்டு தேசிய கட்டிடக்கலை திறனறிவு தேர்வில் (நடா 2017) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, கட்டிடக்கலை என்ஜினீயரிங் பாடப்பிரிவுக்கு கட்டிடக்கலை குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட குறைவாக உள்ளது. இதை சரிசெய்ய இந்த கல்வியாண்டில் புதிதாக தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு ஒன்றினை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி நடக்கிறது. இதற்கு 'ஆன்-லைன்' மூலம் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மதிப்பெண் அடுத்த மாதம் 18-ந் தேதி வெளியிடப்படும். 19-ந் தேதி மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு செயலாளர் பி.மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘பால விகாஷ்’ திட்டம் மூலம் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்வி சத்திய சாய் சேவா அறக்கட்டளை தலைவர் பெருமிதம்

'பால விகாஷ்' திட்டம் மூலம் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்வி சத்திய சாய் சேவா அறக்கட்டளை தலைவர் பெருமிதம் | 'பால விகாஷ்' திட்டம் மூலம் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படுவதாக சத்திய சாய் சேவா அறக்கட்டளையின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா சென்னையில் கூறினார். ஸ்ரீ சத்திய சாய் சேவா அறக்கட்டளை நிறுவனத்தின் மாநில மாநாடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று நடந்தது. மாநாட்டையொட்டி கருத்தரங்கம் நடந்தது. இதில் அறக்கட்டளை மாநில தலைவர் வரதன், தமிழக மின்வாரிய தலைவர் சாய்குமார், டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் வேணுசீனிவாசன், முன்னாள் அகில இந்திய தலைவர் சீனிவாசன் மற்றும் டாக்டர்கள், வக்கீல்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் கலந்துகொண்ட ஸ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனத்தின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா, நிருபர்களிடம் கூறியதாவது:- ஸ்ரீ சத்ய சாய் சேவா அறக்கட்டளை சார்பில் நலிவடைந்த பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் 'ஸ்ரீ சத்திய சாய் வித்யா ஜோதி' என்ற திட்டமும், நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சிகிச்சை அளிக் கும் வகையில் 'நடமாடும் மருத்துவமனை' என்ற திட்டமும் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறோம். இதில் வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 900 பள்ளிகளை மேம்படுத்தி உள்ளோம். 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 'பால விகாஷ்' என்ற கல்வி திட்டத்தை பகவான் பாபா வலியுறுத்தி உள்ளார். அந்த திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் குழந்தைகள் படித்து வருகின்றனர். நடமாடும் மருத்துவமனை கிராமப்புறங்களில் அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லாத இடங் களில், எங்களின் நடமாடும் மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்களை தேடி சென்று உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 16 ஆயிரம் டாக்டர்கள், 45 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் மற்றும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 195 தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ரூ.37 கோடியே 29 லட்சத்து 46 ஆயிரம் செலவிடப்பட்டு உள்ளது. நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தன்னலமற்ற சேவை செய்துவருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

அடுத்த ஆண்டு முதல் 'நீட்' தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல் | அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க நாடு முழுவதும் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்திய போதிலும் அதற்கு பலன் இல்லாமல் போய்விட்டது. நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்தது. ஆனால் ஒவ்வொரு மொழியிலும் கேள்வித்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்தன. இது பாரபட்சமானது என்றும் தமிழில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், சில மொழிகளில் கேள்வித்தாள் எளிமையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக கோர்ட்டுகளில் வழக்கும் தொடரப்பட்டது. என்றாலும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் இந்த பிரச்சினை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளிக்கையில், இனி (அடுத்த ஆண்டு முதல்) நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றார். அதாவது, ஆங்கில கேள்வித்தாளின் மொழி பெயர்ப்பாகத்தான் பிற மொழிகளின் கேள்வித்தாள்கள் இருக்கும் என்று அவர் கூறினார். பொறியியல் படிப்புகளுக்கும் இதேபோல் தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா? என்று கேட்டதற்கு, அதுபற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், ஆனால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் 250 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ரூ.7,500 மாத சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 250 அரசு பள்ளிகளில் ரூ.7,500 மாத சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் 250 அரசு பள்ளிகளில் ரூ.7,500 மாத சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கருத்துக்கூற விரும்பவில்லை தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளனர். ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பொது தேர்வுகளை மாணவ-மாணவிகள் எதிர்கொள்ளும் அளவுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சியும் அளிக்கப்படும். தமிழகத்தில் 250 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். இவர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்த பின்னர் நிரந்தரம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பற்றி நிருபர்கள் கேட்டபோது, அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். DOWNLOAD  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 23 July 2017

அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அறிமுகம் டிசம்பர் முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு

Image by FlamingText.com
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அறிமுகம் டிசம்பர் முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு | ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டு டிசம்பர் முதல் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகைப் பதிவை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் முடிந்து பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், மத்திய அரசு ஊழியர்கள் பணியில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கணினி மயமாக்கலை அதிகரித்ததுடன், மத்திய அரசு ஊழி்யர்கள் அலுவலகத்துக்கு வரும் நேரத்தை முறைப்படுத்தினார். இதற்காக நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 'விரல் ரேகை பதிவு'- பயோ மெட்ரிக் முறை அமலாகியது. இந்த நடவடிக்கையினால், தற்போது இணையதளம் மூலம் அரசு ஊழியர்கள் வருகை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தலைமைச் செயலகம் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகத்திலும் இந்த வருகைப்பதிவு மேலாண்மை இல்லை. அரசு ஊழியர்கள் காலை 9.45 முதல் 10 மணிக்குள் வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு காலையில் 10.10 வரை சலுகை அளிக்கப்படுகிறது. மாதம் 2 நாட்கள் தலா ஒரு மணி நேரம் 'பெர்மிஷன்' அளிக்கப்படுகிறது. காலம்தாழ்த்தி வந்தால் பெர்மிஷனில் கழித்துக் கொள்ளலாம் அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும். ஆசிரியர்களைப் பொறுத்த வரை காலை 9.20 முதல் 4.10 வரை பணி நேரம். அரசு ஊழியர்களைப் போல் மற்ற சலுகைகளும் ஆசிரியர்களுக்கு உண்டு. விடுப்பு விஷயத்தில் மட்டும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மாற்றம் உண்டு. ஆனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் குறிப்பிட்ட சதவீதத் தினர் இந்த பணிநேரத்தைப் பின்பற்றுவது இல்லை. ஆசிரியர் கள் தினசரி காலை நேரம் தாழ்த்தி வருவது கண்டறியப்பட்டதால், பள்ளிக் கல்வித் துறை சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, தலைமையாசிரியர் தன் கைபேசியில் இருந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சலுகை நேரத்துக்குள் வந்தவர் கள் பட்டியலை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப் பட்டது. ஆனால், அந்த திட்டத்தை யாரும் பின்பற்றுவதாகத் தெரிய வில்லை. அதே போல், இன்றளவும் 'லெட்ஜர்' கையெழுத்து முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. விரல் ரேகை வருகைப்பதிவு முறையை கொண்டுவர முயற்சிக்கும்போது எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், காலமாற்றம், நிதி நெருக்கடி ஆகியவை தமிழக அரசையும் புதிய மேலாண்மைத் திட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. கணினி மூலம் அரசு ஊழியர்கள் வருகை, ஊதியம் உள்ளிட்ட பிற சேவைகளை கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது. வலைதள சம்பளப் பட்டியல் இதற்காக பிரத்யேகமான மென் பொருள் தயாரிக்கப்பட்டு, தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர் கள் தற்போது வலைதள சம்பளப் பட்டியல் மென்பொருள் மூலம், அரசு ஊழியர்களின் சம்பளப் பட்டியலை தயாரித்து வருகின்றனர். இதில், அரசு ஊழியர்கள் சம்பளம், பிற விவரங்கள், பணியில் சேர்ந்த நாள், ஓய்வுவிவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இணைக் கப்படுகின்றன. இதுதவிர, நிதி மேலாண்மைப் பணிகள் சிறப்பாக நடக்க, நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை இணைத்து, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மோலாண்மைத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வருகிறது. இதைச் செயல்படுத்த ஒருங்கிணைப்பாளராக விப்ரோ நிறுவனம் தேர்வு செய்யப்பட் டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக தமிழக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு திட்டத்தில் இரண்டு பயன் என்ற அடிப்படையில், இத்திட்டத் தின் மூலம், அரசின் வரவு, செலவு உள்ளிட்ட விவரங்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பொதுமக் களுக்கு நிதி தொடர்பான சேவைகள் உடனடியாகக் கிடைக்கும். இத்திட்டத்தில் டிஜிட்டல் கையொப்பம், விரல் ரேகை பதிவு மூலம் வருகைப்பதிவை உறுதி செய்தல் போன்ற பாது காப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப் படுகின்றன. இதில் விரல்ரேகை வருகைப்பதிவு டிசம்பர் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அமலாகிறது. இந்த விரல் ரேகை வருகைப் பதிவை, தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலகங்களிலும் அமல்படுத்துவது சிரமம். மத்திய அரசு ஊழியர்களுக்கு திட்ட அமலாக்கப் பணிகள் இல்லை. ஆனால், மாநில வருவாய்த் துறையினர் களப்பணியில் அதிகம் இருப்பார்கள். அவர்களுக்கு விரல் ரேகைப் பதிவு எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வா? சாத்தியமில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்


சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வா? சாத்தியமில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல் | சட்டப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டாலும் தமிழகத்தில் அதற்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு சட்டக் கல்வித் துறை இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.எஸ்.சிவ ஞானம், வி.பவானி சுப்ராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்டோர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினர். இளங்கலை, முதுகலை, சட்ட ஆராய்ச்சி என மொத்தம் 1,350 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விழாவில் பங்கேற்க முடியவில்லை என்பதால் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். விழாவில் நீதிபதி என்.கிருபாகரன் பேசும்போது, ''மோட்டார் வாகன விபத்து மற்றும் குடும்ப நல வழக்குகளில் இளம் வழக்கறிஞர்களாகிய நீங்கள் தயவு செய்து கட்சிக்காரர்களிடம் பங்கு கேட்காதீர்கள். உங்களது ஊதியத்தை மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள். நீதிபதிகளிடம் உரத்த குரலில் வாதம் செய்யுங்கள். வாக்குவாதம் செய்யாதீர்கள். நீங்கள் பேசுவது உங்களுக்காக அல்ல. உங்களை நம்பியுள்ள கட்சிக்காரர்களுக்காக என்பதை மனதில் கொள்ளுங்கள். குடும்ப நல நீதிமன்றங்கள் அதிகரிப்பது சமூகத்துக்கு நல்லதல்ல. நீங்கள் தொழிலில் மட்டுமல்லாது குடும்ப வாழ்விலும் வெற்றி பெற வேண்டும்'' என்றார். அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது: சீர்மிகு சட்டக் கல்லூரியில் உள்ள அனைத்து வசதிகளும் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் ஏற்படுத்தப்படும். 171 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் சைபர் கிரிமினல் லாவும், வேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பும் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் சேமநல நிதி உயர்வு தொடர்பான உத்தரவை விரைவில் முதல்வர் பழனிசாமி பிறப்பிப்பார். ராமநாதபுரம், விழுப்புரம், தருமபுரி ஆகிய இடங்களில் 3 புதிய சட்டக் கல்லூரிகள் இந்த ஆண்டு முதல் செயல்படும். அரசு இணையதளத்தில் தொடர்பு எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இ-மெயில் ஐடி, தொடர்பு எண்கள் என அனைத்தும் உள்ளது. உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியக் கொள்கை. அதை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டாலும் தமிழகத்தில் அதற்கு சாத்தியமில்லை. தனியார் சட்டக் கல்லூரிகளை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் வரும் உத்தரவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அமைச்சர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 22 July 2017

G.O NO:173 DT 18.07.2017 | UPGRADATION OF 100 HIGH SCHOOL TO HIGHER SEC SCHOOL | தமிழகத்தில் 100 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

G.O NO:173 DT 18.07.2017 | UPGRADATION OF 100 HIGH SCHOOL TO HIGHER SEC SCHOOL | தமிழகத்தில் 100 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. G.O 173 - நாள்-18.07.2017-பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் - 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட - பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O NO:174 DT 18.07.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

G.O NO:174 DT 18.07.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -150 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

2019 மார்சுக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதி 8.5 லட்சம் ஆசிரியர்களுக்கு கெடு  | நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. கல்வி உரிமை சட்டத் திருத்த மசோதா 2017 குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் நேற்று கூறியதாவது: கடந்த 2009-ம் ஆண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த 2010 ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி 14 வயதுக்கு உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டது. மேலும் இச்சட்டத்தின்படி ஆசிரியருக் கான கல்வித் தகுதியைப் பெறாதவர்கள் 5 ஆண்டுகளுக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற வேண்டும் என்று கெடு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் சுமார் 6 லட்சம் ஆசிரியர்களும் அரசு பள்ளிகளில் 2.5 லட்சம் ஆசிரியர்களும் போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றுகின்றனர். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத் திருத்த மசோதா 2017-ன்படி வரும் 2019-ம் ஆண்டுக்குள் அவர்கள் அனைவரும் ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Image result for பி.ஆர்க்
பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | இந்த ஆண்டு பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இயக்குநரும், தமிழ் நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு செயலாளருமான பேராசி ரியை பி.மல்லிகா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: இந்த ஆண்டு தேசிய கட்டிடக் கலை திறனறிவுத்தேர்வு (நாட்டா) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, இளங்கலை கட்டிடக்கலை படிப்புக்கான (பி.ஆர்க்.) இடங்களை விடவும் குறைவாக இருக்கிறது. எனவே, தனியார் கல்லூரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, பி.ஆர்க். மாணவர் சேர்க்கையை வரன்முறைப்படுத்தும் குழுவின் வழிகாட்டுதலின்படி, நடப்பு கல்வி ஆண்டில் (2017-2018) புதிதாக தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவுத்தேர்வு (தமிழ்நாடு நாட்டா) என்ற சிறப்புத்தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. திறனறிவுத்தேர்வு மதிப்பெண் எனவே, பி.ஆர்க். படிப்புக்கு இந்த ஆண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் மற்று்ம 2016, 2017 நாட்டா தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த முறையில், அரசு ஒதுக்கீட்டில் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப முடியாத பட்சத்தில் அந்த காலியிடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் ஜெஇஇ-II மதிப்பெண் அடிப்படையிலும், அதன்பிறகும் காலியிடங்கள் இருந்தால் அவை பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நிரப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை வழங்க பிஎப் நிறுவனம் ஏற்பாடு

Image result for ஓய்வூதியம்
ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை வழங்க பிஎப் நிறுவனம் ஏற்பாடு | பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளன்றே ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை வழங்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெறுகின்றனர். இவ்வாறு ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு பல வாரங்கள் ஆன பிறகே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை வழங்க பிஎப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள் ளது. இதன்படி, ஓய்வு பெறும் சம்மந்தப்பட்ட தொழிலாளி, ஓய்வு பெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், முதலாளிகளும் தங்கள் பங்குக்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இதுதொடர்பாக அருகில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்களில் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை, புதுச்சேரிக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கூடுதல் ஆணையர் பி.டி.சின்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அடுத்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடக்காது என்பதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு உயர்கல்வித் துறை அமைச்சர் சூசகம் | அடுத்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடக்காது என்பதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். சென்னை லயோலா ஐகேம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் கே.பி.அன்பழகன் 360 மாணவ-மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார். மேலும், சிறப் பிடம் பெற்ற 11 பேருக்கு பதக்கங்களையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர் களிடையே அமைச்சர் பேசியது: அறிவுத் தேடலில் மாணவர்களுக்கு எப்போதும் ஆர்வம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றிபெற முயற்சி மற்றும் பயிற்சி மிக முக்கியம். வாழ்வில் மேலும் சிறப்படைய பட்டங்கள் உதவும். அதேவேளையில், வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கல்வி பயில்வது. கல்லூரியை விட்டு வெளியில் சென்றாலும், தொடர்ந்து திறமை களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அடிப்படை பண்பு நலன்களை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். பட்டமளிப்பு விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்து வெளியில் வந்த அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "நீட் தேர்வு குறித்து அமைச்சர்கள் மிகத் தெளிவாக ஏற்கனவே தெரிவித்துள்ளனர்" என்றார். தொடர்ந்து, அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வருவதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், காலப்போக்குக்கு தகுந்தாற்போல அனைத்தும் மாறி வருகிறது. 2018-19-ம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு வருகிறது என சொல்கிறார்கள். நாங்கள் அதை வேண்டாம் என சொல்லியுள்ளோம். முதுநிலை பொறியியல் படிப்புக்கு மத்திய அரசு 'கேட்' தேர்வு நடத்துகிறது. நாம் 'டான்செட்' தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகிறோம். அனைத்து மாநிலங்களும் நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்ளும்போது அதில் இருந்து நாம் விலக்கு கோர முடியாது. நீட் தேர்வு வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளோம். அதேபோல, பொறியியல் நுழைவுத் தேர்வு குறித்தும் கோரிக்கை வைத்துள்ளோம். அது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை லயோலா ஐகேம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், மாணவ, மாணவிகளுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பட்டங்களை வழங்கினார். உடன் கல்லூரியின் ரெக்டார் பிரான்சிஸ் ஜெயபதி, இயக்குநர் இக்னாசி ஆரோக்யா, முதல்வர் ஜோஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய பாடத்திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வரும்? அதிகாரிகள் விளக்கம்

Image result for புதிய பாடத்திட்டங்கள்
2-வது நாளாக ஆலோசனை புதிய பாடத்திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வரும்? அதிகாரிகள் விளக்கம் | புதிய பாடத்திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆலோசனை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையினர் புதிய பாடத்திட்டங்களை வடிவமைப்பது தொடர்பான ஆலோசனையை நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடத்தி தொடங்கினார்கள். இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் ஆலோசனை நடந்தது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 22 அறைகளிலும், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 2 அறைகளிலும் என மொத்தம் 24 அறைகளில் இந்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலைத்திட்டம் (கரிகுலம்), பாடத்திட்டம் (சிலபஸ்), பாடநூல்கள் (டெஸ்ட் புக்) வடிவமைப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என்பது தொடர்பாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (புதுடெல்லி), இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் (மைசூரு) உள்பட பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்திருந்த கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் கலைத்திட்டம் எப்படி உருவாக்கப்பட வேண்டும்? அதை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தனி அறையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய அளவிலான கலைத்திட்டத்தின் துறை தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கலைத்திட்டம் உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை வழங்கினார்கள். பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி எவ்வாறு நடைபெறுகிறது? வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் எப்போது நடைமுறைக்கும் வரும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- இந்த ஆலோசனை கூட்டத்தில் பாடவாரியாக கலைத்திட்டத்தை எப்படி உருவாக்குவது? 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை என்னென்ன பாடத்திட்டங்களை கொண்டுவர வேண்டும்? மாணவர்களின் வயதுக்கேற்ப எந்தெந்த பாடங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்? என்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைகள் முடிந்த பிறகு, முதலில் கலைத்திட்டம் வடிவமைக்கப்படும். பின்னர், அந்த கலைத்திட்டம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் 40 நாட்களுக்குள் வெளியிடப்படும். அதை கல்வியாளர்கள் பார்த்து அவர்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். அவர்களுடைய கருத்துகள் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் மாற்றம் கொண்டு வருவோம். அதன்பிறகு, பாடத்திட்டங்கள், பாடநூல்கள் தயாரிக்கப்படும். அடுத்த கல்வியாண்டில் (2018-2019) 1, 6, 9, பிளஸ்-1 ஆகிய வகுப்புகளுக்கும், 2019-2020-ம் கல்வியாண்டில் 2, 7, 10, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கும், 2020-2021-ம் கல்வியாண்டில் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்வு.

குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்வு | 85 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,602 பேர் மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். அவர்களில் 464 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவசமாக படித்தவர்கள். 29 துணை கலெக்டர்கள், 34 காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 85 உயர் பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பித்தனர். முதல்நிலை தேர்வு 32 மையங்களில் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 855 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முதல்நிலை தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த தேர்வில் 4,602 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். மெயின் தேர்வு அக்டோபர் 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடக்கிறது. முடிவு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது. இந்த குரூப்-1 முதல்நிலை தேர்வில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இயங்குகிற மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து மனிதநேய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்மை தேர்வு (மெயின்தேர்வு) பயிற்சி வகுப்புகள் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்கட்ட தேர்வுக்கான நுழைவு சீட்டு ஆகியவற்றுடன் இன்று (சனிக்கிழமை) முதல் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களுக்கும், தேர்வுகள், பாடப்புத்தகங்கள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. விடுதி வசதிகள் தகுதியின் அடிப்படையில் இலவசமாக செய்துதரப்படும். மனிதநேய மையத்தின் மின்அஞ்சல் முகவரி manidhaneyam@gmail.com மற்றும் இணையதள முகவரி www.saidais.com இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே 74 பணியிடங்கள் கொண்ட குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வை நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு நடத்தியது. இந்த தேர்வு முடிவு ஏற்கனவே வெளியிடப்பட்டன. மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடக்க உள்ளது.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE